Published:Updated:

`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்!

தனுஷ் நடிப்பில் , வெற்றிமாறன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள  திரைப்படம் வடசென்னை. கடந்த சில நாள்களாகவே படத்தின் ப்ரமோ டீசர், வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு `A' சர்டிபிகேட் வழங்கி இருந்தது. பொதுவாகவே நிலம் சார்ந்த படைப்புகளை எடுக்கும்போது, படத்தின் கள எதார்த்தத்தின் பொருட்டு அப்பகுதி மக்கள் தங்கள் அன்றாடத்தில் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளைப் படத்தில் சேர்ப்பர். பெரும்பாலும் அவை 'மியூட்' செய்யப்பட்டு விடும். இதன் காரணமாகவே இயக்குநர்களுக்கும், சென்சார் போர்டில் உள்ளவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதுண்டு. வடசென்னை படத்துக்கு `A' சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்த நேர்காணல்களில் வெற்றிமாறன், `இந்தப் படத்தை சென்சார் போர்டில் வேறுவிதமாக அணுகியுள்ளனர். படத்தின் எதார்த்த தன்மைக்காக  கெட்டவார்த்தைகளையும் அனுமதித்துள்ளனர்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் வடசென்னை படத்தில் என்னென்ன வார்த்தைகள் பயன்படுத்த சென்சார் அனுமதித்தது. எதை அனுமதிக்கவில்லை எனத் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் பெயரையும் மியூட் செய்யச் சொல்லி தகவல் வெளியாகியுள்ளது. எந்த வார்த்தையெல்லாம் அனுமதித்துள்ளார்கள், எதற்கு மியூட் கொடுத்துள்ளார்கள் என நாளை படம் வெளியானவுடன் தெரிந்துவிடும். 

அடுத்த கட்டுரைக்கு