Published:Updated:

கோச்சடையானில் 6பேக் ரஜினி!

கோச்சடையானில் 6பேக் ரஜினி!
கோச்சடையானில் 6பேக் ரஜினி!
கோச்சடையானில் 6பேக் ரஜினி!

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 'கோச்சடையான்' படத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் செளந்தர்யா.

இந்தியாவில் MOTION CAPTURE TECHNOLOGYல் உருவாகி வரும் திரைப்படம் 'கோச்சடையான்'. ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, சரத்குமார், நாசர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

கோச்சடையான் படத்தின் இரண்டு வேடங்களில் ரஜினி தோன்ற இருக்கிறார். 'கோச்சடையான்' என்ற மன்னர் வேடத்திலும், 'ராணா' என்ற தளபதி வேடத்திலும் நடித்து இருக்கிறார். இதில் 'கோச்சடையான்' வேடத்தில் ரஜினியை 6பேக் உடலமைப்புடன் காட்டியிருக்கிறார்கள்.

இறுதிக்கட்ட பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி இப்படம் 3Dல் வெளிவர இருக்கிறது.

##~~##
இப்படத்தினை ஜுலையில் ரசிகர்களுக்கு விருந்தாக்க இருக்கிறார்கள். இன்னொரு முக்கிய செய்தி.. 'கோச்சடையான்' படத்தின் தமிழ்நாட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று விலை பேசி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம்.