`ஜிப்ஸி’ படத்தில் ஹிப்பி இசைக்கலைஞனாக வரும் ஜீவா கிடார் வாசிக்க கற்றுக்கொள்கிறார். இசைக்கலைஞர் ஒருவரை தன் கிழக்குக் கடற்கரை சாலை வீட்டிலேயே தனியறையில் தங்கவைத்து முழுநேரமாக கற்று வருகிறார். நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமாருடன் மூன்றாவது முறையாக இணைகிறார், விஜய்சேதுபதி. ‘சேதுபதி’ படத்தில் போலீஸ்காரரின் வாழ்க்கையை விவரித்த அருண், இப்படத்தில் உலக மகாத் திருடன் ஒருவனைப் பற்றிய கதையைக் காட்சிப்படுத்தவிருக்கிறார். வர்றார் திருடர்!

`ஹாரிபாட்டர்’, `டாவின்சி கோட்’ புத்தகங்களின் விற்பனை சாதனைகளை எல்லாம் முறியடித்து சாதனை படைத்த நாவல் எல்.ஜேம்ஸ் எழுதிய `ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே’. உலகம் முழுவதும் 52 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, 150 மில்லியன் காப்பிகளுக்கு மேல் விற்றுத்தள்ளியது இந்த எரோடிக் நூல். இப்போது எல்.ஜேம்ஸின் பெயர் கின்னஸில் `உலகின் பணக்கார எழுத்தாளர்’ என்கிற பட்டியலில் இடம்பிடிக்கப்போகிறது. அள்ளு அள்ளு...

கங்கனா ரணாவத், இப்போது இயக்குநர். `தேஜு’ என்ற படத்தை இயக்கி நடிக்க விருக்கிறார். படத்தில் அவருக்கு 80 வயதுடைய பாட்டியின் வேடம். `எமோஷனலான இந்தக் கதைக்கு விருதுகள் நிச்சயம்!’ என்று எல்லோரும் சொன்னாலும், கங்கனா வேறு மாதிரி சொல்கிறார். ``அதுதான் இல்லை. இது கமர்ஷியல் கதை. அது என்ன என்பது சஸ்பென்ஸ்!’’ என்று சிரிக்கிறார். ரிவால்வர் ராணி!

சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படும் இயக்குநர், ஈரானைச் சேர்ந்த ஜாஃபர் பனாஹி. அரசுக்கு எதிரான படங்களை இயக்குகிறார் என்ற குற்றச்சாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டார் பனாஹி. இவரது சமீபத்திய படைப்பான ‘த்ரீ ஃபேசஸ்’ திரைப்படம் அடுத்த மாதம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. தற்போது அவரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என தடை பிறப்பித்துள்ளது ஈரான் அரசு. அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையுத்தரவை நீக்கக்கோரி சர்வதேச அளவில் ஈரானுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள், திரைப்பட ரசிகர்கள். ரிலீஸ் பனாஹி!

ஒரு சீசன் சொதப்பினாலே அடுத்த சீசனில் `அட்ரஸ்’ இல்லாமல் செய்துவிடும் ஐரோப்பியக் கால்பந்து உலகம். அப்படிப்பட்ட இடத்தில் 22 ஆண்டுகளாக ஒரே அணியின் மேனேஜராக இருந்துள்ளார் அர்சென் வெங்கர். 1996-ம் ஆண்டு அர்செனல் மேனேஜராகப் பதவியேற்றவர், இந்த சீசனுடன் எமிரேட்ஸ் ஸ்டேடியத்துக்கும், Gooners-க்கும் `குட்பை’ சொல்கிறார். 2003-04 சீசனில் ஒரு போட்டியில்கூடத் தோற்காமல் அர்செனலை, ப்ரீமியர் லீக் பட்டம் வெல்லவைத்தவர், கடந்த சில ஆண்டுகளாக பயங்கரமாக சொதப்பிக்கொண்டிருந்தார். அர்செனல் தோற்கும் ஒவ்வொரு முறையும் `Its enough Wenger’ என பேனர் பிடித்தனர் ரசிகர்கள். ஒருவழியாக அவரும் விலகுவதாக அறிவித்துவிட்டார். பைபை ஜென்டில்மேன்

மம்மூட்டியின் ‘ஒரு குட்டனாடன் ப்ளாக்’ படப்பிடிப்பு எர்ணாகுளம், கொச்சி போன்ற பகுதிகளில் நடந்துவருகிறது. படப்பிடிப்புக் காட்சிக்காக மம்மூட்டி அவரது லிமிட்டட் எடிஷன் பிஎம்டபிள்யூ 1200GS பைக் ஓட்டும் வீடியோ சமூகவலைதளங்களில வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த பைக்கின் விலை தோராயமாக 21 லட்சம். யப்பாடி!

நேரம் கிடைக்கும்போது தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நள்ளிரவு வேளைகளில் வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் விஜய். சினிமா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த அன்று தானே பைக் ஓட்டியபடி அண்ணா நகரில் இருக்கும் ஐஸக்ரீம் பார்லருக்கு மகளோடு வந்திருக்கிறார். வர்லாம் வர்லாம் வா!