Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ண்டனின் ‘மேடம் டுஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியக’த்தில் இடம் பிடித்திருக்கிறார்கள் பாகுபலியும் கட்டப்பாவும். உலகம் முழுக்க வெளியாகி, வெற்றிபெற்ற ‘பாகுபலி’ படத்தைக் கௌரவிக்கும் வகையில் இந்த இரு கதாபாத்திரங்களின் சிலைகளையும் காட்சிக்கு வைக்கவிருக்கிறார்கள். இதன்மூலம் `மேடம் டுஸாட்ஸி’ல் மெழுகுச் சிலை நிறுவப்படும் முதல் தமிழ் நடிகர் என்கிற பெருமையை சத்யராஜ் பெற்றுள்ளார். வாழ்த்துகள் கட்டப்பா மாமா அவர்களே!

இன்பாக்ஸ்

ஷாருக்கானின் மகள் சுஹானாகானும் சினிமாவில் நடிக்கத் தயாராகிவிட்டார்! ஆனால், இப்போதைக்குப் படிப்புதான் முக்கியம் என அப்பா கான் ஸ்ட்ரிக்டாகச் சொல்லி யிருக்கிறார். படிப்பு முடிந்ததும் பாலிவுட்டில் நிச்சயமாக என்ட்ரி இருக்கும் என்றும் சொல்லி யிருக்கிறார் அம்மா கௌரி கான்! மகள் கான்

இன்பாக்ஸ்

மிஷ்கினின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சாந்தனு. இந்தப் படத்தில் மிஷ்கினோடு பி.சி.ஸ்ரீராமும் முதன்முறையாகக் கைகோக்கவிருக்கிறார். `நந்தலாலா’ படத்திலேயே சாந்தனுதான் நாயகனாக நடிப்பதாக இருந்தது. அப்போது தவறிப்போன வாய்ப்பு இப்போது கிடைத்திருப்பதில் சாந்தனு செம உற்சாகத்தில் இருக்கிறார். எடுடா மேளம்... அடிடா தாளம்...

லியானாவுக்குத் திருமணமாகிவிட்டதாகச் செய்தி பரவியது. ஆனால், அது பற்றி இலியானா வாயே திறக்கவில்லை. சமீபத்தில் நடந்த பட விழாவொன்றில் அஜய் தேவ்கன் இலியானாவிடம், “உனக்குத் திருமணம் ஆகிடுச்சுன்னு சொல்றாங்களேம்மா?” எனக் கேட்கவும், திருமணம் ஆனதை ஒப்புக்கொண்டிருக்கிறார் இலியானா! வாழ்த்துகள் இலி!

இன்பாக்ஸ்

‘ரேஸ்-2’ படத்துக்குப் பிறகு கவர்ச்சி காட்டாமல், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தருகிற ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ போன்ற படங்களில் நடித்தார் தீபிகா படுகோன். இப்போது மீண்டும் கவர்ச்சிக்கே திரும்பவிருக்கிறாராம். விரைவில் ‘ஹேட் ஸ்டோரி’ மாதிரியான படத்தில் நடிக்கவிருக்கிறாராம். `ரசிகர்கள் என்னை இப்படித்தான் என முத்திரை குத்திவிடக்கூடாது. என்னால் எல்லாவிதமான ரோலையும் ஹேண்டில் செய்ய முடியும்’ எனச் சொல்கிறார். எல்லோரும் இதையேதான் சொல்றாங்க!

இன்பாக்ஸ்

கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்ற டேவிட் பெக்காம் இப்போது கல்லூரி மேடைகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார். கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பெக்காமின் பேச்சு கட்டாயம் இடம்பெறுகிறதாம்! ஆரம்பத்தில் `என்ன பேசுவதென்றே தெரியவில்லை...’ எனத் தயங்கியவர் இப்போது அசராமல் நடிகர் சிவகுமார் போலப் பல மணிநேரம் சொற்பொழிவாற்றிச் சிறப்பிக்கிறாராம். க்யாரே ஸ்பீக்கிங்கா?

இன்பாக்ஸ்

றைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையைப் படமாக்க செம போட்டாபோட்டி பாலிவுட்டில்! ராஜ்குமார் ஹிரானி, நீரஜ் பாண்டே, ஜோயா அக்தர், அஷுதோஷ் கவரிகர் என ஹிட் இயக்குநர்கள் எல்லோருமே ஆர்வம் காட்டி வருகிறார்கள். யார் ‘ஆக்‌ஷன், கட்’ சொல்லப்போகிறார்கள் எனச் சீக்கிரமே தெரிந்துவிடும். மீண்டும் மயிலு!

இன்பாக்ஸ்

சிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் படத்தயாரிப்பில் ஈடுபடப்போகிறார். இதற்காக விவேக்கின் டீம் கதைகேட்டுவருகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ மாதிரியான இளைஞர்களைக் கவரும் கதைகள்தான் வேண்டும் எனக் கேட்கிறார்களாம். அனேகமாக விவேக் ஜெயராமனையே ஹீரோவாக்கும் திட்டம் இருக்கிறதோ என்னவோ? ஏற்கெனவே ‘பாஸ்’ இருக்கிறார்ப்பு!

இன்பாக்ஸ்

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜாக்கிசானும், கிறிஸ் டக்கரும் இணையவிருக்கிறார்கள். ‘ரஷ் ஹவர்’ படத்தின் நான்காம் பாகம் தயாராகவிருக்கிறது. இந்த முறை முந்தைய பாகங்களைவிட ரஷ் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள் இருவரும். வா தல... வா தல!

இன்பாக்ஸ்

சுதந்திரப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் நினைவாக மகனுக்கு ‘ஆசாத் ராவ் கான்’ எனப் பெயரிட்டவர் பாலிவுட் நடிகர் அமீர் கான். தற்போது வாடகைத்தாய் மூலம் இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள அமீரும் மனைவி கிரண் ராவும் முடிவெடுத்திருக்கிறார்கள். `ஆண் குழந்தை என்றால் நான் மிகவும் மதிக்கும் பாபாசாகேப் அம்பேத்கர் பெயரை வைப்பேன். பெண் குழந்தை என்றால் என் அம்மா பெயரான ஜீனத் என வைப்பேன்’ என்றும் சொல்லியிருக்கிறார் அமீர் கான். யுனிக் ஆக்டர்!