சிரஞ்சீவியின் 151-வது படம் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’யைத் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, அமிதாப்பச்சன், ஜெகதிபாபு, கிச்சா சுதீப் ஆகியோர் நடிக்கவுள்ளனர். முதன்முறையாக விஜய்சேதுபதி தெலுங்கில் நடிக்கும் இந்தப் படத்தில் அவர் தமிழராகவே நடிக்கிறார். அவருடைய கேரக்டர் பெயர் ‘ஒப்பாயா’. படம் முழுக்க சிரஞ்சீவியுடனே டிராவல் செய்யும் விதமாக இந்த கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாம். ஒரு நல்லநாள் பார்த்து ஆரம்பிங்க!

சமீபத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது கேரளா. அங்கே பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் அண்மையில் வெளியாகின. அதில் 1.24 லட்சம் மாணவர்கள் அட்மிஷனின்போது, ‘நாங்கள் எந்தச் சாதியோ மதமோ சாராதவர்கள்’ என்று பதிவு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. அட்மிஷனில் சாதி, மதம் குறிப்பிடாமல் இருப்பதைக் கேரள இளைஞர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்புகூட கேரளக் கால்பந்தாட்ட வீரர் சி.கே.வினித் தன் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது இப்படிச் செய்திருந்தார். வாழ்த்துகள் சேட்டன்களே!

சகாரா பாலைவனம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்துவருகிறது என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். தெற்கு நோக்கி சூடானில் அதன் பரப்பளவு விரிவடைந்துவருகிறது. இத்தனை ஆண்டுகளும் விவசாயம் செய்துகொண்டிருந்த பல நிலங்களும் இன்று பாலைவனங்களாக மாறிவருகின்றன. இது சகஜமானதுதான், ஆனால் பாலைவனமாகும் வேகம்தான் பயமுறுத்துகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்! தமிழ்நாட்டுலயும்தான்!

கத்ரீனா கைஃபின் தங்கை இசபெல்லாவும் நடிக்க விருக்கிறார் என்ற தகவல் பல ஆண்டுக் காலமாக வலம் வந்து கொண்டி ருந்தது. இப்போது ‘டைம் டு டான்ஸ்’ எனும் இந்திப் படத்தில் சூரஜ் பச்சோலிக்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகி யிருக்கிறது. இதில் இசபெல்லா, லத்தீன் டான்சராகவும், சூரஜ் ஸ்ட்ரீட் டான்சராகவும் நடிக்கிறார்கள். டேன்ஸ் பேபி டேன்ஸ்!

ஹேப்பி மூடில் இருக்கிறார் ராணிமுகர்ஜி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார். ஆசிரியை கதாபாத் திரத்தில் நாயகியாக நடித்து வெளியாகியுள்ள `ஹிச்கி’ பாலிவுட்டில் சூப்பர்ஹிட். `திருமணம், குழந்தை என்று சினிமா வாழ்க்கைக்குக் கொஞ்சம் கேப் விட வேண்டிய தாயிற்று. இனி சினிமாப் பயணத்தில் இடை வெளியே கிடையாது. சரவெடிதான்’ என சந்தோஷப் பேட்டி தட்டியிருக்கிறார் ராணி! வாம்மா மின்னல்!

என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு திரைப் படமாகிறது. என்.டி.ஆர் கதாபாத் திரத்தில், அவரின் மகனான நந்தமுரி பால கிருஷ்ணாவே நடிக்க விருக்கிறார். சென்டி மென்டாக என்.டி.ஆர் கட்சி தொடங்கிய நாளான மார்ச் 29ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அச்சு அசல் என்.டி.ஆர் போலவே மாறி ஆந்திரா வையே அலற விட்டிருக் கிறார் பாலய்யா! அதிருந்தி அதிருந்தி!

தென்னிந்திய பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா யார் என்பதில் போட்டி இருக்கலாம். ஆனால், ட்விட்டர் சூப்பர்ஸ்டார் மோகன்லால்தான். அதிகம் ட்வீட் செய்யாத ரஜினிக்கு 46 லட்சம் ஃபாலோயர்ஸ், ட்விட்டரி லிருந்து அரசியல் தொடங்கிய கமலுக்கு 45 லட்சம். ஆனால், மோகன் லாலுக்கு 50 லட்சம். தினமும் நடப்பதை யெல்லாம் ட்வீட் ஆக்கும் மோகன்லாலின் நகைச் சுவை உணர்வுக்கு மொழி கடந்தும் ரசிகர்கள் குவி கிறார்கள். லாலேட்டன்டா!

அதர்வா அடுத்து நடிக்க விருக்கும் திரைப்படம் ‘பூமரங்’. கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் அதர் வாவுக்கு மூன்று கெட்டப்பு களாம். இதற்காகத் தன்னையே உருக்கித் தயார் செய்து கொண்டிருக்கிறார். நியாயமாரே!

9000 கோடி ரூபாய் கடன் வாங்கி, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையா, மூன்றாவது திருமணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறார். மல்லையாவின் விமான நிறுவனத்தில் விமானப் பணிப் பெண்ணாக இருந்த பிங்கி லவ்லாணியை மணக்கவிருக்கிறாராம். இங்கிலாந்திலேயே செட்டில் ஆகிவிட்ட விஜய்மல்லையா திருமணத்துக்குப் பிறகும் அங்கேயே இருந்துவிடத் தீர்மானித்திருக்கிறார். ரணகளத்துலயும் கிளுகிளுப்பு!

மலாலா மீண்டும் பாகிஸ் தானுக்குத் திரும்பி யிருக்கிறார். 2012-ல் தாலிபன்களால் சுடப்பட்ட பிறகு அங்கிருந்து வெளி யேறியவர், ஆறாண்டு களுக்குப் பிறகு தன்னு டைய சொந்த ஊரான மிங்கோராவுக்குச் சென்றுள்ளார். “நான் ஒரு பாகிஸ்தானி, இங்கே வாழும் உரிமை எனக்கும் இருக்கிறது. படிப்பு முடிந்ததும் இங்கேயே நிரந்தரமாகத் தங்கப் போகிறேன்” எனப் பேட்டி கொடுத்திருக்கிறார். சல்யூட்!