Published:Updated:

`ஆடிஷன் பண்ணார்; நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டார்!' - ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி

`ஆடிஷன் பண்ணார்; நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டார்!' - ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி
News
`ஆடிஷன் பண்ணார்; நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டார்!' - ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி

`ஆடிஷன் பண்ணார்; நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டார்!' - ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி

பட வாய்ப்புகள் தருவதாகச் சொல்லி தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாக, டோலிவுட்டிலும் ஹோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர், ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் எனக்கான நீதி கிடைக்கவில்லை. தமிழ்நாடு எனக்கான வலியை வெளியே கொண்டுவந்திருக்கிறது என்று கூறிய ஸ்ரீரெட்டி, சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் குடியேறி வசித்துவருகிறார். இந்நிலையில், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்ததாகவும், அவர் படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். 


இதுகுறித்து ஸ்ரீரெட்டியைத் தொடர்புகொண்டு பேசினோம். "நான் சென்னைக்கு வந்த புதிதில் லாரன்ஸ் மாஸ்டர் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. அவர் சொன்ன நேரத்துக்கு நான் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். வீட்டில் நுழைந்தவுடன் பக்திமயமாக இருந்தது. நிறைய கடவுள்களின் போட்டோக்கள் இருந்தன. அவர் ட்ரஸ்ட்ல வளர்ற நிறையக் குழந்தைகள், படம் பார்த்துட்டு இருந்தாங்க. நானும் அவங்களோட சேர்ந்து கொஞ்ச நேரம் படம் பார்த்துட்டிருந்தேன். அப்புறம் லாரன்ஸ் வந்தார். சினிமா பத்தி பேசிட்டிருந்தோம். அவரும் அங்கிருந்த குழந்தைகளும் ரொம்ப நல்லா பேசினாங்க. நடிப்பு, டான்ஸ்னு பண்ணச் சொல்லி என்னை ஆடிஷன் பண்ணார். நான் பெர்ஃபார்ம் பண்ணி முடிச்சதும், நல்லாயிருந்ததுனு சொல்லி அவர் டைரக்ட் பண்ற அடுத்த படத்துல, முக்கியமான ரோல்ல நடிக்கிறீங்கன்னு சொன்னார். அன்னைக்கு சொன்னதை ரெண்டு நாளுக்கு முன்னாடி போன் பண்ணி உறுதிப்படுத்திட்டாங்க. அந்தப் படம் பத்தின அறிவிப்பு சீக்கிரம் வரும்" என்றார்.