Published:Updated:

``என் கேரக்டர்ல விஜய் சேதுபதியைப் பொருத்திப் பார்க்காதீங்க ப்ளீஸ்!" - `வடசென்னை' அமீர்

``என் கேரக்டர்ல விஜய் சேதுபதியைப் பொருத்திப் பார்க்காதீங்க ப்ளீஸ்!" - `வடசென்னை' அமீர்
``என் கேரக்டர்ல விஜய் சேதுபதியைப் பொருத்திப் பார்க்காதீங்க ப்ளீஸ்!" - `வடசென்னை' அமீர்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருக்கும் `வடசென்னை' படம் குறித்துப் பேசியிருக்கிறார், இயக்குநர் அமீர்.

டற்கரையையொட்டியிருக்கக்கூடிய மனிதர்களைப் பற்றிய 30 வருட வாழ்க்கைதான், `வடசென்னை' கதை. அந்த மனிதர்கள் அவங்க இடத்தை ஊர்னுதான் சொல்றாங்க. `குப்பம்'னு சொல்றதில்லை. மற்றவர்கள்தான் `குப்பம்'ங்கிற வார்த்தையைப் பயன்படுத்துறாங்க. அந்த ஊர், ஊருக்காக வாழக்கூடிய மனிதர்கள், அவர்கள் எப்படி அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறார்கள், மனிதர்களுக்கிடையேயான உறவு, அந்த உறவில் இருக்கக்கூடிய விரிசல்... என ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வியலை இந்தப் படம் சொல்லும். இந்த வாழ்க்கையில், நானும் ஒருவன். `ராஜன்' என்ற கேரக்டரில் நடிச்சிருக்கேன்.'' என்கிறார், இயக்குநரும் நடிகருமான அமீர். 

``என் கேரக்டர்ல விஜய் சேதுபதியைப் பொருத்திப் பார்க்காதீங்க ப்ளீஸ்!" - `வடசென்னை' அமீர்

``தனுஷூக்கும் உங்களுக்குமான காட்சிகள் படத்தில் இருக்கா?"

``கிடையாது. அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருமுறைகூட சந்திக்கலை. இந்தப் படத்துக்காக என்னை மொத்தமா ஹேண்டில் பண்ணுனது வெற்றிதான்."  

``விஜய் சேதுபதி ரோலில் அமீர் நடித்தது பற்றி?''

``விஜய் சேதுபதி என்னைவிட சிறப்பாப் பண்ணியிருக்கலாம். ஏன்னா, அவர் பண்பட்ட நடிகர். எனக்கு டைரக்‌ஷன் நல்லா வரும். ராஜன் கேரக்டரை என்னைவிட அவரால சிறப்பாப் பண்ணியிருக்க முடியும். அதுக்காக, படம் பார்க்கிறவங்க தயவுசெஞ்சு என் கேரக்டருக்கு விஜய் சேதுபதியை மனசுல வெச்சுப் பார்க்காதீங்க. இதை வேண்டுகோளா வைக்கறேன். அப்படி ஒரு எண்ணத்தோடதான் பார்ப்பேன்னா, படமே பார்க்காதீங்க. ஏன்னா, விஜய் சேதுபதி ரோலில் அமீர் நடிக்கிறார்னு செய்தி வந்தப்போவே, `இது பாசிட்டிவான விஷயமா எனக்குத் தெரியலை வெற்றி. ஏன்னா, நான் நடிகன் கிடையாது.'னு சொன்னேன்." 

``கீழடி ஆராய்ச்சி குறித்துப் பேசுனீங்க, போராடுனீங்க... இப்பவும் அது தொடருதா?''

``கீழடி ஆய்வைத் தடுப்பது, மத்திய அரசோட சதி. இங்கே இருக்கக்கூடிய வருத்தத்துக்குரிய விஷயம் என்னனா, தமிழ் மண்ணை ஆண்டவர்கள், ஆண்டு கொண்டிருப்பவர்கள் யாருக்கும் தமிழரின் பெருமையும் வரலாறும் தெரியாம இருக்கு. தமிழ் மக்கள் உலகின் மூத்தகுடினு ஆதிமொழி வரலாற்று ஆய்வுகள் சொல்லுது. ஆதிமனிதன் இங்கே வாழ்வதற்கான சான்றுகள், அடையாளங்கள் இருக்கு. சங்ககாலப் பாடல்களில், கீழடி இருக்கு. கீழடியில் கிடைச்சிருக்கும் பொக்கிஷங்களை பெங்களூரு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுபோறாங்க. என் வீட்டுப் புதையலை எடுத்து இன்னொரு வீட்டுல கொடுக்குறாங்க. இங்கே இருக்கிற யாரும் இது நம்ம வீட்டுப் புதையல்னு உணரவே இல்லை. 

நான் கீழடிக்குப் போகும்போது, 55 குழிகள் தோண்டி மூடிக்கிட்டு இருந்தாங்க. விசாரிச்சப்போ, அது ஒரு தனியார் இடம். அரசு கையக்கப்படுத்தவில்லை. அதனால, ஆய்வு நிறுத்தி வைக்கப்படுது. அங்கே கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் பெங்களூருக்குப் போய்க்கிட்டு இருக்கு. ஏன்னு கேட்டா, `இங்கே வைக்க இடம் இல்லை'னு சொல்றாங்க. மறைந்த தலைவர்களுக்கும், முதல்வர்களுக்கும் மணிமண்டபம் கட்டப்படும் இங்கே, அந்தப் பொக்கிஷங்களை வைக்க இடம் இல்லையா?! அதுக்கொரு அருங்காட்சியகம் கட்ட முடியாதா?! தமிழன் வரலாற்றுப் பெருமை மிக்கவன்னு யாருக்கும் தெரிஞ்சுடக் கூடாதுனு, நினைக்குது மத்திய அரசு."

``என் கேரக்டர்ல விஜய் சேதுபதியைப் பொருத்திப் பார்க்காதீங்க ப்ளீஸ்!" - `வடசென்னை' அமீர்

``உங்களைப் பற்றிய மீம்ஸ் எல்லாம் கவனிக்கிறீங்களா?"

``சரி, தவறுனு சொல்றதுக்கில்லை. அதையெல்லாம் ரசிச்சுப் பார்த்து, கடந்து போயிடணும். சில மீம்களை நான் ரசிச்சிருக்கேன்' சில காழ்ப்பு உணர்ச்சியோட இருக்கு. அதைப் பார்க்கும்போது வருத்தமா இருக்கும். சமீபத்தில் என்னைப் பற்றிய மீம் ஒன்றில், சமபாலின உறவு குறித்து நான் பேசிய நேர்காணலில், என்னோட முழுமையடையாத பதிலை வெட்டி எடுத்து, `விலங்குகளுடன் உறவு வைத்துக்கொள்ளச் சொல்கிறார், அமீர்'னு சித்திரிச்சிருந்தாங்க. வருத்தமா இருந்தது." 

அடுத்த கட்டுரைக்கு