Published:Updated:

`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்!'' - #MeToo பற்றி ராதாரவி

`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்!'' - #MeToo பற்றி ராதாரவி
`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்!'' - #MeToo பற்றி ராதாரவி

``இப்படிக் குற்றச்சாட்டு சொன்னால், என் குடும்பம் அவமானப்படுது. என் மனைவி, என் பொண்ணு வருத்தப்படறாங்க. நானும் குடும்பஸ்தன்தானேம்மா. மீ டூ சொல்லி குடும்பங்களைக் கலைச்சுடாதீங்க.

பாலியல் தொல்லையில் நானும் பாதிக்கப்பட்டேன் என்கிற `மீ டூ' ஹேஷ்டேக் விஷயத்தில், வடக்கே நானா படேகரில் ஆரம்பித்து, தெற்கில் வைரமுத்து வரை பாலியல் தொல்லைப் புகாரில் சிக்கியுள்ளனர். நடிகர் ராதாரவியும் இந்த அலையில் தப்பவில்லை. `என்னை வீட்டுக்கு அழைத்தார்' எனப் பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர், ராதாரவி மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். அதுபற்றி ராதாரவியிடம் கேட்டேன். படபட எனத் தன் கருத்துகளைச் சொன்னார்.

``இந்த `மீ டூ' விஷயத்தில் மற்ற ஃபீல்டு பற்றி நான் எதுவும் பேச விரும்பலை. என் குடும்பமா நினைக்கும் சினிமா கலைஞர்கள் பற்றி மட்டுமே பேசுவேன். ஏன்னா, இந்த `மீ டூ' எத்தனை சினிமா கலைஞர்களின் குடும்பங்களைப் பாதிக்கப்போகுதோ தெரியலை.

என் மேலேயும் புகார் வந்திருக்கிறதா என் ஃப்ரெண்டு சொன்னார். அதை சின்மயி சொல்லலை. யார் சொன்னாலும் நிரூபிக்கணும். படத்தில்தான் நான் வில்லன். போகிறபோக்கில் குற்றம்சாட்டிட்டுப் போயிடாதீங்க. என் மேலே குற்றம் சுமத்தின பொண்ணுக்குக் குழந்தை இருந்தால், அந்தக் குழந்தையைக் கீழே போட்டு தாண்டிட்டு என் மேலே குற்றம் சொல்லட்டும். எனக்கு மேலே வீடு, கீழே ஆபீஸ். தனியா ஆபீஸ் வெச்சுக்கிற வசதி இல்லை. `வீட்டுக்கு வா'னு கூப்பிட்டது தப்பான அர்த்தமா? அப்போ, வர முடியலைன்னா வெளியே நில்லு. அதை விட்டுட்டு இப்படிக் குற்றச்சாட்டு சொன்னால், என் குடும்பம் அவமானப்படுது. என் மனைவி, என் பொண்ணு வருத்தப்படறாங்க. நானும் குடும்பஸ்தன்தானேம்மா. மீ டூ சொல்லி குடும்பங்களைக் கலைச்சுடாதீங்க.

நேற்றும் நடிகை ராணி, நடிகர் சண்முகராஜன் மேலே கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வாபஸ் வாங்கிட்டாங்க. சொந்தக் காரணங்களுக்காக `மீ டூ'வை யூஸ் பண்ணாதீங்க. முதல்ல சினிமா பற்றிப் புரிஞ்சுக்கங்க. ஒரு நடிகை ஸ்டன்ட், டான்ஸ் சீனில் நடிக்கிறப்போ மாஸ்டரின் கை அவங்க மேலே படாமல் எப்படி இருக்கும்? சினிமா துறையில் இந்த மாதிரி நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருக்கு. ஒரு மேக்கப் மேன். கலர் குறைச்சலாக இருக்கும் கதாநாயகிகளுக்கு உடம்பு முழுக்க பான்கேக் ஸ்டிக் போடுவாங்க. அப்போ, மேக்கப் மேனின் கைகள் படத்தான் செய்யும். இது தப்பா? ஒரு ஹீரோயினை என் படத்தில் நடிக்கிறதுக்காக புக் பண்றேன். அவங்க வீட்டுக்கு போய்தான் கதையைச் சொல்லணும். அவங்க என் மேலே ஏதாவது புகார் சொல்லிட்டா என்ன ஆகறதுன்னு பயந்துட்டு, வீட்டின் கார் பார்க்கிங்கில் வெச்சா கதை சொல்லமுடியும்? 30 நாள் அவுட்டோர் ஷூட்டிங்னு போவோம். ஹீரோ, ஹீரோயின், வில்லன், டைரக்டர், தயாரிப்பாளர், மேக்கப் மேன், டச்சப், சமையல்காரம்மா என எல்லோருமே ஒரே குடும்பமா இருப்போம். அப்போ, இலை மறை காய் மறையா எவ்வளவோ தவறுகள் நடந்திருக்கு. பரஸ்பரம் சம்மதம் இல்லைன்னா தப்புகள் நடக்காது. அந்த வித்தியாசத்தை நீங்க புரிஞ்சுக்கணும். அதுக்காக, மொத்த சினிமாவையும் கொச்சைப்படுத்தினா எப்படி?

முன்னாடி நடிகர் சங்க உறுப்பினர்கள் என் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு போர்டு வைக்கலாமான்னு யோசிச்சேன். இப்போ, பெண்கள் என் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு போர்டு வைக்கலாமான்னு இருக்கேன். டப்பிங் யூனியனின் தலைவர் நான். `என் குடும்பத்தைக் காப்பாற்ற டப்பிங் வாய்ப்பு கொடுங்க'னு உதவி கேட்டு வரும் பெண்கள், இனிமே ரோட்டுல நின்னுதான் கேட்கணும்.  நான் இப்படிப் பேசறதால வைரமுத்துக்கு சப்போர்ட். மீ டூ பெண்களுக்கு எதிரின்னு நினைச்சுடாதீங்க. நீங்க சொல்ற குற்றச்சாட்டு உண்மைன்னா, நானும் மீ டூவை சப்போர்ட் பண்றேன்.'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு