தமிழுக்கு வருகிறார் பாலிவுட் ஸ்டார் நவாஸுதீன் சித்திக். ரஜினி நடித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் வில்லன் விஜய்சேதுபதியோடு முக்கியமான ரோலில் நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார். “தமிழில் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுநாள்வரை நிறைய கமிட்மென்ட்டு களால் தமிழில் நடிக்க முடியாமல் இருந்தது. இனி வருடம் ஒரு படமாவது நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்!” என்கிறார் தோழர் நவாஸுதீன்! சூப்பர் காம்ரேட்!

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்து அண்மையில் ரிலீஸான ‘டகரு’ அங்கே பட்டிதொட்டி யெங்கும் தாறுமாறு ஹிட்டடித்திருக்கிறது. சிவராஜ் குமாரின் அப்பா மறைந்த ராஜ்குமாரின் அந்நாளைய மெகா ஹிட்களைவிட இவர் வசூலில் இமாலய சாதனை படைத்திருப்பதால், ராஜ்குமாரின் ரசிகர்களும் கட் அவுட், பாலாபிஷேகம் எனக் கொண்டாடி வருகிறார்கள். இந்தி பேசும் மாநிலங் களிலும் டப்பிங் செய்யப்படாமலேயே ரிலீஸாகி ஹிட் அடித்திருப்பதால் ‘சிவாண்ணா’ விரைவில் தமிழ்ப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. `வஜ்ரகாயா’ படத்தில் ஏற்கெனவே நம்ம சிவகார்த்திகேயன் `கேமியோவாக’ நடனம் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காவிரியைக் கண்ணுல காட்டுங்க பாஸு!

இந்தியப் பெண்கள் அணியின் விராட் கோலியாக விஸ்வரூபம் எடுத்துவருகிறார் ஸ்மிரிதி மந்தனா. கடந்த 3 மாதங்களாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அனைத்து அணிகளையும் பந்தாடியவர், விளையாடிய கடைசி 10 இன்னிங்ஸ்களில் 7 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஓப்பனராகக் களமிறங்கி இவர் வெளுக்கும் சிக்ஸர்களைப் பார்ப்பதற்காகவே மகளிர் கிரிக்கெட் பக்கமும் பார்வையைத் திருப்பியுள்ளனர் இந்திய ரசிகர்கள். மித்தாலி ராஜ் விரைவில் ஓய்வுபெறப்போகும் நிலையில், மந்தனாதான் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் என இப்போழுதே ஏகப்பட்ட பேச்சு. இவர் ஜெர்சி நம்பரும் விராட் கோலி அணிந்திருக்கும் அதே 18 தான். லேடி கோலி!

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து வரும் படம் ‘ஜீரோ.’ மும்பை நகரிலிலுள்ள வசை என்னும் இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஷாருக் வசிக்கும் பாந்த்ரா விலிருந்து வசைக்கு
50 கிலோ மீட்டர் தொலைவு. மும்பை டிராபிக்கில் கார் பயணம் மேற்கொண்டால் 3 மணி நேரம் வீணாகும் என்பதால் ஷாருக் தனது ஹெலிகாப்டரில் படப் பிடிப்புக்குச் சென்று வருகிறார். இருக்கப்பட்ட மகராசன்!

ஹாங்காங்கில் பிறந்து, லண்டனில் வளர்ந்த கேத்ரீனா கைஃப் 2003-ல் வெளியான ‘பூம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஷாருக்கானுடன் நடித்து வரும் இவர் தனது சுயசரிதையைப் புத்தகமாக எழுதத் திட்டமிட்டுள்ளார். ‘பார்பி ட்ரீம்ஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான், லண்டன், பெல்ஜியம் என்று பல நாடுகளில் வசித்த அனுபவம் கேத்ரினாவுக்கு உண்டு என்பதால், பெர்சனலோடு வேறு சில சுவாரஸ்யங்களும் புத்தகத்தில் எதிர்பார்க்கலாம்! ‘பார்பி’ஸ் பயோ!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ இசை யமைப்பாளர் யாரென்று அதிகார பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. ஷங்கர் - அனிருத் மீட்டிங் நடந்து, நான்கு பாடல்கள் அனிருத்திடம் ரெடியாக இருக்கிறதாம்! கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கும் அனிருத் இசையமைக் கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராக்ஸ்டார் ராக்ஸ்!

ரிலீஸுக்கு முன்பே அனலை வீசியிருக்கிறார் ‘பிரின்ஸ்’ மகேஷ் பாபு. கொரட்டலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘பாரத் அனே நேனு’ படத்தில் ஆந்திர அரசியலைப் பிழிந்து காயப்போட்டிருக்கிறார்கள். ஃபாரின் ரிட்டர்ன் மகேஷ் பாபு ஆந்திராவின் நிலையைக் கண்டு பொங்கி, பெற்றோரின் சத்தியத்துக்காக அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடிப்பதே கதை. நம் ஊர் ‘தலைவா’ அளவுக்கு எதிர்ப்பில்லை என்றாலும் ஒரு சில தெலுங்கு தேச ஆட்கள் புகைச்சலைக் கொடுத்து வருகிறார்கள். ‘இது கமர்ஷியல் மசாலா மட்டுமே. அரசியல் கம்மிதான்!’ என்று ஆடியோ ரிலீஸில் கூல் ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் சரத்குமார். மகேஷ் பாபுவின் அப்பாவாக நடித்திருக்கிறார் சுப்ரீம் ஸ்டார். தண்ணி காட்டுங்க!

பாரம்பர்ய இசைக்கருவிகளைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று ஏ.ஆர். ரஹ்மானை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆவணப் படத்தின் ஒரு பகுதியாக கேரள மாநிலத்தில் இசைக்கப்படும் ‘மிழாவு’ என்ற இசைக்கருவி குறித்த படப்பிடிப்பு, திருச்சூர் மாவட்டம் செரு துறுத்தியி லுள்ள கேரள கலாமண்டலத்தில் நடைபெற்றது. இந்த ஆவணப்படத்தை ஏ. ஆர். ரஹ்மானை அறிமுகப்படுத்திய கவிதாலயா நிறுவனம் தயாரிக்கிறது. வான்... வருவான்!