தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்!

நயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்!
பிரீமியம் ஸ்டோரி
News
நயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்!

ஸ்டார்தொகுப்பு : நா.வருண்

* டயானா மரியம் குரியன்... இதுதான் நயன்தாராவின் இயற்பெயர். வயது 33.

* நயன்தாரா என்ற பெயருக்கு ‘நட்சத்திரக் கண்கள்’ என்று அர்த்தம்.

* முதல் படம் மலையாளத்தில் வெளியான ‘மனசினக்கரெ’ (2003).

* குஜராத், கேரளா, புதுடெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் பள்ளிக் கல்வி பெற்றவர்.

* இரண்டாவது தமிழ்ப் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துடன் (சந்திரமுகி) ஜோடி சேர்ந்தார்.

* சொந்தக் குரலில் பேசி நடித்த முதல் தமிழ்ப் படம் ‘நானும் ரவுடிதான்’.

நயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்!

* தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வெளிவந்த திரைப் படங்களின் எண்ணிக்கை 64 (2018 மே வரை).

* 50-53 கிலோ என்கிற அளவிலேயே தன் எடையைப் பராமரிப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் நயன். உயரம் 5.5 அடி.

* இதுவரை 38 விருது களைப் பெற்றுள்ளார். இவற்றில் நான்கு பிலிம் ஃபேர் விருதுகள்.

* `டாடா ஸ்கை’ நிறுவனத்துக்காக சமீபத்தில்  நான்கு மொழிகளில்  நடித்துக் கொடுத்த 50 விநாடி விளம்பரப் படத்துக்கு நயன் பெற்ற சம்பளத் தொகை 5 கோடி ரூபாயாம்!