Published:Updated:

`ஸ்கிரிப்ட் எழுதுவது போல எழுதினார் தியாகராஜன் குமாரராஜா’ - 'சீதக்காதி' பாடல் குறித்து பாலாஜி தரணீதரன்

`ஸ்கிரிப்ட் எழுதுவது போல எழுதினார் தியாகராஜன் குமாரராஜா’ - 'சீதக்காதி' பாடல் குறித்து பாலாஜி தரணீதரன்
`ஸ்கிரிப்ட் எழுதுவது போல எழுதினார் தியாகராஜன் குமாரராஜா’ - 'சீதக்காதி' பாடல் குறித்து பாலாஜி தரணீதரன்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலே 25 படங்களில் நடித்துவிட்டார். படத்துக்குப்படம் வித்தியாசம் காட்டும் விஜய் சேதுபதி, தனது 25 - வது படமான `சீதக்காதி’ யில் மூத்த நாடகக் கலைஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் விஜய் சேதுபதி.

`ஸ்கிரிப்ட் எழுதுவது போல எழுதினார் தியாகராஜன் குமாரராஜா’ - 'சீதக்காதி' பாடல் குறித்து பாலாஜி தரணீதரன்

இந்தப் படத்தில் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோவிந்த் வஸந்தா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இப்படத்தின் `அய்யா' என்ற சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டார். இந்தப் பாடலின் வரிகளை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா எழுதியுள்ளார்.

`கடலின் மொத்த ஒலியையும் ஒரு சங்கு தன்னுள் இசையாகக் கொண்டது போல, ஒரு பெரு வனம் வீசும் காற்றை ஒரு சிறிய மூங்கில் தேனிசையாக ஆக்குவது போல, அந்த நடிகன் பெரும் உணர்வுகளைத் தனது நடிப்பால் கலையாக மாற்றுகிறான்’ என்று பொருள்பட எழுதப்பட்டிருக்கிறது இந்தப் பாடல். நிச்சயம் இப்பாடல்,  ஒரு நடிகனுக்கு, கலைஞனுக்குப் பாராட்டுதரும் பாடலாக அமையும். ரசிகருக்கும் ஒரு நல்ல உணர்வைத் தரும் ஓப்பனிங் பாடலாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. 

பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஆழமானது மற்றும் கதையோடும் தொடர்புடையது என்கிறார் இயக்குநர் பாலாஜி தரணீதரன்.  அய்யா பாடல் உருவானது குறித்து அவர், ``நானும் கோவிந்த் வஸந்தாவும் கம்போஸிங்ல

`ஸ்கிரிப்ட் எழுதுவது போல எழுதினார் தியாகராஜன் குமாரராஜா’ - 'சீதக்காதி' பாடல் குறித்து பாலாஜி தரணீதரன்

இருக்கும்போது பாடல் வரிகளை எழுதிட்டு கம்போஸ் பண்ணலாமானு யோசிச்சோம். அப்புறம், கம்போஸ் பண்ணப் பண்ண பாடல் வரிகள் எழுதினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. எனக்கு தியாகராஜன் குமாரராஜா சார் நல்ல பழக்கம். அடிக்கடி சந்தித்துப் பேசுவோம். அவர், ஏற்கெனவே 'ஓரம்போ' படத்தில் பாட்டு எழுதியிருக்கார். அதுனால அவர்கிட்ட கேட்டேன். உடனே சம்மதித்து எங்ககூட கம்போஸிங்ல கலந்துகொண்டார். அவருக்கு தமிழ்ல நல்ல நடை இருக்கும். 

ட்யூன் ஓகே ஆக, அவரும் கூடவே எழுதினார். வரிகள் ஆழமானதாக இருந்தது. நான்கூட  சில இடங்கள்ல இந்த வரி போதும்னு சொன்னேன். ஆனா தியாகராஜன் குமாரராஜா சார், விடாம சரியான வரிகள் வரும் வரை எழுதினார். படம் பார்க்கும்போது, பாடலின் வரிகள் படத்துடன் மிகச் சரியாகப் பொருந்தும். ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதுவதுபோன்று கவனமாக எழுதினார். தொடர்ச்சியாக வேலை செய்யல. ஆனாலும் இந்தப் பாடலை முடிக்க 2, 3 வாரங்கள் ஆனது” என்றார். 

'ஒரு பக்க கதை' படத்துக்குப் பின்னர் இரண்டாவது முறையாக கோவிந்த் வஸந்தாவுடன் பணியாற்றுவது தொடர்பாகப் பேசிய பாலாஜி, ``கோவிந்த் எனக்கு' நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்துலே பின்னணி இசையில் கீபோர்டுல வொர்க் பண்ணிருப்பார். அவரு வொர்க் எனக்குப் பிடிக்கும். அப்பவே அடுத்த படத்துல அவர்கூட வொர்க் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன். 'ஒரு பக்க கதை' படத்துல சிறப்பாகப் பண்ணிருப்பாரு. அவர் திறமையில் எந்தச் சந்தேகமும் கிடையாது. 'சீதக்காதி' படம் பாக்குறப்போவும் அது தெரியும்” என்றார் திருப்தியுடன். 

சென்சார் முடிந்தும் `ஒருபக்க கதை’ படம் வெளியாகாமல் உள்ளதுகுறித்துப் பேசிய அவர், ``அது, தயாரிப்பாளர் கையில்தான் இருக்கிறது. 'சீதக்காதி' படத்துக்குப் பின்னர் அது வெளியாகும் என்று நம்புகிறேன்” என்றார். சீதக்காதி நவம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.