Published:Updated:

`ரஜினி செம ஆச்சர்யமான மனிதர்!’ - `பேட்ட’ அனுபவம் பகிரும் நவாஸுதீன் சித்திக்கி

`ரஜினி செம ஆச்சர்யமான மனிதர்!’ - `பேட்ட’ அனுபவம் பகிரும் நவாஸுதீன் சித்திக்கி
`ரஜினி செம ஆச்சர்யமான மனிதர்!’ - `பேட்ட’ அனுபவம் பகிரும் நவாஸுதீன் சித்திக்கி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி உள்ளிட்டோருடன் இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக்கி முதல் முறையாகத் தமிழில் நடித்துவருகிறார்.

இந்திப் படங்களில் மட்டும் நடித்தாலும், சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர்களில் ஒருவர் நவாஸுதீன் சித்திக்கி ரஜினியுடனான தனது படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ``ரஜினிகாந்த் செம ஆச்சர்யத்துக்குரிய மனிதர். அவருடன் நடிக்க பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருவன். வடநாட்டின் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட அவரைத் தெரிந்திருக்கிறது. அவர்தான், நாட்டிலேயே பெரிய சூப்பர் ஸ்டார். அவரின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், இதை எதுவுமே பொருட்படுத்தாமல் அவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவரை முதன்முதலில் பார்த்தபோது மிகவும் யதார்த்தமாகப் பேசினார். அவரும் நம்மைப் போன்றவர்தான் என்று நமக்கே உணர்த்துகிறார். ரஜினிக்கு வடக்கில் இருக்கும் மவுசு, நம் ஆட்களுக்குத் தெற்கில் இல்லை; இருந்தும் பாலிவுட் நடிகர்களான நாங்கள், 20,25 பேரைக் கூட அழைத்துக்கொண்டு பெரும் பந்தாவுடன் சுற்றுகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

பேட்ட படத்தில் தமிழில் பேசி நடிப்பது குறித்து பேசிய நவாஸுதீன், "மராத்தி, குஜராத்தி மொழிகள் இந்தி மொழிநடைக்கு ஒத்திருப்பதால் பேசுவதற்கு எளிதாக உள்ளது. தமிழில் பேசி நடிப்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகவே இருக்கிறது " என்றார்.