Published:Updated:

ஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ்! - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான் சரண்

ஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ்! - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான் சரண்
ஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ்! - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான் சரண்

`வடசென்னை' படத்தில் நடித்திருக்கும் சரண் படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

`` `வடசென்னை' படத்துல பார்த்த மாதிரி பக்கா சென்னைப் பையன் நான்; பெரம்பூர் ஏரியா. வீட்டுக்கு ஒரே பையன். அதனால செல்லம் அதிகம். சின்ன வயசிலே இருந்தே நிறைய சினிமாக்கள் பார்ப்பேன். ஆனா, சினிமாவுல நடிக்கணும்ங்கிற ஆசை எனக்குள்ளே இருந்ததே இல்லை...'' உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் `வடசென்னை' படத்தில் தனுஷுக்கு மச்சானாக நடித்த சரண். 

சரண் சிறுகுறிப்பு வரைக...

``இப்போதாங்க காலேஜ் முடிச்சேன். எங்க அப்பாவுக்கு சினிமாவுல நடிக்கணும்னு ஆசை இருந்தது. அதற்காக அவர் முயற்சியும் பண்ணினார். சொல்லிக்கிற மாதிரியான கேரக்டர்ல நடிக்கிற வாய்ப்பு அவருக்கு அமையவே இல்லை. அதனால, நான் சினிமாவுல நடிக்கணும்னு எனக்கும் சேர்த்து அவர் கனவு காண ஆரம்பிச்சிட்டார். அவருடைய கனவும் நிறைவேறிடுச்சு. 

சின்ன வயசுல இருந்தே என்னோட போட்டோவை எடுத்துட்டு ஒவ்வொரு புரொடியூசர் ஆபீஸ், ஷூட்டிங் ஸ்பாட்டுனு போய் எனக்காக வாய்ப்புக் கேட்பார். நான் பத்தாவது படிச்சப்போ பாலசந்தர் சார் எடுத்த `அமுதா ஒரு ஆச்சரியக்குறி' நாடகத்துல நடிச்சேன். ரெண்டு வருஷம் இந்த சீரியலில் ரேணுகா மேடம் பையனா நடிச்சேன்.’’

ஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ்! - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான் சரண்

மணிரத்னம் படத்துல நடிச்ச அனுபவம் பற்றி?

`` `கடல்' படத்துல கெளதம் கார்த்திக்கோட சின்ன வயசு ரோலில் நடிச்சிருப்பேன். இந்த ரோலுக்காக மணி சார் நிறைய பசங்களை ஆடிஷன் பண்ணியிருக்கார். அவருக்கு யாருடைய முகமும் கெளதம் கார்த்திக் ரோலுக்கு செட்டாகல. என்னோட போட்டோ பார்த்துட்டு என்னை கமிட் பண்ணினார். அவர் எப்படினு அப்பாகிட்ட கேட்டுதான் தெரிஞ்சிக்கிட்டேன். 

அவர் ரொம்ப அமைதியா என்கிட்டப் பேசி, பழகுனார். ஒரு மாசம் எனக்கு நடிப்பு பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். என்னோட ஸ்கின் டோன் கொஞ்சம் கறுப்பாத் தெரியணும்னு, தினமும் குறைஞ்சது சில மணிநேரமாவது வெயிலில் நின்னு பட்டம் விடச் சொல்லுவார். அதே மாதிரி `கடல்' படத்துல நிறைய காட்சிகள் கடலில் நீச்சல் அடிக்கிற மாதிரி இருந்தது. அதற்காக என்னை நீச்சல் க்ளாஸூக்கு அனுப்பி வெச்சார். இப்படி அந்தப் படத்துல நடிக்கிறதுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்ணினேன். 

ஸ்கூல் படிச்சப்போ நிறைய ஸ்டேஜ் பியர் எனக்குள்ளே இருந்துச்சு. அசெம்பிளி நடக்கும்போது முதல் வரிசையில் நிக்க மாட்டேன். ஸ்கூல் நாடகங்களில் நடிச்சது இல்லை. ஆனா, படத்துல நடிச்சப்போ கேமரா பார்த்து பயப்படமா நடிச்சிட்டேன். அப்பாவே என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.’’

அப்போ, `சகா' படத்தோட வாய்ப்பு `கடல்’ படத்துக்கு அப்புறம்தான் அமைந்ததா?

``ஆமா. `கடல்' படத்துல என்னோட நடிப்பைப் பார்த்துதான் முருகேஷ் சார் என்னை அவருடைய `சகா' படத்துல நடிக்கக் கூப்பிட்டார். லீட் ரோல் பண்ணியிருக்கேன். மூணு சாங்ஸ், நாலு ஃபைட் சீன்ஸ் படத்துல எனக்கு இருக்கு. படத்தோட கதை ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் ரிவெஞ் டிராமா. காதல் காட்சிகள் சின்ன டிராக் மட்டும்தான். `கோலி சோடா' படத்துல நடிச்ச கிஷோர், ஶ்ரீராம், தமிழ் மூணு பேரும் என்னோட நண்பர்களா நடிச்சிருக்காங்க. டைரக்டர் பாண்டியராஜன் சார் பையன் ப்ரித்திவிராஜன்தான் படத்தோட வில்லன் கேரக்டரில் நடிச்சிருக்கார். முக்கியமா `யாயும் யாயும்' பாட்டோட டீசரே செம வைரல் ஆச்சு. இந்தப் பாட்டை படத்தோட ஷூட்டிங் முடிச்சதுக்குப் பிறகு சும்மா கம்போஸ் பண்ணிதான் தனியா ஷூட் பண்ணினோம். அது நல்ல வைரல் ஆயிருச்சு. படத்தோட ரிலீஸூக்காக மொத்த யூனிட்டும் வெயிட் பண்றோம்.’’

ஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ்! - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான் சரண்

`வடசென்னை' வாய்ப்பு எப்படி அமைந்தது?

`` `வெற்றிமாறன் சார் `வடசென்னை' படம் எடுக்கிறார்; ஃபர்ஸ்ட் ஷெடியூல் முடிச்சிருச்சு’னு கேள்விப்பட்டேன். எப்படியாவது இந்தப் படத்துல ஒரு சீன்லயாவது நடிக்கணும்னுங்கிறது என்னோட கனவு. ஆனா, நான் ஓவர் வெள்ளையா இருக்கிறனால இந்தப் படத்தோட வாய்ப்பு கிடைக்காதுனு தோணுச்சு. சரி, முயற்சி பண்ணுவோம்னு வாய்ப்பு தேடி வெற்றிமாறன் சார் ஆபீஸுக்குப் போனேன். முதல் நாள் போனேன். அவருடைய ஆபீஸ் உள்ளேயே போகமுடியல. ரெண்டாவது நாள் போனேன். நான் போகவும், வெற்றி சார் வெளியே கிளம்பிப் போகவும் சரியா இருந்தது. அவரைப் பார்க்கவே முடியல. சரினு என்னோட வேலையைப் பார்க்கப் போயிட்டேன். 

ஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ்! - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான் சரண்

அதுக்கு அப்புறம் ஆறுமாசம் கழிச்சு வெற்றி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு. `படத்தோட ஆடிஷனில் கலந்துக்கோங்க'னு சொன்னாங்க. நம்ம எதிர்பார்த்த நாள் வந்துருச்சுனு சந்தோஷப்பட்டேன். அப்புறம் ஆடிஷன் போய் கலந்துக்கிட்டேன். சென்னை பாஷை பேசி நடிச்சேன். வெற்றி சாரைப் பார்த்தேன், `கடல்' படத்துல நடிச்சது பற்றிச் சொன்னேன். `ஓ... அது நீதானா..!'னு கேட்டுட்டு என்னை கண்ணன் கேரக்டருக்கு ஓகே பண்ணிட்டார்.’’

தனுஷ்கூட நடிச்ச அனுபவம்?

``எனக்கு இன்ஸ்பிரேஷன் தனுஷ் சார். அவருடைய `பொல்லாதவன்' படம் எனக்குப் பிடிக்கும். தனுஷ் சாருக்கும் எனக்குமான உறவு நீண்ட வருடமாகவே இருக்கிறதா நான் நினைக்கிறேன். ஏன்னா, `மாப்பிள்ளை' படத்தோட ஆடியோ லான்ச் அப்போ என் அப்பா என்னோட சின்ன வயசு போட்டோவை அவர்கிட்ட காட்டி ஆட்டோகிராப் வாங்கிட்டு வந்திருக்கார். அப்புறம் `மாரி' படத்தோட ஷூட்டிங் போயிட்டிருந்தப்போ என்னோட விளம்பரப் படத்தோட ஷூட்டிங் பக்கத்து செட்டில் போயிட்டிருந்தது. அப்போ தனுஷ் சாரை நேர்ல பார்த்து போட்டோ எடுத்துக்கிட்டேன். அவரைப் பார்த்து வளர்ந்த பையன் நான். 

`வடசென்னை’ ஷூட்டிங் ஸ்பாட்ல முதல் வாரம் எங்க ரெண்டு பேருக்கும் இடையே பெரிசா எந்த உரையாடல்களும் இல்லை. அதுக்கு அப்புறம் ரெண்டு பேருக்குமான சீன்ஸ் வந்தப்போ ரொம்ப நெருக்கமாப் பழக ஆரம்பிச்சிட்டோம். தனுஷ் சார் எப்போ என்னைக் கூப்பிட்டாலும் `டேய் கண்ணா'னு கேரக்டர் பேரைச் சொல்லிதான் கூப்பிடுவார். அவருக்கு சரண்ங்கிற என்னோட பேர்கூட மறந்திருச்சு. அந்தளவுக்கு அவர் கண்ணன்கூட அட்டாச் ஆயிட்டார். என்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரியும். எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கார். அடுத்த படம் செலக்ட் பண்றப்போ கவனமா இருக்கணும்னு சொல்லியிருக்கார். அவர் எனக்கு காட்ஃபாதர் மாதிரி.

ஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ்! - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான் சரண்

இந்தப் படத்துல முதல் முறையா சென்னை பாஷை பேசியிருக்கேன். நிறைய புது வார்த்தைகளைக் கத்துக்கிட்டேன். படத்துல எங்க அப்பாவை நான் அடிக்கிற காட்சியை தியேட்டர்ல நிறைய பேர் கைதட்டி ரசிச்சாங்க. அந்த சீன்ல அவரை உண்மையாவே அடிச்சிட்டேன். அப்புறம் அதுக்காக சாரி கேட்டேன். இந்த சீன் நடிச்சி முடிச்சவுடனே நிறைய பேர் எனக்கு வாழ்த்துகள் சொன்னாங்க. அதே மாதிரி படத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச சீன் தீனா அண்ணாவைக் கொலை பண்ற சீன். இந்த சீன்ல நடிக்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இந்தப் படம் எனக்கொரு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கு. சினிமாப் பின்புலமே இல்லாம சினிமாக்குள்ள  வந்திருக்கிற பையன் நான். இன்னும் நல்ல நல்ல கதைகளில் நடிக்கணும். இதுதான் என்னோட ஆசை'' என்று முடித்தார் சரண்.

பின் செல்ல