Published:Updated:

`ரூ. 5 கோடி கொடுத்த திலீப்புக்கு விசுவாசமாக இருந்தால் என்ன தவறு’ - சர்ச்சையை கிளப்பிய நடிகரின் பேச்சு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`ரூ. 5 கோடி கொடுத்த திலீப்புக்கு விசுவாசமாக இருந்தால் என்ன தவறு’ - சர்ச்சையை கிளப்பிய நடிகரின் பேச்சு
`ரூ. 5 கோடி கொடுத்த திலீப்புக்கு விசுவாசமாக இருந்தால் என்ன தவறு’ - சர்ச்சையை கிளப்பிய நடிகரின் பேச்சு

`ரூ. 5 கோடி கொடுத்த திலீப்புக்கு விசுவாசமாக இருந்தால் என்ன தவறு’ - சர்ச்சையை கிளப்பிய நடிகரின் பேச்சு

ஒருபுறம் சபரிமலை விவகாரம்; மறுபுறம் மலையாள நடிகர் திலீப் விவகாரம் என அண்டை மாநிலமான கேரள தேசம் திரையிலும், நிஜத்திலும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.  

நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் சேர்க்கக்கூடாது எனத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் அடங்கிய மலையாள நடிகைகள் கூட்டமைப்பான டபிள்யூ.சி.சி. கடந்த சனிக்கிழமை கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த இவர்கள், ``மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து திலீப் வெளியேற்றப்படவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட நடிகை வெளியே உள்ளார். `அம்மா' செயற்குழுவில் திலீப்பை நீக்காமல் பொதுக்குழுவில் அதுபற்றி பேசுவதாக சொல்கிறார்கள். நடிகைகளுக்குத் தொழில் பாதுகாப்பு வேண்டும்" எனப் பல குற்றச்சாட்டுகளை அம்மா அமைப்பு மீது வைத்தனர். ``ஆனால் இது தவறு. கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை திலீப்பை குற்றவாளியாக நாங்கள் பார்க்க முடியாது. அதேநேரம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் `அம்மா' உறுதியாக உள்ளது" என நடிகர் சங்கமான அம்மா அவர்களுக்குப் பதிலளித்துள்ளது. 

இதற்கிடையே, திலீப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசிய நடிகர் ஒருவரின் பேச்சு இந்த விவகாரத்தில் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லாஸ்ட் பெஞ்ச் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ள நடிகர் மகேஷ் இந்த விவகாரம் குறித்து பேசும்போது, ``பார்வதி, ரேவதி போன்றோர் சங்கத்தின் எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அமைப்பில் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே அவர்களால் கூற முடியும். ஆனால், திலீப்போ ரூ.5 கோடிக்கும் அதிகமான பணத்தை சங்கத்துக்காக நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அவருக்கு விசுவாசமாக இருந்தால் என்ன தவறு?" எனக்கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு