Published:Updated:

கார்த்தி நடிக்கும் 'தேவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இது! - வெளியிட்டது யார் தெரியுமா?

கார்த்தி நடிக்கும் 'தேவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இது! - வெளியிட்டது யார் தெரியுமா?
கார்த்தி நடிக்கும் 'தேவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இது! - வெளியிட்டது யார் தெரியுமா?

`கடைக்குட்டி சிங்கம்' படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடித்து வரும் படம், `தேவ்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கி வருகிறார். ஆக்‌ஷன் ப்ளஸ் ரொமான்ஸ் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், இமாசலபிரதேசம், ஐரோப்பா நாடுகள் என பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

`தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு கார்த்தி - ரகுல் ப்ரீத்சிங் ஜோடி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தில் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இளைஞர்களுடைய வாழ்க்கை இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதுதான் ‘தேவ்’ படத்தின் ஒன்லைன்.  மேலும், இப்படத்தில் நிக்கி கல்ராணி கேமியோ ரோலில் நடித்திருக்கிறாராம். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், நடிகர் சூர்யா.