Published:Updated:

`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க!" - புன்னகைக்கும் நியத்தி

'96' படத்தில் சிறு வயது தேவதர்ஷினியாக நம் அனைவரையும் ஈர்த்தவர், நியத்தி கடம்பி. சேத்தன் - தேவதர்ஷினி தம்பதியின் மகள். தற்போது, 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். படம் பார்த்துவிட்டு பலரும் நியத்தியின் நடிப்பைப் பாராட்டி வருகிறார்கள். அவரிடம் பேசினோம்.

``என் நடிப்பை ஏத்துக்கிட்டு பாராட்டி உற்சாகப்படுத்தின எல்லோருக்கும் என்னுடைய நன்றியைச் சொல்லிக்கிறேன். ஆரம்பத்தில், ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகும்போது எல்லோரும் எப்படி பழகுவாங்களோன்னு பயந்தேன். அங்கே போனதும், கெளரி, ஆதித்யா பாஸ்கர் எல்லோரும் கலகலன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆதித்யா சூப்பரா பாட்டுப் பாடுவார். நானும் பாட்டு கத்துக்கிறேன். ஆனா, மத்தவங்க முன்னாடி பாடுறதுக்கு கூச்சமா இருக்கும். '96' படம் எடுக்கிறதுக்கு முன்னாடி எங்களுக்கு ஒரு ஒர்க் ‌ஷாப் வெச்சிருந்தாங்க. அந்த ஒர்க் ‌ஷாப் மூலம் எல்லோரும் ரொம்பவே மிங்கிள் ஆகிட்டோம். ஃப்ரீ டைம் கிடைக்கும்போது என்னைப் பாடச் சொல்வாங்க. நானும் ஆதித்யாவும் பாடிட்டே இருப்போம். இப்போ, எல்லோர் முன்னாடியும் ஈஸியா பாட ஆரம்பிச்சிருக்கேன். `96' டீம் ஃப்ரெண்ட்ஸ் என்னுடைய தயக்கத்தை உடைச்சு வெளியே கொண்டுவந்துட்டாங்க'' எனப் புன்னகைக்கிறார் நியத்தி. 

அடுத்த கட்டுரைக்கு