Published:Updated:

`` `ஜிப்ஸி' போஸ்டருக்குப் பின்னாடி பெரிய கதையே இருக்கு..!’’ - அருண் டைட்டன்

`` `ஜிப்ஸி' போஸ்டருக்குப் பின்னாடி பெரிய கதையே இருக்கு..!’’ - அருண் டைட்டன்
`` `ஜிப்ஸி' போஸ்டருக்குப் பின்னாடி பெரிய கதையே இருக்கு..!’’ - அருண் டைட்டன்

`` `ஜிப்ஸி' போஸ்டருக்குப் பின்னாடி பெரிய கதையே இருக்கு..!’’ - அருண் டைட்டன்

`குக்கூ’, ’ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜூ முருகன், தற்போது ஜீவாவை வைத்து ‘ஜிப்ஸி’ படத்தை இயக்கி வருகிறார். ’ஜிப்ஸி’ படத்துக்காக தான் க்ளிக்கிய போட்டோஸ் பற்றி அருண் டைட்டன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

’ஜிப்ஸி’ படத்தோட போட்டோ ஷூட்டுக்காக நான் ஜீவா, ஹீரோயின், ராஜூ முருகன், ராமர் அண்ட் அனுமார் மாதிரி வேஷம் போடுற ரெண்டு பேரு அப்பறம் ஒரு குதிரைனு எல்லாரும் கிளம்பிட்டோம். செஞ்சிக்கோட்டையில ஷூட் எடுக்கலாம்னு அங்கப் போனா, நாங்க கேட்ட இடத்தில் ஷூட் பண்றதுக்கு பர்மிஷன் கிடையாதுனு சொல்லிட்டாங்க. நான் ஏற்கெனவே ஒரு முறை செஞ்சிக் கோட்டைக்கு பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்தில் ஷூட் எடுத்திருக்கேன். அங்கப் போனா வனத்துறை, இங்க போட்டோஸ் எடுக்கக்கூடாதுனு சொல்லிட்டாங்க. 

வனத்துறையினருக்கும் எங்களுக்கும் பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கும்போது ஊர் மக்கள் கூடிட்டாங்க. எங்களுக்கு சப்போர்ட் பண்ணி அந்த ஊர்மக்கள் பேசிட்டு இருந்த கேப்ல போலீஸுக்குத் தெரியாம எடுத்தப் போட்டோதான் இது. 

ஆனால், நாங்க எடுக்கணும்னு நினைச்ச போட்டோ எங்களுக்கு கிடைக்கலை. அதுனால போற வழியில ஏதாவது இடம் செட்டான அங்க போட்டோ எடுத்துக்கலாம் அங்கிருந்து கிளம்பிட்டோம். வழியில ஒரு சுவர் பார்த்தோம். அந்தச் சுவரைப் பார்த்ததும் ’ஆஹா... இதுதான் நாம தேடின இடம்’னு சொல்லி, உடனே எல்லாரையும் ரெடியாகச் சொல்லி எடுத்த போட்டோதான் இது. இந்தப் போட்டோக்களுக்காக நிறைய தூரம் அலைஞ்சதுனால இது ஸ்பெஷலா தெரியுது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு