Published:Updated:

நாசர், விஜய் சேதுபதியை உருவாக்கியவர் `கூத்துப்பட்டறை' முத்துசாமி!

நாசர், விஜய் சேதுபதியை உருவாக்கியவர் `கூத்துப்பட்டறை' முத்துசாமி!
நாசர், விஜய் சேதுபதியை உருவாக்கியவர் `கூத்துப்பட்டறை' முத்துசாமி!

நாசர், விஜய் சேதுபதியை உருவாக்கியவர் `கூத்துப்பட்டறை' முத்துசாமி!

'கூத்துப் பட்டறை' நிறுவனர் ந.முத்துசாமி இன்று காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வெடுத்துவந்தவர், திடீரென மூச்சுத் திணறலால் அவதிப்பட, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

தஞ்சை மாவட்டம் புஞ்சை என்கிற ஊரில் பிறந்த ந.முத்துச்சாமி நாற்பதாண்டுகளுக்கு முன் சென்னையில் 'கூத்துப்பட்டறை'யை நிறுவினார். நாடகம், சினிமாவுக்கான நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட கூத்துப் பட்டறையிலிருந்துதான் நடிகர் நாசர், பசுபதி, கலைராணி தொடங்கி விதார்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல கலைஞர்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தார்கள். 'வாழ்த்துகள்'  என்ற படத்தில் ந.முத்துசாமியே நடித்திருக்கிறார்.

சங்கீத் நாடக அகாடமி, பத்மஶ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றிருக்கும் ந.முத்துசாமியின் மனைவியின் பெயர், அபயாம்பாள். நடேஷ், ரவி என இரண்டு மகன்கள். மூத்த மகன் ரவி சென்னையில் கூத்துப்பட்டறையைக் கவனித்து வர, நடேஷ் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு