Published:Updated:

“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்!”

“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்!”

சனா

“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்!”

சனா

Published:Updated:
“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்!”

“ஒரு படத்துல எவ்வளவு பெரிய நடிகர் நடித்திருந்தாலும், அதை எவ்வளவு பிரபலமான இயக்குநர் இயக்கிருந்தாலும், அந்தப்  படம் சாதராண மக்களின் வாழ்க்கையைப் பத்திப் பேசலைனா கண்டிப்பா ஹிட் ஆகாது. அதனாலேயே, நான் எடுக்கும் படங்களின் கதையை சாதாரண மக்களின் வாழ்க்கையோட தொடர்புபடுத்திப் பார்ப்பதுபோல்தான் எடுப்பேன்’’ - சீரியஸாகப் பேச ஆரம்பிக்கிறார், இயக்குநர் ரவிஅரசு. ‘ஈட்டி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜி.வி.பிரகாஷை வைத்து, ‘ஐங்கரன்’ படத்தை இயக்கியிருக்கிறார். 

“கதை எழுதும்போது இதில், பெரிய ஹீரோ யாராவது நடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சுதான் எழுதினேன். முக்கியமா தனுஷ், விஜய்சேதுபதி ரெண்டுபேர்ல ஒருத்தர் இந்தக் கதைக்குப் பொருத்தமா இருப்பாங்கனு எனக்குத் தோணுச்சு. தனுஷ்கிட்ட கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கலை. விஜய் சேதுபதியைப் பார்த்து கதை சொன்னேன். அவர், ‘சூப்பரா இருக்கு சார், டெவலப் பண்ணுங்க’னு சொன்னார். ஆனா, அவர் ரொம்ப பிஸி ஷெட்யூல்ல  இருந்ததுனால, நடிக்க முடியலை. ‘நீங்க வேற யாரையாவது வெச்சுப் படத்தை எடுங்க ப்ரோ... நாம அடுத்தமுறை கண்டிப்பா சேர்ந்து வொர்க் பண்ணுவோம்’னு சொல்லிட்டார். அதுக்கு அப்புறம்தான் ஜி.வி.பிரகாஷ் கமிட் ஆனார். தவிர, தமிழில் சாய் பல்லவிக்கு ‘ஐங்கரன்’தான் முதல் படமாக அமைஞ்சிருக்கணும். அவங்ககிட்டேயும் இந்தக் கதையைச் சொன்னேன். கால்ஷீட் பிரச்னையால நடிக்க முடியலை. அதனால், படத்தோட ஹீரோயினா மஹிமா நம்பியாரை கமிட் பண்ணேன். என் அடுத்த படத்துல கண்டிப்பா பெரிய ஹீரோதான். அதுல, உறுதியா இருக்கேன்.

“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்!”

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்கள்ல நான் வெற்றிமாறன் சாருக்கு உதவி இயக்குநரா இருந்தப்பவே ஜி.வியை எனக்கு நல்லாத் தெரியும். என் முதல் படம் ‘ஈட்டி’க்கு அவர்தான் மியூசிக். அப்போகூட எனக்கு ஜி.வியை வெச்சுப் படம் பண்ற ஐடியா இல்லை. ‘ஈட்டி’ படத்துக்குப் பிறகு ஒருநாள் நானும், ஜி.வியும் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ, ‘ரெண்டாவது படம் ஏன் ப்ரோ லேட் ஆகுது?’னு கேட்டார், காரணம் சொன்னேன். ‘நான் நடிக்கிறேன்’னு சொன்னார். முதலில் அவர் ஆக்‌ஷன் கதைக்கு எப்படிப் பொருத்தமா இருப்பார்னு ஒரு பயம் இருந்தது. ஆனா, ஜி.வி என் எண்ணத்தை உடைச்சிட்டார்.  படத்தோட முதல்நாள் ஷூட்டிங்க்கு வர்ற வரை... ஜி.விக்கு இந்தப் படத்தோட கதை என்னனு தெரியாது. என்மேல இருந்த நம்பிக்கையில நடிச்சார். கண்டிப்பா, ‘ஐங்கரன்’ அடுத்த கட்டத்துக்கு அவரை எடுத்துட்டுப்போற படமா இருக்கும்!” 

“ ‘ஐங்கரன்’ என்னமாதிரியான படம்?”

“இளம் விஞ்ஞானிகளைப் பற்றிய கதை இது. ஒரு வீட்ல இருக்கிற பையன் புதுசா எதையாவது பண்ணணும்னு சில விஷயங்களை ஆராய்ச்சி செய்வான். அப்படி ஆராய்ச்சி செய்யும்போது, பலர் உதாசீனப்படுத்துவாங்க. யாரும் என்கரேஜ் பண்ணமாட்டாங்க. ஆனா, இந்தப் படம் ரிலீஸானதுக்குப் பிறகு கண்டிப்பா இளம் விஞ்ஞானிகளை யாரும் உதாசீனப்படுத்தமாட்டாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. படத்தோட கதைக்காக நிறைய இளம் விஞ்ஞானிகளை மீட் பண்ணிப் பேசினேன்.

மெக்கானிக்கல் இன்ஜினியரா ஜி.வி நடிச்சிருக்கார். கதையோடு சேர்ந்து டிராவல் பண்ற ஆக்‌ஷன் சீக்வென்ஸ் படத்துல நிறைய இருக்கு” 

“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்!”

“இயக்குநர் வெற்றிமாறன், ‘ஐங்கரன்’ படத்தைப் பார்த்தாரா?”

“வெற்றிமாறன் ‘ஈட்டி’ படத்தைப் பார்த்துட்டு, திரைக்கதை நல்லா இருக்குனு பாராட்டினார். அவரோட உதவியாளரா என் முதல் படம் ஹிட் ஆனது அவருக்குப் பெரிய சந்தோஷம். ‘ஐங்கரன்’ படத்தோட கதை அவருக்குத் தெரியும். சில காட்சிகளைப் பார்த்திருக்கார். ‘ஜி.வியைப் படத்துல வேறமாதிரி காட்டியிருக்க’னு சொன்னார். எடிட்டிங் வொர்க் முடிஞ்சதும் படத்தை முழுசா பார்க்க அவரும் வெயிட்டிங்!”

“ ‘ஐங்கரன்’னு ஏன் பேர் வெச்சீங்க?”

“ஒருத்தனுக்கு அஞ்சு கை இருந்தா எவ்வளவு வேலைகளைச் செய்வானோ, அதையெல்லாம் ரெண்டு கை இருக்கிற ஹீரோ செய்வார். . படத்தோட இரண்டாம் பாதியில இந்தப் பெயரோட காரணம் ஆடியன்ஸுக்குப் புரியும். ஏன்னா, படத்தோட இரண்டாம் பாதி முழுக்க வித்தியாசமான திரைக்கதை முயற்சி. பெரும்பாலான காட்சிகள் லைவ் லொக்கேஷன்லதான் எடுத்திருக்கோம். படம் பார்க்கும்போது, ஆடியன்ஸுக்கு அது புது அனுபவமா இருக்கும்!”

“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்!”

“ ‘விவேகம்’ படம் ரிலீஸானப்போ, விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தீங்களே?”

“ஆயிரம் மாணவர்கள் பரீட்சை எழுதுவாங்க. அதை, ரெண்டு ஆசிரியர்கள்தான் திருத்துவாங்க. சினிமாவைப் பொறுத்தவரைக்கும் ஒரு மாணவன் எழுதுற விடைத்தாளை நூறு ஆசிரியர்கள் திருத்துறாங்க. அது, தப்பில்லைதான். ஆனா, விமர்சனத்துக்குனு ஒரு எத்திக்ஸ் இருக்கு. விமர்சனம் பண்ற எல்லோரும் அதை ஃபாலோ பண்ணனும். அது இல்லாம, நான் எதிர்த்த ‘விவேகம்’ விமர்சனத்துல அஜித் சாரை ஒருமையில் திட்டுறமாதிரி இருந்தது. அதனாலதான் என் கோபம் மற்றும் ஆதங்கத்தை வீடியோவாப் பதிவு செஞ்சு வெளியிட்டேன்.