Published:Updated:

``விஜய் சேதுபதியோட இந்த உதவிய மறக்க மாட்டோம்..!’’ - நெகிழும் விக்ராந்த் சகோதரர் சஞ்ஜீவ்

`வெண்ணிலா கபடி குழு - 2’, `சுட்டுப் பிடிக்க உத்தரவு’, `பக்ரீத்’ என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விக்ராந்த், தனது சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்காக திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி.

ஏற்கெனவே தனது தயாரிப்பில் வெளியான `ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் நடித்ததோடு, வசனமும் எழுதியிருந்தார். வேறு ஒரு நடிகரின் படத்துக்கு விஜய் சேதுபதி வசனமும் திரைக்கதையும் எழுதுவது இதுவே முதல் முறை. `கவண்’ படத்தில் விக்ராந்தும் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இயக்குநர் சஞ்ஜீவ்,`` `தாக்க தாக்க’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கி வருகிறேன். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொன்ன போது, `கதை செமையா இருக்கு. விக்ராந்துக்குப் பக்காவா செட்டாகும். இதற்கு நான் வசனம் எழுதவா..?’னு கேட்டார். அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார். விக்ராந்துக்காக அவர் செய்த இந்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு