Published:Updated:

லதா ரஜினிகாந்த் நடத்தும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி - மேரிகோம் பங்கேற்பு!

லதா ரஜினிகாந்த் நடத்தும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி - மேரிகோம் பங்கேற்பு!
லதா ரஜினிகாந்த் நடத்தும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி - மேரிகோம் பங்கேற்பு!

சென்னை ரஷ்யன் கலாசார மையத்தில் லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். தான் நடத்திவரும் குழந்தைகளுக்கான 'பீஸ் ஃபார் சில்ட்ரன்' (Peace for Children) எனும் அமைப்பு குறித்த தகவல்களையும், இனி அதன் மூலம் நடக்கவிருக்கும் செயல்பாடுகள் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசியபோது, ``குழந்தைகளுக்கான உதவிகளை சேவை நோக்கத்தோடு கிட்டத்தட்ட 40 வருடங்களாக பண்ணிட்டு இருக்கேன். நம்ம நாட்டுல குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது எந்தவொரு முயற்சியையும் எடுக்குறதில்லை. அதுக்காகத்தான் 'பீஸ் ஃபார் சில்ட்ரன்'ங்கிற அமைப்பை மூன்று ஆண்டுகளுக்கு முன்னாடி துவங்கி குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துட்டு வர்றேன். இதுக்காக நானும் என்னோட டீமும் இந்தியா முழுவதும் டிராவல் பண்ணி விழிப்பு உணர்வு ஏற்படுத்திக்கிட்டு இருக்கோம். இதற்காக பல்வேறு மாவட்டங்கள்ல இருந்து உதவியாளர்கள் தேவைப்படுறாங்க. குழந்தைகள் நலன்ல ஆர்வம் இருக்குறவங்க எங்களோட இணைந்து பணியாற்றலாம். 

வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றை ராமச்சந்திர கான்வென்ஷனல் சென்டர், திருவான்மியூரில் நடத்தவிருக்கிறோம். இதில் கிட்டத்தட்ட 1,500 குழந்தைகள் பாட்டுப் பாட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக குத்துச்சண்டை வீரர் மேரி கோம் வருகை தரவிருக்கிறார். இதில் அனைவரும் தங்களது குடும்பத்தோடு கலந்துகொள்ளலாம்" என்று அவர் கூறினார்.