Published:Updated:

`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்

`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்
`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்

`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்

தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்திருக்கும் திரைப்படம் 'வடசென்னை'. சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா போன்றோர் படத்தில் நடித்துள்ளனர். படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக வடசென்னை மக்களின் மீனவ சமுதாயத்தைக் குற்றவாளியாக கொச்சைப்படுத்திவிட்டார்கள் என்று சிலர் கூறி வருகின்றனர். இந்தப் படம் வடசென்னை மக்களின் வாழ்வியலை கூறவே இல்லை என்றும் பலர் சமூக வலைதளங்களில் பட்டை தீட்டி வரும் வேளையில், வழக்கறிஞர் சார்லஸ் படம் குறித்து புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடன் பேசினோம்..

``சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறேன். சமூக நீதிக்கான சங்கம் ஒன்றை தொடங்கி சமூக நலனுக்காகப் போராடவும் செய்வோம். 'வடசென்னை' படம் பார்க்கும்போது நிறைய கெட்ட வார்த்தைகள் இருந்தது. கெட்டவார்த்தைனு தெரிஞ்சே இயக்குநர்

படத்துல பயன்படுத்திருக்கார். படத்தில் காட்டக்கூடிய ஏரியா மக்கள் எல்லோரும் இந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துறது இல்லை. பொதுவெளியில் கெட்டவார்த்தைகள் பேசுறது தப்பு. அதை தியேட்டரில் படமா போட்டு காட்டுறது பெரிய தப்பு இல்லையா. படத்துல நீங்க இந்த வார்த்தைகளை வசனங்களா பயன்படுத்துனது சரினு சொன்னா..! நான் புகார் கொடுத்ததும் சரிதான்.

படம் சென்சார் போர்டு பார்வைக்குப் போயிட்டுதான் வந்திருக்கும். எப்படி இத்தனை கெட்ட வார்த்தைகளோட படத்தை ரிலீஸ் பண்ண விட்டாங்கனு தெரியல. அங்கே ஏதோ ஊழல் நடந்திருக்கும். அடல்ட் படம்னு சொல்றாங்க. ஆனா, அம்மாகூட உட்கார்ந்து இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. நாளைக்கு படத்தோட பேருலேயே கெட்டவார்த்தை வைத்து படத்தை ரிலீஸ் பண்ணுவாங்க. அதனாலதான் சமூகம்சார்ந்த அக்கறையுடன் புகார் கொடுத்திருக்கேன். மற்றபடி வெற்றிமாறனுக்கும் நமக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. 

அடுத்த கட்டுரைக்கு