பிரீமியம் ஸ்டோரி

த்ரிஷாவின் முதல் மலையாளப் படமான ‘ஹே ஜூட்’, கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் 50 நாள்களைக் கடந்து ஒடிக்கொண்டிருக்கிறது. மலையாளத்தில் தன் முதல் படமே ஹிட் ஆனதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா. இந்தப்படத்தின் மூலம் அவருக்கு மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

மிஸ்டர் மியாவ்

•  ‘எஜுகேட் கேர்ள்ஸ்’ (Educate Girls) என்ற அமைப்பின் தூதராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டுள்ளார். “ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களுக்கான திறமைகளின் அடிப்படையில் வாய்ப்புகள் சரிசமமாக கிடைக்க வேண்டும். ஒரு பெண் குழந்தையின் கல்வி மட்டும்தான் மக்களின் மனதைப் பெரிய அளவில் மாற்றும்” என இன்ஸ்டா கிராமில் பதிவிட்டுள்ள கத்ரீனா, தன் வாழ்க்கையைப் புத்தகமாகவும் எழுதத் திட்டமிட்டுள்ளாராம்.

மிஸ்டர் மியாவ்



கேள்வி

க்யூப் பிரச்னை, திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை, பெஃப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்... எனப் பல பிரச்னைகளால் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவில் புதுப்படங்கள் வெளியீடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஏராளமான படங்கள் ஏப்ரலில் ரிலீஸுக்குத் தயாராக  உள்ளன. ஸ்ட்ரைக் முடிந்தவுடன் , அந்தப் படங்களுக்கான ரிலீஸ் தேதி, எந்தப் படங்களுக்கு எத்தனை தியேட்டர் எனப் பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றைத் தமிழ் சினிமா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

மிஸ்டர் மியாவ்

வைரல்

ரசியல், சினிமா என பிஸியாக இருக்கும் கமல்ஹாசனும், அவரின் இளைய மகள் அக்‌ஷராஹாசனும் ஜிம்மில் எடுத்த செல்ஃபி ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அதை, கமல் தன் ட்விட்டர் பக்கத்திலும், அக்‌ஷரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.

ஹைலைட்

ந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. இந்தப் படத்தில் ராஜசேகர ரெட்டியாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியும், அவரின் மனைவியாக நயன்தாராவும் நடிக்கவுள்ளனர். இவர்களின் மருமகளாக நடிக்கப்போவது கீர்த்தி சுரேஷ்.

மிஸ்டர் மியாவ்

• தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பாலிவுட்டிலிருந்து செய்திகள் வருகின்றன. தென்னிந்திய ஸ்டைலில் திருமணம் இருக்க வேண்டுமென தீபிகா ஆசைப்பட்டதால். அதற்கான ஷாப்பிங்கை பெங்களூரில் செய்து முடித்திருக்கிறார்கள் அவருடைய வீட்டார். அதேசமயம், ரன்வீருடன் சேர்ந்து லண்டனிலும் ஷாப்பிங் செய்து வந்திருக்கிறாராம் தீபிகா.

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

யக்குநர் கௌதம்மேனன் தன் கனவைச் சிதைத்து விட்டதாக ‘நரகாசூரன்’ பட இயக்குநர் கார்த்திக் நரேன் பதிந்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘படத்தைத் தயாரிக்கிறேன் என்று சொல்லி, எங்களை வேறு ஒருவருடன் கைமாத்திவிட்டார் கெளதம். பட வேலைகள் முடித்துவிட்டாலும், படம் வெளியாகமல் நிற்க அவர்தான் காரணம்’ என்பது உள்பட பல குற்றச்சாட்டுகளை கௌதம்மேனன் மீது வைத்துள்ளார் கார்த்திக். அதற்கு கெளதம்மேனன், ‘நாங்களும் ‘நரகாசூரன்’ படத் தயாரிப்பில் ஒன்பது கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். படத்தை எப்போது ரிலீஸ் செய்வதென்று எங்களுக்குத் தெரியும். அவர் ஃபீல் பண்ணுகிறார் என்பதற்காக ரிலீஸ் பண்ண முடியாது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு