Published:Updated:

`வடசென்னை படம் பேசும் அரசியல் இதுதான்!’ - அமீர் ஷேரிங்க்ஸ்

`வடசென்னை படம் பேசும் அரசியல் இதுதான்!’ - அமீர் ஷேரிங்க்ஸ்
`வடசென்னை படம் பேசும் அரசியல் இதுதான்!’ - அமீர் ஷேரிங்க்ஸ்

``வளர்ச்சி, மக்களுக்கான திட்டங்கள் அப்படீங்கிற வார்த்தைகள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுதோ, அங்கெல்லாம் இருக்கக்கூடிய மக்களை அப்புறப்படுத்தப் போறாங்கனு நாம புரிஞ்சுக்கணும். இது காலம்காலமா நடந்துக்கிட்டிருக்கு.சுதந்திரத்துக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு இதைப் பண்ணிக்கிட்டு இருக்கு'' என்கிறார் இயக்குநரும் நடிகருமான அமீர்.

`வடசென்னை' பேசும் அரசியல் குறித்து அமீரிடம் பேசினோம். ``சென்னையிலிருந்து சேலத்துக்குப் போறதுக்கு எட்டு வழிச்சாலை. இப்படிப் போறவன், எந்தக் காரணத்துக்காகப் போவான்? அவன் ஒரு வழிப்போக்கன். வழிப்போக்கனுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆண்டாண்டுக் காலமா வாழக்கூடிய வாழ்க்கையை எப்படி அழிப்பீங்க? எட்டு வழிச்சாலை போட்டா, இரண்டு மணி நேரம் மிச்சமாகும்னு சொல்றீங்க. விவசாயிக்கான வளர்ச்சி என்ன? அவனுடைய நலம் என்ன? இது மக்கள் நலனுக்கான திட்டம்னா, விவசாயிகளெல்லாம் மக்கள் இல்லையா..? இதுமாதிரி, 'வடசென்னை' படம் குறிப்பிட்ட இடத்தில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்வியல் அரசியலைப் பேசியிருக்கு" என்கிறார் அமீர்.