Published:Updated:

முடிவில் மாற்றம்... பைரசி எடுக்கப்பட்ட தியேட்டர்களில் வடசென்னை, சண்டக்கோழி 2 ரிலீஸ்?

முடிவில் மாற்றம்... பைரசி எடுக்கப்பட்ட தியேட்டர்களில் வடசென்னை, சண்டக்கோழி 2 ரிலீஸ்?
முடிவில் மாற்றம்... பைரசி எடுக்கப்பட்ட தியேட்டர்களில் வடசென்னை, சண்டக்கோழி 2 ரிலீஸ்?

முடிவில் மாற்றம்... பைரசி எடுக்கப்பட்ட தியேட்டர்களில் வடசென்னை, சண்டக்கோழி 2 ரிலீஸ்?

ஒரு திரைப்படம் வெளியான அன்றைய தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்துவிடுகிறது. இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாகப் படம் பிடிக்கப்பட்டுதான் வெளியாகிறது என்று ஆதாரபூர்வமாக உறுதி செய்த தயாரிப்பாளர் சங்கம், அவ்வகையில் திருட்டுத்தனமாகp படம் பிடிக்கப்பட்ட 10 திரையரங்குகளையும் அடையாளம் கண்டு சட்டரீதியாக வழக்கும் தொடர்ந்துள்ளது. ஆனால், மேலும் தொடர்ந்து இது நடந்துகொண்டுதான் வருகிறது.  

திருட்டுத்தனமாக  பைரசி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்ட தியேட்டர்கள்:

1. கிருஷ்ணகிரி முருகன் ... மனுசனா நீ

2. கிருஷ்ணகிரி நயன்தாரா ... கோலிசோடா 2

3. மயிலாடுதுறை கோமதி ... ஒரு குப்பைக் கதை

4. கரூர் எல்லோரா ... ஒரு குப்பைக் கதை

5. ஆரணி சேத்பட் பத்மாவதி ... மிஸ்டர் சந்திரமௌலி

6. கரூர் கவிதாலயா ... தொட்ரா 

7. கரூர் கவிதாலயா ... ராஜா ரங்குஸ்கி

8. பெங்களூரு சத்யம் ... இமைக்கா நொடிகள்

9. விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் ... சீமராஜா

10. மங்களூர் சினிபொலிஸ் ... சீமராஜா.

மேற்கண்ட திரையரங்குகளுக்கு இனி எந்த விதமான ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் விஷால் தெரிவித்தது மட்டுமல்லாமல் அவரது சண்டக்கோழி 2 படத்தை தரமாட்டோம் என உறுதியளித்தார். அதுமட்டுமின்றி அக்டோபர் 17, 18-ம் தேதிகளில் வெளியாகும் மற்ற புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் qube நிறுவனத்துக்குக் கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கம் விடுத்த அறிக்கையில் 'இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படத்தையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று qube நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்' என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படம் மறுக்கப்பட்ட திரையரங்குகளுக்கு ஆதரவாக இறங்கிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் "10 திரையரங்குகள் மீதான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி-2' திரைப்படத்தைத் திரையிட மாட்டோம்!" எனத் திருச்சியில் அறிவித்தது. இதுகுறித்து கூடுதல் தகவல்கள் பெற வடக்கு மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் பேசினோம். அப்போது அவர் " ஒரு தியேட்டர்ல எந்த முதலாளியும் ஆள்போட்டுத் திருட்டுத்தனமா பைரசி எடுக்கிறதில்ல. மேலே குறிப்பிட்ட 10 தியேட்டர்கள்ல பெங்களூர் சத்யம் திரையரங்கமும் இருக்கு. அதனால இங்க சென்னையில இருக்க சத்யம் தியேட்டருக்குப் படம் கொடுக்காமல் இருக்கத் தயாரிப்பாளர்களால் முடியாதல்லவா. அப்படித்தானே ஏனைய திரையரங்க உரிமையாளர்களும். வடசென்னை, சண்டக்கோழி படங்களை அந்த 10 திரையரங்கிலும் திரையிடுவதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுள்ளோம். இந்தப் பைரசி விஷயத்தை வரும் செவ்வாய்க்கிழமை தியேட்டர் ஓனர்களோட பேசி முடிவு எடுக்கப்டும். தற்போதைக்கு இந்த வாரம் வந்துள்ள மூன்று படத்தையும் ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துருக்கோம்' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு