Published:Updated:

பைரசிக்கு உதவிய 10 திரையரங்குகளுக்கு விஷால் வைத்த செக்!

பைரசிக்கு உதவிய 10 திரையரங்குகளுக்கு விஷால் வைத்த செக்!

பைரசிக்கு உதவிய 10 திரையரங்குகளுக்கு விஷால் வைத்த செக்!

பைரசிக்கு உதவிய 10 திரையரங்குகளுக்கு விஷால் வைத்த செக்!

பைரசிக்கு உதவிய 10 திரையரங்குகளுக்கு விஷால் வைத்த செக்!

Published:Updated:
பைரசிக்கு உதவிய 10 திரையரங்குகளுக்கு விஷால் வைத்த செக்!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரன்ஆகியோர் நடித்துள்ள 'சண்டக்கோழி-2 ' திரைப்படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களாக புதுப்படங்களை திருட்டுத்தனமாக பைரசி எடுக்க உதவிய திரையரங்களுக்குத் தனது சண்டக்கோழி-2 திரையிடும் அனுமதி இல்லை என அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார்.   

கடந்த சில மாதங்களாக வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன், விமர்சனரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதேவேளையில், பைரசி எடுப்பவர்கள் அவர்களது வேலையை செய்து வருகின்றனர். 'மனுசனா நீ', 'கோலிசோடா 2', 'ராஜா ரங்குஸ்கி', 'சீமராஜா', 'இமைக்கா நொடிகள்', ’ஒரு குப்பை கதை’ ஆகியப் படங்களின் பைரசி எடுக்க உதவிய திரையரங்குகளில் 'சண்டக்கோழி-2' திரையிடப்படமாட்டாது, படத்தை திரையிட உதவும் கே.டி.எம்மை வெளியிடக்கூடாது எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், கீழ் குறிப்பிட்டுள்ள திரையரங்குகள் மீது போலீஸ் விசாரணை நடந்து வரும் வேளையில்,  கியூப் நிறுவனம் தொழில்நுட்ப சேவையை அளித்து வருவதையும் நிறுத்த வேண்டும். இந்த வழக்குகள் முடிவை எட்டும் வரையில் போலீஸாரால் புரொஜக்டர் கையகப்படுத்திய திரையரங்குகளுக்குப் புதிய புரொஜக்டர் அல்லது மாற்று புரொஜக்டர்கள் தருவதோ, தயாரிப்பாளரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது போல் இருக்கும்' எனவும் விஷால் அறிவித்திருக்கிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பைரசி புகாரில் சிக்கியுள்ளத் திரையரங்குகள்:

கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர்

கிருஷ்ணகிரி நயன்தாரா

மயிலாடுதுறை கோமதி

கரூர் எல்லோரா

கரூர் கவிதாலயா

பெங்களூர் சத்யம்

விருத்தாச்சலம் தியேட்டர்

மங்களூர் சினி போலீஸ்

திரையரங்குகளில் எடுக்கப்படும் பைரசியை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் 'மனுசனா நீ' படத்தின் இயக்குநர் கசாலி பேசுகையில் "இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தில் எடுத்த முடிவுகளில் இது முக்கியமானது. இந்த முடிவை எடுத்த சங்கத் தலைவர் மற்றும் 'சண்டக்கோழி 2' படத் தயாரிப்பாளர் விஷாலுக்கு பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சார்பில் நன்றி. தயாரிப்பாளர்கள்  எந்தத் திரையரங்கில் தங்கள் படத்தை ஓட்ட அனுமதிக்கக்கூடாது எனக் கூறுகிறார்களோ அதை கியூப் நிறுவனம் செய்து தரவேண்டும். இந்த 10 திரையரங்குகளுக்கு வரும் வாரங்களில் ரிலீசாகும் எந்தப் படமும் வெளியாகாது என்ற நிலைப்பாட்டை எடுக்கும் வேலைகளில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஈடுபட்டு வருகிறது. இதை மீறி கியூப் மேற்குறிப்பிட்ட தியேட்டர்களில் படம் ஓட உதவுமெனில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில், நான் கியூப் கட்டடம் முன்பு பெரிய ஆர்ப்பாட்டம் செய்வேன்'’ என்றார்  

இதுகுறித்து பேசிய கியூப் நிறுவன முதன்மை மேலாளர் சதீஷ்,"சண்டக்கோழி 2 திரைப்படத்தை பைரசி எடுக்கப்பட்டத் தியேட்டர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று விஷால் முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம். ஒரு படத்தின் திருட்டு வி.சி.டி சிக்கினால் அது எந்த தியேட்டரில், எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது எனத் துல்லியமாக ஆராய்ந்து அறிக்கையளித்து, தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பாக இருந்து வருகிறோம். திரையரங்கு புரொஜக்டர்களில்  பல லட்சம் ரூபாய் நாங்கள் முதலீடு செய்யதுள்ளோம். நாங்கள் அளிக்கும் அறிக்கையால் எங்கள் புரஜக்டரை பறிமுதல் செய்வார்கள் எனத் தெரிந்தும் தயாரிப்பாளர் நலன் கருதி பைரசி எடுக்கப்படும் திரையரங்குகளின் விவரத்தை தயாரிப்பாளர்களுக்கு அளித்து வருகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது விஷால் எடுத்திருக்கும் முடிவினை மற்ற தயாரிப்பாளர்களும் பின்பற்றவேண்டும்'’ என்றார்.

சண்டக்கோழி 2-க்கு முன் தனுஷின் வடசென்னை, இரண்டு வார இடைவெளியில் தீபாவளிக்கு விஜய் நடித்த 'சர்கார்' ஆகிய படங்கள் இதைப் பின்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism