சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

கேள்வி

டப்பிடிப்புகள் ரத்து, சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளும் கூடாது என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு இருக்கட்டும். படப்பிடிப்புகளைக் கண்காணிக்கும் இவர்களால், ‘எடிட்டிங் ரூமில் நடக்கும் வேலைகளை எப்படிக் கண்காணிக்க முடியும்?’ என்கிறார், இயக்குநர் ஒருவர். டப்பிங், எடிட்டிங், கிராஃபிக்ஸ்... எனச் சிறிய அறைகளில் நடக்கும் சினிமா வேலைகளை எப்படிக் கண்காணிப்பீர்கள்?

மிஸ்டர் மியாவ்

வைரல்

னக்கென தனி மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி, அறிமுகம் செய்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தன்னைப் பற்றிய செய்திகள், வீடியோக்கள், அறிவிப்புகள் இதில் இடம்பெறும் எனத் தெரிவித்திருக்கும் அவர், ‘‘ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க இந்த மொபைல் அப்ளிகேஷன் உறுதுணையாக இருக்கும்’’ என்கிறார். #RakulpreetApp என்ற ஹேஷ்டாக்கில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, வைரல் ஆக்கியிருக்கிறார்கள் ரசிகர்கள். அப்ளிகேஷனுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ரேட்டிங், 4.7/5.

ஹைலைட்

டப்பிடிப்புகள் ரத்து, புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்ற தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பால், பல படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பிஸி ஷெட்யூலில் நடித்துக்கொண்டிருந்த நடிகர், நடிகைகளுக்கு இதனால் கொஞ்சம் பிரேக் கிடைத்திருக்கிறது. இந்த ரிலாக்ஸ் இடைவேளையைப் பயன்படுத்தி, ஆர்கானிக் ஃபார்ம் ஒன்றை அமைக்கும் பணிகளில் தீவிரமாகியிருக்கிறார் நயன்தாரா.

• ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பைப் பார்த்து ஆச்சர்யமடைந்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷைப் பாராட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல... தான் இயக்கவுள்ள பாலிவுட் படத்தில் நடிக்கவேண்டும் என்றும் ஜி.வி.பிரகாஷிடம் கேட்டிருக்கிறார்.

• ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’ படங்களில் நடித்த நிகிலா விமல் மூன்று மொழிகளில் பிஸி. தமிழில் மூன்று படங்கள், தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா ஒரு படம் எனப் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ‘‘சிபிராஜுடன் இணைந்து நடிக்கும் ‘ரங்கா’ படத்தில் எனக்கு ஹீரோயின் என்ற அடையாளத்தைத் தாண்டி, நல்ல நடிகை என்ற அங்கீகாரமும் கிடைக்கும்’’ என்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கிக்கொண்டிருக்கும் படம் என பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

மிஸ்டர் மியாவ்

• இயக்குநர் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனி, காஸ்ட்யூம் டிசைனராக வலம் வந்தவர். ‘கபாலி’ உள்பட பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றிய நிரஞ்சனி, இப்போது நடிகையாகவும் புரொமோஷன் ஆகிறார். துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நிரஞ்சனிக்கு முக்கிய ரோல்!

மிஸ்டர் மியாவ்

• ட்விட்டரில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களும் ஐஸ்வர்யாவுக்கு லைக்ஸ் குவிக்கிறார்கள்.