கேள்வி

‘தமிழ் சினிமா தயாரிப்புச் செலவுகளில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை’ என்பது பல நாள் குற்றச்சாட்டு. க்யூப் பிரச்னை, செலவுகளைக் குறைத்தல், தியேட்டர் கட்டணம் உட்பட பல்வேறு விஷயங்களைப் பேசும் தயாரிப்பாளர்களுக்கு, ‘படத்தின் பட்ஜெட் இது, வசூலான தொகை இது’ என வெளிப்படையாகச் சொல்வதில் என்ன தயக்கம்?

ஹைலைட்

‘ஃபிலிமில் மட்டுமே படமெடுப்பது’ என்ற கொள்கையுடன் இருக்கும் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன், ஃபிலிம் டெக்னாலஜி குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க இந்தியா வருகிறார். மார்ச் 30-ம் தேதி மும்பையில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் அனுராக் காஷ்யப், அமிதாப் பச்சன், அமீர்கான், கமல்ஹாசன், மணிரத்னம், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பிரபலங்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சியில், நோலன் இயக்கிய ‘டன்கிர்க்’ படத்தைத் திரையிடுகிறார்கள்.

வைரல்

‘பாகுபலி’க்குப் பிறகு ராஜமெளலி இயக்கப் போகும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பாக்ஸிங்கை மையப்படுத்திய இப்படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணி, ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து முடிந்திருக்கிறது. ராம்சரண், என்.டி.ஆர், ராஜமெளலி மூவரையும் குறிப்பிடும்விதமாக, #RRR என்ற ஹேஷ்டேக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது, படக்குழு.

ஹாட் டாபிக்

தமிழ் சினிமாவைச் சரிசெய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். அதன் ஓர் அங்கமாக, ‘நடிகர்களின் உதவியாளர்களுக்கு இனி ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தையே வழங்குவது’ என்றும், ‘கூடுதல் செலவுகளைச் சம்பந்தப்பட்ட நடிகரே ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள். சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட நடிகர்கள், ‘எங்களின் உதவியாளர்களுக்கான முழு ஊதியத்தையும் நாங்களே கொடுக்கிறோம்’ என அறிவித்துள்ளனர். இதனால், தயாரிப்பாளர்களுக்கு ஒரு திரைப்படத்தின் தயாரிப்புச் செலவில் சில லட்சங்கள் குறையும்.

தன்ஷிகா நடித்த ‘சினம்’ குறும்படத்துக்கு ‘சிறந்த நடிகை’க்கான விருது உள்பட சர்வதேச அளவில்
பல அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன. தன்ஷிகாவின் நடிப்பைப் பார்த்த தெலுங்குக் கதாசிரியர் கிரண், தன்ஷிகாவை வைத்து ‘மேளா’ என்ற படத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘யு டர்ன்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்கிறார். ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன் குமாரே, ரீமேக்கையும் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் பேய் கேரக்டரில் நடிப்பதன் மூலம், ஐந்து வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் பூமிகா.