Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ரலாற்றுப் படமொன்றில் நடிக்க வேண்டும் என்பது விஜய் சேதுபதியின் ஆசைகளுள் ஒன்று. அதிலும், அதிகம் பேசப்படாத வரலாற்று நாயகனின் கதையாக இருக்க வேண்டும் என்பது பேராவல். “நமக்கு செட் ஆகுமானு தெரியலை. ஆனா, அவங்க காலத்துல போய் வாழ்ந்துட்டு வந்த ஃபீல் கிடைக்கும்ல!” என்கிறார்.  மக்கள் செல்வன்னா சும்மாவா..?

இன்பாக்ஸ்

ஸ்ரீதேவி மறைவுக்குப் பிறகு ‘எங்களைக் கொஞ்சம் அமைதியாக விடுங்கள்’ என்று கேட்டுக்கொண்ட கபூர் குடும்பம் ஆறுதலுக்காக  லண்டன் சென்றுள்ளனர். ஜான்வியின் அறிமுகப்படமான ‘தடக்’ அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. அர்ஜுன் கபூரின் ‘நமஸ்தே இங்லாண்ட்’ திரைப்படத்துக்கான ஷூட்டிங் அடுத்த மாதத்திலிருந்து துவங்கவிருக்கிறது. அதுவும் லண்டனிலேயே நடைபெறுகிறது. மீண்டு வாருங்கள்! 

இன்பாக்ஸ்

‘துப்பறிவாளன்’,   ‘சவரக்கத்தி’ என வெவ்வேறு பரிமாணங்களில் வந்த மிஷ்கின், ஹாரர் த்ரில்லர் படம் ஒன்றை இந்த வருடம்   எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.   முன்னணி ஹீரோயின்தான் ‘பிசாசு 2’-வாக வருவாரெனத் தெரிகிறது. மிரட்டணும்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

த்திரிகைத் துறையின் உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது புலிட்சர் விருது. இந்த ஆண்டின் சிறந்த புகைப்படத்திற்கான புலிட்சர் விருதை ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் பெற்றிருக்கிறார்கள். மியான்மரில் ரோஹிங்யா அகதிகள் படும் வலியை, வேதனையை ராய்ட்டர்ஸ் குழுவின் புகைப்படங்கள் சிறப்பாகப் பதிவு செய்திருப்பராக நடுவர்கள் பாராட்டியுள்ளனர்.  அந்தக் குழுவில் இருப்பவர்களில் அத்னான் அபிதி, தானிஷ் சித்திகி இருவரும் இந்தியர்கள். வலியை ஒளியாக்கு!

இன்பாக்ஸ்

கால்பந்து உலகின் பெரும் தலைகளான பார்சிலோனா, யுவன்டஸ் அணிகள் மோதும் போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது. உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் பங்கேற்ற அந்த அணிகளின் முன்னாள் வீரர்கள் மோதும் ‘லெஜண்ட்ஸ்’ மேட்ச் மும்பை டி.ஒய்.பாடில் மைதானத்தில் ஏப்ரல் 27-ம் தேதி நடக்கவுள்ளது. கால்பந்து உலகின் ராஜாக்களாக வலம் வந்த எட்கர் டேவிட்ஸ், கியான்லுகா சம்ப்ரோட்டா, எரிக் அபைடால் போன்றவர்கள் விளையாடுவதைப் பார்த்துவிடவேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள் மும்பை வாலாக்கள். லெட்ஸ் ஃபுட்பால்!

இன்பாக்ஸ்

ம்மாவின் ஆசைக்கு நல்ல நேரம் பார்த்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. தன் மகன் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான், மறைந்த அவரது தாய் ஜீவாவின் ஆசை. சினிமாவுக்கான முக அமைப்பு இல்லை என்று சொல்லி வாய்ப்புகளைத் தவிர்த்து வந்தார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஜி.வி.பி-யிடம் இதைச் சொல்ல, ‘நிச்சயமா வாங்க. நாம சேர்ந்து படம் பண்ணலாம்!’ என ஏகத்துக்கும் சப்போர்ட் பண்ணி இருக்கிறார்.  வாங்க இளைய இளையராஜா!

இன்பாக்ஸ்

‘டைம்’ இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க நூறுபேர் பட்டியலில் இந்தியாவிலிருந்து விராட் கோலி, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, சத்யா நாதெல்லா என சர்வதேச அளவில்  பிரபலமானவர்கள்  சிலர் இருந்தனர். அனைவருக்கும் ஆச்சர்யமூட்டிட்டியது  ‘ஓலா’ கார் நிறுவனத்தலைவர்  பாவிஷ் அகர்வால் அந்தப் பட்டியலில்  இருந்ததுதான். ஸ்டார்ட் பண்ணுங்க!

விர்ச்சுவல் ரியாலிட்டி கேமைக் கதைக்களமாக வைத்து ‘ரெடி ப்ளேயர் ஒன்’ திரைப்படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார்.  ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ கதைகளுக்குப் பேர்போன டிசி யுனிவர்ஸ் தயாரிக்கும் ‘பிளாக் ஹாக்’ படத்தை இயக்குகிறார்.  ஸ்பீல்பெர்க்  இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ படம் இது. சூப்பர் டைரக்டர்!

இன்பாக்ஸ்

மிழுக்கு வருகிறார் அனுராக் காஷ்யப்!   கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், வெற்றிமாறன் என,  பலரின் அழைப்புகளுக்கும் புன்முறுவலுடன் ஏதேதோ காரணம் சொல்லி மறுத்துவந்தவர், தற்போது ஜி.வி.பிரகாஷின் அன்புக்குக் கட்டுப்பட்டிருக்கிறார். மும்பை மாதுங்காவில் வாழும்  தமிழ் இளைஞனின் வித்தியாசமான காதல் கதையைத் தமிழிலும், இந்தியிலும் பைலிங்குவலாக இயக்கப்  போகிறாராம். வெய்ட்டிங் ஜி!