Published:Updated:

ஸ்வீட் சர்ப்ரைஸ்! - இவானா

ஸ்வீட் சர்ப்ரைஸ்! - இவானா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வீட் சர்ப்ரைஸ்! - இவானா

இவள் யாரோ? சனா

ஸ்வீட் சர்ப்ரைஸ்! - இவானா

இவள் யாரோ? சனா

Published:Updated:
ஸ்வீட் சர்ப்ரைஸ்! - இவானா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வீட் சர்ப்ரைஸ்! - இவானா

‘`பிறந்து வளர்ந்ததெல்லாம் கேரளா. ஆனா, தமிழ் நல்லா பேசுவேன். காரணம், இயக்குநர் பாலா சார். ‘நாச்சியார்’ ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எனக்குன்னு தனியா தமிழ் கிளாஸ் ஏற்பாடு பண்ணிக்கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட்ல மலையாளம், ஆங்கிலத்துல பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனாலேயே நல்லா தமிழ் பேசக் கத்துக்கிட்டேன்!’’ -  மலையாளம் கலந்த தமிழில் பேசுகிறார், இவானா. 

‘`இப்போதான் ப்ளஸ் டூ தேர்வு எழுதி முடிச்சேன். இதோ... ரிசல்ட் பார்த்துட்டு  மங்களூருக்கு ஒரு ஹாலிடே ட்ரிப். அப்புறம் சென்னைக்கு வரணும்னு ரொம்ப ஆசை. ஏன்னா, எனக்கு சென்னையிலதான் நிறைய ரசிகர்கள் இருக்காங்க. ‘நாச்சியார்’ படம் ரிலீஸான நேரத்துல என்னை எங்கே பார்த்தாலும் தமிழ் ஆடியன்ஸ் அடையாளம்கண்டு பேசினாங்க. அவங்களுக்காகவே சீக்கிரம் இன்னொரு தமிழ்ப் படத்துல நடிக்கணும். நல்ல கதைக்காகக் காத்திருக்கேன்” என்கிற இவானா, நடிப்போடு படிப்பையும் தொடர விரும்புகிறார். அம்மா குடும்ப நிர்வாகி. அப்பா பிசினஸில் இருப்பதாலோ என்னவோ, இவர் படித்ததும் காமர்ஸ் பாடம்தான்.

``நடிப்பு, படிப்பு... ரெண்டையும் நான் பேலன்ஸ் பண்ண உறுதுணையா இருப்பது என் குடும்பம்தான். குழந்தை நட்சத்திரமா மலையாளப் படத்தில் அறிமுகமானேன். இதுவரை மூணு மலையாளப் படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, தமிழ்ல எனக்குக் கிடைச்ச வரவேற்பு அதிகம். அதோடு, தமிழ்லதானே ஹீரோயினா அறிமுகமாகியிருக்கேன்? நான் பாலா சார் படத்துல நடிச்சதுல எங்க அப்பாவுக்கு ரொம்ப ஹாப்பி. அவர் பாலா சாரின் தீவிர ரசிகர். கதைகூடக் கேட்காம, சென்னைக்கு அனுப்பி வெச்சார்.

ஸ்வீட் சர்ப்ரைஸ்! - இவானா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலா சார் படத்துல நடிப்பது உறுதியானதும், அவர் இயக்கிய ‘பிதாமகன்’ படத்தைப் பார்த்தேன். யூடியூப்ல அவரின் பேட்டிகளைப் பார்த்தேன். பாலா சார் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பார்னு நினைச்சுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். ஆனா, அவர் கோபப்படாம நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார்'' என்கிறவரின் ஒரிஜினல் பெயர் அலினா ஷாஜி. ``சினிமாவுக்காக வேற பெயர் மாத்தணும்னு பாலா சார் சொன்னார். என் சொந்தக்காரர் ஒருத்தர்தான் ‘இவானா’னு (கடவுள் கொடுத்த வரம் என்று அர்த்தம்) பெயர் வெச்சார். இப்போ, இந்தப் பெயரே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்கிறவர், ஜோதிகாவுடனான அனுபவம் பகிர்கிறார்.

“ஜோதிகா மேடம் நடிச்ச பல படங்களை நான் பார்த்திருக்கேன். அதனால, அவங்ககூட நடிக்கப்போறதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன். சீனியர் நடிகை என்கிற பந்தா அவங்ககிட்ட இருக்காது. நான்தான் ரொம்ப பயந்துக்கிட்டே அவங்ககிட்ட பேசினேன். நிறைய பேசியிருக்கோம்.

ஸ்வீட் சர்ப்ரைஸ்! - இவானா

ஆனா... சூர்யா சாரை எனக்குப் பிடிக்கும்னு அவங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன் (சொல்லிடுங்க ஜோ மேடம்!). ஜோதிகாவைத் தவிர, நயன்தாரா, நஸ்ரியா ரெண்டு பேரும் என் ஃபேவரைட் நடிகைகள்.

ஜி.வி.பிரகாஷ் சார் மியூசிக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, ‘நாச்சியார்’ படத்துல அவரோட ஜோடியா நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. வாழ்க்கை என்பது சர்ப்ரைஸ்களின் தொகுப்புதானே?” என்று புதிர்ப் புன்னகை புரிகிற இவானாவுக்குத் தோழிகளே உலகமாம். எப்போதும் மூன்று தோழிகளுடன் உலா வருகிற இவரது வாட்ஸ்அப் முகப்புப் படத்தில்கூட அவர்களே சிரிக்கிறார்கள். தோழிகள் கூடவே இருந்தால் ஜாலி கேலி கொண்டாட்டம்தானே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism