தொடர்கள்
Published:Updated:

இது கிராமத்துச் செங்கோல்!

இது கிராமத்துச் செங்கோல்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது கிராமத்துச் செங்கோல்!

நா.சிபிச்சக்கரவர்த்தி, மா.பாண்டியராஜன்

`தொரட்டி’

“கிடைபோட்டு வாழும் சமூகத்துக்கு முக்கிய ஆதாரமே தொரட்டிதான். ஒரு பெரிய கம்பின் முனையில் சிறு அருவா கட்டி வெச்சிருப்பாங்க. உயரத்திலுள்ள குழைகளைப் பறிப்பதற்கும், தாக்க வரும் மிருகங்களிடமிருந்து ஆடுகளைக் காப்பதற்கும் இந்தத் தொரட்டியைத்தான்  பயன்படுத்துவாங்க. ராஜாவுக்கு எப்படிச் செங்கோலோ, அந்த மக்களுக்குத் தொரட்டி அப்படித்தான். ஒருவன் அவனோட தொரட்டியை வேற யாருக்கும் தரமாட்டான். தந்தால் ஆட்டுக்கு உடம்பு சரியில்லாமல் போய்டும் என்பது அவனது நம்பிக்கை.  இந்தக் கதைக்கும், கதைக் களத்துக்கும் ‘தொரட்டி’ என்ற தலைப்புதான் சரியா இருக்கும்னு தோணுச்சு” என்கிறார் அறிமுக இயக்குநர் மாரிமுத்து.

இது கிராமத்துச் செங்கோல்!

“என்ன மாதிரியான படம் இது?”

“கூடா நட்பு கேடாய் முடியும்ன்ற ஒன்லைன்தான் படம். அதை அசலான வாழ்வியலோடு சொல்றோம். துரோகம்தான் படத்தின் மையக்கரு. நண்பர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்கிறார்கள். அந்த வேதனையை, வலியை, படத்தில் அப்படியே கொண்டு வந்திருக்கோம்.”

“நீங்க சொல்ற ஒன்லைனில் பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கே?”

“நிச்சயமாக அந்தப் படங்கள்போல இது இருக்காது.  ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு கதை இருக்கு. அப்படி 1980 காலகட்டத்தில் ராமநாதபுரம் வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உண்மைக் கதை இது. இப்ப விவசாயமே இல்லை. அது சார்ந்த உபதொழில்கள் எல்லாமே அழிஞ்சிட்டு வருது. அப்படி ஒரு தொழில்தான் கிடைபோடுவதும். அந்தத் தொழில் செய்யும் மக்களுடைய வாழ்க்கையை இந்தப் படத்துல அழுத்தமாகப் பதிவு செஞ்சிருக்கோம்.

இது கிராமத்துச் செங்கோல்!

நான் நிறைய பேர்கிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். எல்லோருமே ‘கூப்பிடறேன்’னு சொல்லிட்டு விட்டுட்டாங்க. ஆனா, ஷமன் மித்ரூகிட்ட கதை சொன்னதும் நானே தயாரிச்சு நடிக்கிறேன்னு சொன்னார். எனக்கும் அவர் அந்தக் கேரக்டருக்குக் கச்சிதமா இருப்பார்னு தோணுச்சு. அவரையே நடிக்கவும் வெச்சுட்டோம். ஹீரோயினாக சத்ய கலானு ஒரு புதுப் பொண்ணு நடிச்சிருக்காங்க. இவங்க கூட பல புதுமுகங்களும். ஆறு மாசம் முறையாகப் பயிற்சி கொடுத்துதான் எல்லோரையும் நடிக்கவெச்சோம்.  குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். படத்தில் வர்ற பாடல்களைக் கவிஞர் சினேகன் எழுதியிருக்கார். ஒவ்வொரு பாட்டுக்கும் அவ்வளவு மெனக்கெட்டு 80-களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளால் எழுதியிருக்கார். படம் பாருங்க. நிச்சயம் அந்தக் கிராமத்து மனிதர்களின் புழுதி வாசம் உங்கள்மீதும் வீசும்.”

“தமிழ் சினிமா வேற டிரெண்டுல போய்ட்டு இருக்கும்போது இதுமாதிரியான படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?”

“நம் மண் சார்ந்த படங்கள் எப்போதுமே அவசியம்தான். மக்களும் எப்பவும் அதை ஏற்றுக் கொண்டாடியிருக்காங்க. குற்றாலம் பக்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமம்தான் என் சொந்த ஊர். அங்க ஒரு பருவம் வரும்போது வலசை வரும் பறவைகள் மாதிரி, கிடை போடுபவர்கள் தங்கள் ஆடுகளுடன்  வந்துட்டுப் போவாங்க. அவங்க வரும்போதெல்லாம் நான் அவங்ககூட விளையாடுவேன். அவங்க கிடைச்சோறு பொங்கிச் சாப்பிடுவாங்க. எங்க எல்லோருக்கும் அதைப் பகிர்ந்தும் கொடுப்பாங்க. அவங்க வாழ்க்கை முறை என்னை ஈர்த்தது. அவர்களில் நிறைய கதைசொல்லிகள் இருந்தாங்க. அப்படி ஒரு கதைசொல்லி என்கிட்ட சொன்ன உண்மைக் கதைதான் இது. இங்க சிட்டி சப்ஜெக்ட்டில் நிறைய படங்கள் வருது. பாரதிராஜா சார், பாக்யராஜ் சார், சேரன் சார், அமீர் சாருக்குப் பிறகு திரும்பிப் பார்க்கிற மாதிரி யாருமே கிராமத்துக் கதைக் களங்கள்கொண்ட படங்களை எடுப்பதில்லை. நம்ம ஏன் ஒரு கிராமம் சார்ந்த படத்தை எடுக்கக்கூடாதுனு தோணுச்சு. எடுத்துட்டேன். முக்கியமா இங்க அவசர அவசரமான ஓட்டத்தில் என்ன மாதிரியான வாழ்க்கையைத் தொலைச்சிருக்கோம் என்பதை இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் ஞாபகப்படுத்தும்”

இது கிராமத்துச் செங்கோல்!

நம்பிக்கையோடு கைகுலுக்குகிறார் மாரிமுத்து.

இது கிராமத்துச் செங்கோல்!

‘பேய்ப் பசி’

``இது ஒரு எதார்த்தமான பேய்ப்படம். பொதுவா பேய்ப்படங்களில் பெரும்பாலான காட்சிகள் இருட்டுலதான் நடக்கும். ஆனால், இதில் எல்லாக் காட்சிகளும் வெளிச்சத்தில்தான் நடக்கும். எந்தக் காட்சியிலும் பேய் வராது. ஆனால், எல்லாக் காட்சிகளிலும் பயம் இருக்கும்.” - தன் பேச்சிலேயே பயம் காட்டுகிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.

இது கிராமத்துச் செங்கோல்!

``படிக்கும் காலத்திலேயே கேமரா என் கைக்கு வந்துவிட்டது. நிறைய குறும்படங்கள் எடுத்தேன். பிறகு நலன் குமரசாமியின் அறிமுகம் கிடைத்தது. அவரோடு சேர்ந்து `சூது கவ்வும்’ ஸ்க்ரிப்ட் வேலைபார்த்தேன். தொடர்ந்து நாங்கள் இருவரும் சுந்தர்.சி சாரின் `தீயா வேலை செய்யணும் குமாரு’ படத் திரைக்கதையில் வேலை செய்தோம். தனியா படம் எடுக்கலாமே என்ற எண்ணம் வந்தது.  இப்ப ‘பேய்ப் பசி’ பண்ணிட்டிருக்கேன்.”

இது கிராமத்துச் செங்கோல்!

“ இன்னும் எவ்வளவு பேய்ப்படங்கள்தான் எடுப்பீங்க பாஸ்?”

“நிச்சயமா இது வித்தியாசமா இருக்கும். இதுவரை எந்தப் படமும் ஒட்டுமொத்தமா ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள்ள எடுத்தது இல்லை. ஆனால், ‘பேய்ப்பசி’ ஒட்டுமொத்தப் படமும் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் நடக்கும் கதை. ஒரு ஸ்டோருக்குள் சிலர் நாள் முழுக்க மாட்டிக்கிறாங்க. அங்க என்ன

இது கிராமத்துச் செங்கோல்!

நடக்குது என்பதுதான் படம். இதில் பல காட்சிகளை சிங்கிள் ஷாட்ல எடுத்திருக்கோம். பேய்ப்படங்களில் இப்படிப் பண்ண மாட்டாங்க. குட்டி குட்டியான ஷாட்லதான் பயம் காட்ட முடியும்னு நினைப்பாங்க. ஆனால், ஒரு நீளமான ஷாட்லயும் பயமுறுத்தலாம்னு இந்தப் படத்தில் நிரூபிச்சிருக்கோம். அடுத்து, ஹாரர் படத்துக்கு சவுண்ட் இன்ஜினீயரை வைத்து ஸ்டுடியோவில் வித்தியாசமான சவுண்ட்ஸ் ட்ரை பண்ணுவாங்க. ஆனால், நாங்க லைவ் சவுண்டில்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கோம். இதுவும் புதுசுதான்!”

“முதல் படமே பேய்ப்படமா இருக்கணும்னு நினைச்சுப் பண்றீங்களா?”

``முதல் படம் கண்டிப்பா பேர் சொல்ற படமா இருக்கணும்னுதான் எல்லோரும் ஆசைப்படுவாங்க. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நான் வேறொரு ஜானரில் படம் எடுத்தால், அதில் அந்த ஜானரைத் தவிர வேற எதுவும் என்னால பண்ண முடியாது. ஆனால், பேய்ப்படம்னா என்னால அதில் நிறைய  விளையாட முடியும். அதுக்காகத்தான் பேயுடன் வர்றேன்.”

“யுவன் சங்கர் ராஜா எப்படி இந்தப் படத்துக்குள் வந்தார்?”

``இந்தப் பட ஹீரோ ஹரி பாஸ்கர்தான் யுவனுடன் என்னைச் சந்திக்கவெச்சார். யுவனுக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருச்சு. இன்னொரு விஷயம், முதன்முதலா யுவன் ஷங்கர் ராஜாவும் சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து இதில் வொர்க் பண்ணப்போறாங்க. இரண்டு இசையமைப்பாளர்கள் இருந்தாலும் ‘பேய்ப் பசி’யில் பாட்டு இல்லை. பின்னணி இசையில ரெண்டு பேரும் கலக்குவாங்கனு நம்பிக்கை இருக்கு. ‘படத்தோட எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு வாங்க, அப்புறம் நாங்க பின்னணி இசை பண்ணித்தர்றோம்’னு சொல்லியிருக்காங்க. அந்தத் தருணத்துக்காக  ஆர்வமா காத்திருக்கேன்.”