Published:Updated:

"ரஜினி அங்கிள்கிட்ட பிடிக்காத விஷயம், மீ-டூ சர்ச்சை, ஜோ டான்ஸ்..." - லக்ஷ்மி மஞ்சு

"ரஜினி அங்கிள்கிட்ட பிடிக்காத விஷயம், மீ-டூ சர்ச்சை, ஜோ டான்ஸ்..." - லக்ஷ்மி மஞ்சு

"இப்போதான் நடிகர்களோட வாரிசுகளை சினிமாவுல ஈஸியா ஏத்துக்கிற சூழல் வந்திருக்கு. பத்து வருடத்துக்கு முன்னாடி அப்படி இல்லை. திறமை இருந்தாதான் அங்கீகாரம் கிடைக்கும். நிறைய தோல்விகளை சந்தித்துதான் வெற்றிப் பாதையை வந்தடைந்திருக்கோம்."

"ரஜினி அங்கிள்கிட்ட பிடிக்காத விஷயம், மீ-டூ சர்ச்சை, ஜோ டான்ஸ்..." - லக்ஷ்மி மஞ்சு

"இப்போதான் நடிகர்களோட வாரிசுகளை சினிமாவுல ஈஸியா ஏத்துக்கிற சூழல் வந்திருக்கு. பத்து வருடத்துக்கு முன்னாடி அப்படி இல்லை. திறமை இருந்தாதான் அங்கீகாரம் கிடைக்கும். நிறைய தோல்விகளை சந்தித்துதான் வெற்றிப் பாதையை வந்தடைந்திருக்கோம்."

Published:Updated:
"ரஜினி அங்கிள்கிட்ட பிடிக்காத விஷயம், மீ-டூ சர்ச்சை, ஜோ டான்ஸ்..." - லக்ஷ்மி மஞ்சு

"லக்ஷ்மி மஞ்சு - மணிரத்னத்தின் 'கடல்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். தெலுங்கு சினிமாவைக் கட்டியாண்ட ஆளுமை, இவரது தந்தை மோகன் பாபு. விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என இவரது இரு சகோதரர்களும் பிரபல தெலுங்கு நடிகர்கள். ரஜினிக்கு மிக நெருக்கமான குடும்பம் இவருடையது. "சானியா மிர்சா என்னோட குளோஸ் ஃப்ரெண்ட். ஹைதராபாத்ல என் வீட்ல இருந்து அவங்க வீடு ஒரு கிலோமீட்டர் தூரத்துலதான் இருக்கு. பிவி சிந்து, சாய்னா நேவால்கூட என் நண்பர்கள்தாம். பொறந்து வளர்ந்தது சென்னை. சென்னைக்கு என்னோட ஹைதராபாத் ஃப்ரெண்ட்ஸ் வந்தா நான்தான் ஊர் சுத்திக்காட்டுவேன்!" என்று அதகளமாகக் கூறுகிறார், லக்ஷ்மி. "அப்படினா உங்களது ஃப்ரெண்ட்ஸ் யார் யார்?" என்று கேட்டால், பட்டியல் நீள்கிறது. அத்தனையும் செலிபிரிட்டி கிட்ஸ்தாம். இப்படி சினிமாவுக்கு நெருக்கமாகப் பழக்கப்பட்ட இவர், தற்போது 'காற்றின் மொழி' படத்தில் நடித்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து... 

" 'காற்றின் மொழி' வாய்ப்பு எப்படி வந்துச்சு?"

"ஹைதராபாத்ல ஒரு ஷூட்டிங்ல இருக்கும்போது ராதாமோகன் சார் என்னைப் பார்த்து பேசினார். அவ்வளவுதான். அதுக்கப்புறம் அவரை நான் மறந்தே போயிட்டேன். 'துமாரி சுலு' இந்திப் படம் பார்க்கும்போது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. தெலுங்குல இதை யாரவது ரீமேக் பண்ணினா, அதுல ஒரு கேமியோ ரோலாவது பண்ணிடணும்னு நினைச்சேன். அப்போதான் ராதாமோகன் சார்கிட்ட இருந்து போன் வந்துச்சு. எழுதி வெச்ச முழுக்கதையையும் என்கிட்ட கொடுத்தார். டங்கிலீஷ்ல இருந்த ஒரு சில சீன்களை நான் படிச்சிட்டேன். மீதியை உதவி இயக்குநர்தான் என்கிட்ட படிச்சுக் காட்டினாங்க." 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஜோதிகாவோட சேர்ந்து பயணித்த அனுபவம் எப்படி இருந்துச்சு?"

