அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

னுஷ் இயக்கத்தில் வெளியான ‘ப.பாண்டி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைக் கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளனர். அதில் தனுஷ் வேடத்தில் சுதீப்பும், ராஜ்கிரண் வேடத்தில் அம்பரீஷும் நடிக்கவுள்ளனர். ரேவதி கேரக்டரில் நடிக்க குஷ்புவிடமும் ரம்யா கிருஷ்ணனிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

மிழ் சினிமா ஸ்ட்ரைக் ஒரு மாதத்தைத் தாண்டித் தொடர்ந்துவரும் நிலையில், உச்ச நட்சத்திரத்தின் இரண்டெழுத்துப் படம் ஒன்று ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், இந்தப் படத்தின் வெளியீட்டுடன் ஸ்ட்ரைக்கை முடிக்கத் திரையரங்க உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

‘ஜோக்கர்’ படத்தில் ‘இசை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி கிருஷ்ணா, மலையாள ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவர் நடித்த ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ படம், பல விருதுகளைப் பெற்று விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

வைரல்

டிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகிறது. சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். அவர்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து இப்போது மதுரவாணி கேரக்டரில் நடிக்கும் சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதை சமந்தா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

ராய் லட்சுமி கிளாமரில் அதிரடியாக நடித்த ‘ஜூலி 2’ படம் ஹிட் ஆகவில்லை. ஆனால், அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கும் ராய் லட்சுமி, விரைவில் பஞ்சாபி, மராத்தி ஆகிய மொழிகளிலும் அறிமுகமாக உள்ளார்.

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

கோ
லிவுட்டில் சுசி லீக்ஸ் வெளியானது போல், டோலிவுட்டில் ஸ்ரீலீக்ஸ் என இயக்குநர்கள், நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவர், இயக்குநர் சேகர் கம்முலுமீது குற்றம்சாட்டியுள்ளார். ‘தவறான நடத்தை கொண்டவர். பெண்களைப் படுக்கைக்கு அழைக்கிறார். கடவுள் ஒருநாள் அவரைத் தண்டிப்பார்’ எனத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ்டர் மியாவ்

ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் டப்ஸ்மாஷ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது அனுபமா பரமேஸ்வரனின் ஹாபி. லேட்டஸ்டாக ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நித்யா மேனன் பேசும் காதல் வசனங்களை டப்ஸ்மாஷ் செய்துள்ளார். 

மிஸ்டர் மியாவ்

‘இறைவி’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களின்மூலம் தன் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை பூஜா தேவரையா. இவரது நடிப்பில் தமிழில் சில படங்கள் வெளியாகக் காத்திருக்கும் நிலையில், ‘கதையொண்டு சுருவாகிடே’ படம்மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறார்.