Published:Updated:

`விழுந்துடாம ஓடுனு சொல்ல இங்க யாருமே இல்ல...’ ஜி.வி.பிரகாஷின் `ஐங்கரன்’ டீசர்..!

`ஈட்டி’ பட இயக்குநர் ரவிஅரசுவின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் மஹிமா நம்பியார் நடித்திருக்கும், ‘ஐங்கரன்’ படத்தின் டீசர் வெளியாகிருக்கிறது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் மஹிமா நம்பியாரோடு ஹரீஷ் பேரடி, `ஆடுகளம்’ நரேன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் இந்தப் படத்தில் சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவும் ராஜா முகமது படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள். ’ஈட்டி’ படத்தில் ஸ்போர்ட்ஸோடு ஆக்‌ஷனையும் கலந்துகட்டிய இயக்குநர், இந்தப் படத்தில் இன்ஜினீயரிங்கில் ஆக்‌ஷனை சேர்த்திருக்கிறார்.

ஜி.வி-யின் முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் ஆக்‌ஷன் மசாலாவை எக்ஸ்ட்ராவாகத் தூவியிருக்கிறார் இயக்குநர் ரவிஅரசு; டீசரிலேயே அந்த ஆக்‌ஷன் வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது. ஜி.வி.பிரகாஷுக்கு இந்தப் படத்தோடு சேர்த்து `அடங்காதே’, `100 % காதல்’, `சர்வம் தாள மயம்’, `4G’, `குப்பத்து ராஜா’ என அரை டஜன் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கிறது. தற்போது ஜி.வி.பிரகாஷ், தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் `ஜெயில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.