"நான் ஆரம்பத்துல இருந்தே ஜோதிகாவோட ரசிகை. கேமராவுக்கு முன்னாடி அவங்க ஒன்னும் செய்யாம அப்படியேதான் நிற்பாங்க. ஆனா, அவங்க முகத்துல மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் ரியாக்ஷன்ஸ் வந்துட்டுப் போகும். தட்ஸ் அமேஸிங்! செட்ல யார் நல்லா நடிக்கிறாங்கனு பெரிய போட்டியே இருந்துச்சு. 

சூர்யா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். சின்ன வயசுல இருந்தே எங்க வீடும், சூர்யா வீடும் ரொம்ப குளோஸ். சூர்யா - ஜோ கல்யாணம் நடந்தப்போ, நான் அமெரிக்காவுல இருந்தேன். சூர்யா ஹைதராபாத் வரும்போது நாங்க அடிக்கடி மீட் பண்ணிக்குவோம். ஆனா, நானும் ஜோவும் ஏதாவது ஒருசில நிகழ்ச்சிகள்லதான் மீட் பண்ணுவோம். 'காற்றின் மொழி' செட்லதான் அவங்ககூட அதிகமா நேரம் செலவழிகிறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. நல்ல அம்மாவா, நல்ல சகோதரியா, நல்ல நடிகையா ஜோ ஒரு பிரமாதமான பெர்சனாலிட்டி. ஒரு பாட்டுல நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து டான்ஸ் ஆடணும். அதுல அதிகமா ரீடேக் எடுத்துக்கிட்டது நான்தான். அம்மா ஆனதுக்குப் பிறகும்கூட டான்ஸ்ல மாஸ் காட்டுறாங்க ஜோ. என்னைப் பொறுத்தவரை ஜோதான் சூப்பர் ஸ்டார். ஷூட்டிங் முடிந்ததும் சூர்யாவுக்கு போன் பண்ணி, 'ஜோ மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீங்கதான் கொடுத்து வெச்சிருக்கணும்'னு சொன்னேன்.       

"இயக்குநர் ராதாமோகன் செட்ல எப்படி?"

"எங்க இயக்குநர் இருக்காரே... ரொம்ப ஸ்ட்ரிக்ட். செட்ல இத்தனை பேர் இருந்தும் கொஞ்சம்கூட கலகலப்பே இருந்ததில்லை. ஒவ்வொரு சீனையும் பதினைந்து தடவை பண்ண வெச்சு எங்களை டார்ச்சர் பண்ணிட்டார். ஒரு சீன் எடுத்து முடிச்சதுக்குப் பிறகு, 'கட் சொல்லுவார்... சொல்லுவார்...'னு நாங்களும் வெயிட் பண்ணிட்டே இருப்போம். ஆனா, நாங்க நடிச்சு முடிச்சுட்டு சிரிக்கிற வரை அவர் கேமரா ரோலிங்லயே இருக்கும். 

எனக்குத் தமிழ் சரியா பேச வராது. வசனம் பேசுறப்போ ஏதேதோ உளறுவேன். அப்போ ராதா சார், 'மா...பேப்பர்ல என்ன எழுதியிருக்கோ அதைப் பேசு. உன் சொந்த வசனமெல்லாம் வேண்டாம்'னு செல்லமா அதட்டுவார். கடைசிவரை அந்த செட்ல தமிழ் பேசுறதுக்காக நான் பட்டபாடு எனக்கு மட்டும்தான் தெரியும்.  

'துமாரி சுலு' படத்துல நிறைய ஃபன் ஃபேக்டர்ஸ் இருக்கும். அதே 'காற்றின் மொழி'யில எமோஷன்ஸ் அதிகமா இருக்கும். ரேடியோவுல வேலை பார்க்கிற நாங்க, நேயர்கள்கிட்ட பேசுறதைக்கூட ரொம்ப எமோஷனலா காட்டியிருக்கார், ராதாமோகன் சார். 'துமாரி சுலு'வைவிட வித்தியாசப்பட்டது 'காற்றின் மொழி'."

"நடிகர் குடும்பத்து வாரிசு நீங்க. அதனால, சினிமா வாய்ப்பு எளிதா அமைஞ்சிருக்குமே?!"

"இப்போதான் நடிகர்களோட வாரிசுகளை சினிமாவுல ஈஸியா ஏத்துக்கிற சூழல் வந்திருக்கு. பத்து வருடத்துக்கு முன்னாடி அப்படி இல்லை. திறமை இருந்தாதான் அங்கீகாரம் கிடைக்கும். நிறைய தோல்விகளை சந்தித்துதான் வெற்றிப் பாதையை வந்தடைந்திருக்கோம். ஒரு மகளா எங்க அப்பா என்னை நினைத்துப் பெருமைப்படுறார். ஆனா, ஒரு நடிகையா அப்பாவோட எதிர்பார்ப்பை என்னால பூர்த்தி பண்ண முடியுமானு தெரியலை. என்னோட படங்கள் எல்லாவற்றையும் தவறாம அவர் பார்த்து கருத்துக்களைச் சொல்வார்." 

"தமிழ்ல முதல் படம் மணிரத்னம் இயக்கத்துல அமைந்திருந்துச்சு. 'கடல்' படத்தின் அனுபவம் பற்றிச் சொல்லுங்க..."

"பாரதிராஜா சார், பாலசந்தர் சார் படங்கள் பார்த்து நான் வளர்ந்தாலும், ஒரு நடிகையாகணும்ங்கிற ஆசை எனக்கு ஏற்பட்டது மணிரத்னம் சார் படங்களால்தான். சுஹாசினி மேடமை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். அவங்களோட பர்த்டே பார்ட்டிக்கு வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போதான் மணி சாரை முதன்முதல்ல நேர்ல பார்த்தேன். என்னைப் பார்த்ததும், 'லக்ஷ்மி... ஹாலிவுட் நடிகைதானே நீங்க'னு சொன்னார். அந்தத் தருணத்தை என்னால நம்பவே முடியலை. முதன்முதல்ல எனக்கு சினிமா வாய்ப்பு அமைந்தது 'The Ode'ங்கிற இந்தியன் இங்கிலிஷ் படத்துலதான். அந்தப் படத்தை மணி சார் பார்த்திருக்கார். அவருக்கு என் நடிப்பு பிடிச்சிருந்ததுனால 'கடல்' படத்துல நடிக்க வெச்சார். மணி சார் ஆடிஷன்ல யார் கலந்துக்கிட்டாலும் பெண்டு நிமித்திடுவார். கடைந்தெடுத்த திறமைசாலிகள் மட்டும்தான் அவர் படத்துல நடிக்க முடியும். 

மணிரத்னம் சாரோட ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப டென்க்ஷனா இருக்கும். ஸ்கூல்ல டீச்சர் பாடம் நடத்துற மாதிரி அவர் எங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பார். காலை 5 மணி ஷூட்டிங்குக்கு நாங்க எல்லோரும் 4.45-க்குப் போவோம். ஆனா, மணி சார் எங்களுக்கு முன்னாடியே ஷூ, சாக்ஸ், ஸ்வெட்டர் எல்லாம் போட்டுக்கிட்டு அங்கே நிற்பார். 'சார் நீங்க தூங்கவே மாட்டீங்களா'னு எல்லோரும் கேட்போம். சிரிப்பார். அவரைப் பேச வைக்கிறது ரொம்பக் கஷ்டம்." 

"தெலுங்குல பண்ண 'மேமு சைத்தம்' நிகழ்ச்சியை, இப்போ விஷால் சன் டிவியில தொகுத்து வழங்குறார். ஒரு தொகுப்பாளரா உங்களை நீங்க எப்படிப் பார்க்குறீங்க? நிகழ்ச்சி குறித்த அனுபவத்தையும் பகிர்ந்துக்கோங்க..."

