தொடர்கள்
Published:Updated:

“துல்கரும் நானும் ‘தளபதி’யோட நியூ வெர்ஷன்!”

“துல்கரும் நானும் ‘தளபதி’யோட நியூ வெர்ஷன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“துல்கரும் நானும் ‘தளபதி’யோட நியூ வெர்ஷன்!”

மா.பாண்டியராஜன், படங்கள்: ப.சரவணக்குமார்

``ஒரு முறை சிவகார்த்திகேயன் அண்ணன் ‘டான்ஸ் ஷோல கொஞ்சமா காமெடி பண்ணாலே அதிகமா சிரிப்பாங்க. காமெடி ஷோல எவ்வளவு காமெடி பண்ணாலும் போட்டியாளர்களைத் தாண்டி வெளியில தெரியுறது கஷ்டம். ஆனா, நீ இந்தளவுக்கு ஃபேமஸாகியிருக்க, சூப்பர்டா’னு சொன்னார். இதுதான் எனக்கான பூஸ்ட்’.’  உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார், `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு புரமோட் ஆகியிருக்கும் ரகளைத் தொகுப்பாளர்  ரக்‌ஷன்.

“துல்கரும் நானும் ‘தளபதி’யோட நியூ வெர்ஷன்!”

“சின்னத்திரைக்குள் வரும்போதே சினிமாதான் இலக்குனு முடிவு பண்ணிட்டீங்களா..?”

``அப்படியெல்லாம் எதுவும் ஃபிக்ஸ் பண்ணிக்கலை. ஏன்னா, என்னோட 17வது வயசுலேயே சினிமா ஆசை வந்து, அவசரப்பட்டு என்னோட பணத்தை எல்லாம் இழந்தவன் நான்.”

“துல்கரும் நானும் ‘தளபதி’யோட நியூ வெர்ஷன்!”

``பணத்தை இழந்தீங்களா... அது என்ன கதை..?’’

``சினிமான்னா என்னன்னே புரியாத வயசு. சினிமா ஆசை வந்திடுச்சு. ஏரியால ஒரு உதவி இயக்குநர் இருந்தார். சினிமால நடிக்கணும்னு அவர்கிட்ட சொன்னதுமே, ‘நான் உன்னை வெச்சு படம் பண்றேன். கொஞ்சம் பணம் செலவாகும்’னு சொன்னார். எங்க அம்மாவோட செயின், மோதிரத்தை எல்லாம் அடகு வெச்சுப் பணம் கொடுத்தேன். ரெண்டு நாள்தான் ஷூட் பண்ணாங்க. பார்க்ல ஒரு டூயட் சாங்கெல்லாம் எடுத்தாங்க... அப்புறம் அந்த மனுஷனை நான் பார்க்கவே இல்லை. அதுக்கப்பறம் ஃபார்மஸி, கால் சென்டர், சேல்ஸ்மேன், ரியல் எஸ்டேட், மெஸ்னு பல வேலைகள் பார்த்தேன். கடைசிலதான் டி.விக்கு வந்தேன். ‘கலக்கப்போவது யாரு’ டைரக்டர் தாம்ஸன் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அப்படியே அந்த ஷோவுக்கும் தொகுப்பாளராகிட்டேன்.  சினிமா வாய்ப்புகள் மறுபடியும் வந்துது ‘இந்த முறை ரொம்ப யோசிச்சேன். நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தேன், இப்போ துல்கர் சல்மானோட நடிக்கிறேன்!’’

“துல்கரும் நானும் ‘தளபதி’யோட நியூ வெர்ஷன்!”

“துல்கர் சல்மானோட 25வது படம், உங்களோட முதல்படம்... எப்படியிருக்கு..?”

``இயக்குநர் தேசிங் பெரியசாமி அண்ணா ஆபீஸ்ல இருந்து கால் பண்ணி, ‘துல்கர் சார் நடிக்கிற படத்துல உங்களுக்கும் ஒரு முக்கியமான ரோல் இருக்கு. வாங்க பேசலாம்’னு சொன்னாங்க. துல்கர் படம்னு சொன்னதுமே, கண்டிப்பா கதை நல்லா இருக்கும்னு முடிவு பண்ணிட்டேன். அவரோட எல்லாப் படங்களுமே புதுமுயற்சியா இருக்கும். முழுக்க முழுக்கக் காதல் படம்தான் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.’ ஹீரோவுக்கு அடுத்தபடியா ரொம்ப முக்கியமான கேரக்டர் பண்றேன்.’’

“துல்கர் சல்மானும் நீங்களும் ரொம்ப நெருக்கமாகிட்டீங்களாமே?”

``துல்கரோட இருந்தா நிறைய ஃபிட்னஸ் டிப்ஸ் வாங்கிட்டே இருக்கலாம். அந்தளவுக்கு ஃபிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ரொம்ப அன்பா இருப்பார். கதைப்படி எங்க கேரக்டரும் அப்படித்தான். ‘தளபதி’ படத்துல வர தேவா, சூர்யாவோட நியூ வெர்ஷன்னு சொல்லலாம்.’’