‘‘சின்ன வயதில், ‘போலீஸாக இருந்தால் நாம் மனதில் நினைக்கிற நல்ல விஷயங்களை, ஈஸியா நிறைவேற்றிவிடலாம்’ என்று நினைப்பேன். அதனால் காக்கி யூனிஃபார்ம்மீது தீராக் காதல். காலேஜ் முடித்ததும் எஸ்.ஐ செலக்ஷனுக்குப் போனேன். ‘எஸ்.ஐ ஆனால் மேலதிகாரியை மீறி உன்னால ஒண்ணும் செய்ய முடியாது. அதனால் ஐ.பி.எஸ் எக்ஸாம் எழுது’ என்றார் உறவினர். அப்படி எழுதிய ஐ.பி.எஸ் முதல்நிலைத் தேர்வில் தோல்வி அடைந்தேன் ஆனாலும் போலீஸ் மீதிருந்த மரியாதை குறையவே இல்லை. ஒருநாள் இரவு சாலிகிராமத்தில் இரண்டு ரவுடிகளிடையே நடந்த சண்டையில் ஏரியாவே ரணகளமாக இருந்தது. அப்போது அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ஜீப்பில் வந்திறங்கியதுதான் தாமதம், ரவுடிகள் தலைதெறிக்கத் தப்பி ஓடினர். அந்த இன்ஸ்பெக்டர் ஒற்றை மனிதராக லட்டியைச் சுழற்றிய காட்சி, என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. ஆனால், என் அருகில் இருந்த ஒருவர், ‘லட்டியும் சுத்துவார். சாராயம் காய்ச்சுறவங்கள்ட்ட இருந்து காசையும் கறப்பார்’ என்று சொன்னார். அந்தச் சம்பவம்தான் ‘சாமி’ படக் கதையின் விதை!” - ஃப்ளாஷ்பேக் சொல்லும் ஹரி, ‘சாமி-2’ படத்தைச் செதுக்கிக்கொண்டிருக்கிறார்.

“ ‘சாமி’ பட முடிவில் ‘சாமி வேட்டை தொடரும்’ என்று இரண்டாம் பாகத்துக்கான லீடு கொடுத்திருப்போம். ஆனால், அடுத்தடுத்து ‘சிங்கம்’ பட பாகங்களை இயக்குவதில் பரபரப்பாக இருந்ததால் ‘சாமி’யின் அடுத்த பாகம் பற்றி யோசிக்க முடியாமல் இருந்தது. விக்ரம் சாரும் வேறுமாதிரி கதையம்சம் கொண்ட சினிமாக்களில் நடிச்சுக்கிட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திச்சப்போ, ‘சாமி-2’ படத்தின் ஒன்லைன் சொன்னேன். கேட்டதும் விக்ரம் சாருக்கு ரொம்பவே சந்தோஷம். ஏனெனில், இதில் கதையும் கமர்ஷியலும் சரிவிகிதத்தில் இருக்கும். ‘சாமி’ படத்தின் கேரள விநியோகஸ்தராக இருந்த ஷிபு தமீன்தான் இப்போது ‘சாமி-2’ படத்தின் தயாரிப்பாளர்.”

“‘சாமி-2’-ல் ‘ஆறுச்சாமி’ கேரக்டரில் என்ன ஸ்பெஷல்?”

“அடாவடிகள் நிறைந்த நகரத்தை அதிரடி நடவடிக்கையால் சுத்தமான நகரமாக மாற்றியிருப்பார். வெளிநாடு சென்றுவிட்டு, ஐந்து ஆண்டுகள் கழித்துத் திரும்பிவந்து பார்த்தால், அந்த நகரம் முன்புபோலவே ரௌடியிஸமும் லஞ்சமும் நிறைந்து கிடந்ததால், கோபம் கொப்பளிக்கும் காவல்துறை அதிகாரியின் ஆவேச ஆக்ஷனே ‘சாமி-2.’ இதில் விக்ரம் சாருக்கு இரண்டு கெட்டப். முதல் பாகத்தில் பொறி பறக்கும் வசனங்கள் இருந்ததைப் போலவே, இந்தப் பாகத்திலும், ‘நான் சாமி இல்லடா பூதம்’, ‘நான் ஆறுச்சாமி இல்லடா... ஆறு பேய், ஆறு பிசாசு, ஆறு பூதம்’, ‘15 வருஷத்துக்கு முன் சாமி வேஷம் போட்டாலே சமாளிக்கிற புத்தி உங்களுக்கு இருந்துச்சு. இப்ப உங்க கிரிமினல் புத்திக்குப் பதிலடி கொடுக்கணும்னா பூதமா, பேயா, பிசாசா வேஷம் போட்டாதான் உங்களைக் கருவறுக்க முடியும்’னு பட்டையக் கிளப்பும் பட்டாசு வசனங்கள் இருக்கு.”

“கீர்த்தி சுரேஷுக்கு என்ன மாதிரியான கேரக்டர்?”

“வீட்டில் பொய்சொல்லிவிட்டு, கிரெடிட் கார்டைத் தேய்த்துவிட்டு யாருடைய துணையும் இல்லாமல் அமெரிக்காவுக்கு விமானத்தில் பறக்கிற தைரியமான பெண். வழக்கமாக ஹீரோவின் நண்பர்களாகத்தான் காமெடி நடிகர்கள் வருவார்கள். இதில் வித்தியாசமாக கீர்த்தி சுரேஷின் நண்பராக சூரி வருகிறார். விக்ரமைக் காதலிக்கவைக்க சூரி அள்ளிவிடும் ஐடியாக்கள் செம கலாட்டாவாக இருக்கும்.”

“‘சாமி-2’-ல் இருந்து த்ரிஷாவை நீக்கியது ஏன்?”

“உங்களிடம் யாரோ தவறான தகவல் சொல்லியிருக்கிறார்கள். இதில் த்ரிஷா நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். அவர் நடிப்பதற்காக அட்வான்ஸ் கொடுத்து கால்ஷீட் தேதிகளும் வாங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இனிமேல்தான் அவர் நடிக்கும் காட்சிகளைப் படமாக்க வேண்டும்.”

“ மீண்டும் பாபிசிம்ஹா வில்லனாகிவிட்டார்போல..?”

“ ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ படங்களைப் பார்த்த நாளிலிருந்தே, ‘இவரை என் படத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்தேன். அப்படி ஒருநாள் பாபியைச் சந்தித்து ‘சாமி-2’ கதையைச் சொன்னேன். திடீரென எழுந்தவர், ‘இந்தப் படத்தை நான் பண்றேன், நீங்க பின்றீங்க சார்’ என்றார் உற்சாகமாக. அந்த நிமிடத்திலிருந்தே கெட்டப்புக்காகத் தாடிவளர்க்க ஆரம்பித்தார். இப்போது வேறொரு கெட்டப்புக்காகத் தயாராகி வருகிறார். விக்ரம் சாருக்கு எப்படி ரெண்டு கெட்டப்போ, அதேபோல பாபி சிம்ஹாவுக்கும் ரெண்டு கெட்டப்புகள்.”

“சூர்யாவுடன் ‘சிங்கம்-4’ எப்போது?”

“அடுத்து சூர்யா சாரைத்தான் இயக்குகிறேன். ஆனால், அது நிச்சயமாக ‘சிங்கம்-4’ இல்லை. வேறு ஒரு தளத்தில், களத்தில் இருவரும் சேர்ந்து பயணிக்கப்போகிறோம். ஆனால், ‘சிங்கம்’ வரிசைப் படங்களைத் தொடர்ந்து பண்ணும் எண்ணமும் உண்டு.”

“உங்களால் அறிமுகம் செய்யப்பட்ட நயன்தாரா, இப்போது லேடி சூப்பர் ஸ்டார். அவரை மறுபடியும் உங்கள் படத்தில் நடிக்கவைப்பீர்களா?”

“ ‘ஐயா’வில் ஏகப்பட்ட சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடித்ததால், புதுமுக நடிகையை ஒப்பந்தம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், நயன்தாரா போட்டோவைப் பார்த்தவுடனேயே கேரளாவுக்குப் புறப்பட்டுவிட்டேன். அப்போது அவர் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். ஷூட்டிங் பிரேக்கில் அவரிடம் பேசினேன். முதலில், அவர் தமிழில் பேசியதுமே எனக்கு சந்தோஷம். அந்த நிமிடத்திலேயே அவர் ‘ஐயா’ படத்துக்குள் வந்துவிட்டார். தமிழ் சினிமாவில் நயன்தாராவின் வளர்ச்சி அபாரமானது. ‘நானும் ரவுடி’ படத்தில் நயன்தாரா நடிப்பைப் பார்த்து அசந்துபோய்விட்டேன். ‘மாயா’, ‘அறம்’ என்று நடிப்பின் உச்சத்துக்குப் போய்விட்டார். இப்போதுகூட, என் படத்தில் ஒப்பந்தமானால் அவரை ‘ஐயா’ படத்தைப்போல பாவாடை, தாவணியில்தான் நடிக்க வைப்பேன்.”

“நீங்கள் ரஜினி, விஜய்யை இயக்கும் புராஜெக்ட்ஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதே?”

“ ‘ஐயா’ படத்தின் கதையை முதலில் ரஜினி சாருக்குத்தான் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால் அப்போது அவர் வேறொரு படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். அடுத்து அவரை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ‘வேல்’ படம். சூர்யா நடித்து வெளியான அந்தப் படத்தைப் பார்த்த ரஜினிசார், ‘இந்தக் கதையை என்னிடம் ஏன் சொல்லவில்லை?’ என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டார். ரஜினி சார் எப்போது கூப்பிட்டாலும் அவருக்காக நான் காத்திருப்பேன். இதேபோல விஜய்சாருடனும் தொடர்பில் இருக்கிறேன். நானும், அவரும் சேர்ந்து பணியாற்றும் திட்டம் பல வருடங்களாகவே இருக்கிறது. ‘சிங்கம்-3’ க்கு முன்பே கதையை ரெடி பண்ணச் சொன்னார். அப்போது ‘சிங்கம்-2’-ல் பிஸியாக இருந்ததால் நாங்கள் இணைவது தள்ளிப்போனது. ‘சாமி-2’ முடித்த பிறகு விஜய் சாருக்குக் கதை சொல்லலாம் என்று எண்ணியிருந்தேன். அதற்கடுத்து சூர்யா படத்தை இயக்குவதற்கு இப்போதே ஒப்பந்தமாகி விட்டது. நானும் விஜய் சாரும் இணையும் செய்தி விரைவில் வெளிவரும்.”

“விக்ரமையும் அவரின் மகன் துருவையும் ஒரே படத்தில் இயக்கும் எண்ணம் இருக்கிறதா?”

“ ‘சாமி-2’ காதல் காட்சியில் அரைக்கைச் சட்டை அணிந்துகொண்டு விக்ரம் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது நான் அவரை ‘சீனியர் துருவ்’ என்று அழைக்க, யூனிட்டே சிரித்துவிட்டது. விக்ரம் சார் என்னை செல்லமா அடிக்கப் பாய்ந்தார். விக்ரம் சாரையும், துருவையும் இணைத்து இயக்குகிற அளவுக்கு நான் அவ்வளவு பெரிய கிரியேட்டர் கிடையாது என்பது என் எண்ணம்.”