"சினிமா பிரபலங்களுக்கு சமூகப் பொறுப்பும் இருக்கணும். நான் தொகுத்து வழங்குன நிகழ்ச்சியில நடிகர்கள் நடித்த படங்கள் பற்றியோ, அவங்க போட்டிருந்த டிரெஸ் பத்தியோ பேசமாட்டோம். அவங்களோட சமூகப் பொறுப்பு, சமுதாயப் பிரச்னைகள் குறித்துப் பேசுவோம். அது அவங்களோட இன்னொரு முகத்தை மக்களுக்குப் பிரதிபலிக்கின்ற விதமா அமையும். இந்த ஐடியா எனக்கு வந்தப்போ, நான் இதை டிவி சேனல்கிட்ட சொன்னேன். 'ஐடியா நல்லா இருக்கு. ஆனா, எந்த செலிபிரிட்டி இந்த மாதிரியான கான்செப்டுக்கு ஒப்புக்குவாங்க'னு கேட்டாங்க. அதிர்ஷ்டவசமா எனக்கு நிறைய செலிபிரிட்டி நண்பர்கள் இருந்ததுனால, என்னால இந்த நிகழ்ச்சியை செய்ய முடிந்தது. சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், டாப்ஸி ஆகிய நண்பர்கள்தாம், 'உன்னால இந்த நிகழ்ச்சியைப் பண்ண முடியும்'னு சொல்லி ஊக்கப்படுத்தினாங்க. இந்த மாதிரியான நண்பர்கள் எனக்கு இல்லாம இருந்திருந்தா, இந்த நிகழ்ச்சி பத்தி நினைச்சுகூட பார்த்திருக்க முடியாது."  

"உங்க குடும்பத்துக்கும் ரஜினிக்கும் நெருக்கம் அதிகம். அவர் வீட்டுக்கு வரும்போது சூழல் எப்படி இருக்கும்?"

"என்னோட ஃபேமிலியும் ரஜினி அங்கிள் ஃபேமிலியும் சேர்ந்து திருப்பதிக்குப் பலமுறை போயிருக்கோம். அங்கிளுக்கு அங்கே தங்குறதுக்கான வசதிகள் இருக்கு. எங்ககிட்ட எந்தத் தகவலும் சொல்லாம திடீர்னு ரஜினி அங்கிள் வீட்டுக்கு வருவார். சில சமயம் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்திருக்கார். என் அப்பாவுக்கு இது சுத்தமா பிடிக்காது. 'முன்னாடியே சொல்லியிருந்தா, கார் அனுப்பிவிட்டிருப்பேன்ல'னு அங்கிளோட சண்டை போடுவார். அப்படி அப்பா நிறைய தடவை சண்டை போட்டதுனாலதான், அங்கிள் இப்போ கார்ல வர ஆரம்பிச்சிருக்கார். அவர் அந்த அளவுக்கு எளிமையான மனிதர்."

"மீடூ குறித்து நீங்க சொல்ல விரும்புவது..."

"மீடூ பத்தி பேச ஆரம்பித்தது ஒரு விதத்துல நல்லதுதான். முதல்ல மீடூ பத்தி பேச முன்வர்றவங்க சொல்றதைக் காது கொடுத்துக் கேட்கணும். ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே இந்த மாதிரியான ஒரு சம்பவம் அவங்க வாழ்க்கையில நடந்திருக்கும். உங்களோட அம்மா, தங்கச்சி, கேர்ள் ஃப்ரெண்ட் யார்கிட்ட வேணும்னாலும் கேட்டுப்பாருங்க, அவங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களைப் பற்றி கட்டாயம் சொல்வாங்க. பஸ், மார்க்கெட், துணிக்கடை இப்படிப் பொது இடங்கள்ல பெண்கள் பாதுகாப்பா உணர்றதில்லை. நிறைய பெண்கள் இதுகுறித்து பொதுவெளியில் பேசக் கூச்சப்படுறாங்க. ஆனா, அவங்க எல்லோரும் இதுகுறித்து பேசுறப்போ காது கொடுத்துக் கேட்குறது, நம்மளோட கடமை."