Published:Updated:

எல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க!

எல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க!
பிரீமியம் ஸ்டோரி
எல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க!

கேமரா கவிஞர்கள் மா.பாண்டியராஜன், படம் : ஜெ.வேங்கடராஜ்

எல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க!

கேமரா கவிஞர்கள் மா.பாண்டியராஜன், படம் : ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
எல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க!
பிரீமியம் ஸ்டோரி
எல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க!

கேமராவுக்கு முன் நடிகைகளாகப் பல பெண்களைப் பார்த்திருந்தாலும், டெக்னிக்கல் டீம்களில் சில பெண்களைப் பார்ப்பதே அரிது. தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவுத் துறையில் புதிய பெண்கள் வந்திருக்கிறார்களா என விசாரித்ததில் `ஹலோ' சொன்னார்கள் பிரபல ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், நிரவ்ஷாவின் உதவியாளர்கள் யாமினி மற்றும் சரண்யா.

``விஷூவல் கம்யூனிகேஷன் முடிச்சதுக்கு அப்பறம் 9 டூ 5 ஜாப் பார்த்துட்டிருந்தேன். பார்ட் டைம் வொர்க்கா போட்டோகிராபி பண்ணினேன். ஒருகட்டத்துக்கு மேல 9 டூ 5 ஜாப் எனக்கு செட்டாகாதுனு தோணுச்சு. பி.சி.ஸ்ரீராம் சார்கிட்ட வேலைக்குச் சேரலாம்னு நான் எடுத்த படங்களை சாருக்கு அனுப்பி வெச்சேன். பி.சி சார் ஆபீஸ் வாசல்ல ரெண்டு வருஷமா நின்னு வேலை கிடைக்காதவங்களும் இருக்காங்க; ரெண்டு நாள் நின்னு வேலை கிடைச்சவங்களும் இருக்காங்க. அவர் சிபாரிசு பார்த்து யாரையும்  சேர்க்க மாட்டார். அவருக்கா தோணணும். அப்படி அவருக்கு தோணிணதும் என்னை வேலைக்குச் சேர்த்துக்கிட்டார். அக்‌ஷய் குமார் நடிச்ச `பேட்மேன்’, ஒரு தெலுங்கு, ஒரு மலையாளப் படம், இப்போ மிஷ்கின் சார் பட வேலைகள்... இப்படி ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு’’ என்று தன் அறிமுகப்படலம் முடிக்கிறார்
யாமினி.

எல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க!

``நான் விஷ்காம் படிச்சிட்டிருக்கும்போதே ஷார்ட் பிலிம், போட்டோகிராபி பண்ணிட்டிருந்தேன். சினிமா ஈவெண்ட்ஸ் போட்டோ எடுக்கப்போவேன். அந்த நேரத்தில் நிரவ்ஷா சார்கிட்ட பேசியிருக்கேன். ஊட்டியில மாஸ்டர்ஸ் படிக்கிற வாய்ப்பு வந்துச்சு. அங்கே இக்பால் முகமதுனு பெரிய போட்டோகிராபர்கிட்ட ஒன்றரை வருஷம் படிச்சேன்; ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். அதுக்கப்பறம் சினிமாட்டோகிராபிதான்னு முடிவு பண்ணி, மறுபடியும் நிரவ்ஷா சாரைப் பார்த்தேன். அப்போ அவர், ‘இந்த வேலை கஷ்டமா இருக்கும். துணைக்குப் பொண்ணுங்க இருக்க மாட்டாங்க. இதுக்கெல்லாம் ரெடியா இருந்தா வேலைக்கு சேர்ந்துக்கோ’னு சொன்னார். நான் ரெடினு சொல்லிட்டு வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். `2.0’ பட வேலைகள் பாதி முடிஞ்சிருந்த டைம்ல ஜாயின் பண்ணேன். அப்பறம் `தியா’ (கரு), ’லட்சுமி’, ’சூப்பர் டீலக்ஸ்’னு மொத்தம் நாலு படங்கள் வொர்க் பண்ணிட்டேன். இப்போ தனியா பண்ணலாம்னு கதைகள் கேட்டுட்டு இருக்கேன்’’ என்று பாசிட்டிவ் தகவல் சொல்கிறார் சரண்யா.

``எல்லாத் துறைகளிலும் சிரமங்கள் இருக்கிற மாதிரி, இந்தத் துறையிலும் சிரமங்கள் இருக்கு. இதுல கொஞ்சம் எக்ஸ்ட்ராவா இருந்தாலும், இந்தத் துறை மீதான பேஷன் அதையெல்லாம் மறக்கடிச்சிடும்’’ என்கிற யாமினியைத் தொடர்கிறார் சரண்யா.

``பெண்களுக்கு மல்டி டாஸ்க்கிங் ஒண்ணும் புதுசு இல்ல. எல்லா ஹவுஸ் ஒயிஃப்பும் மல்டி டாஸ்க்கிங்தான் பண்றாங்க. ஸோ, இயல்பாவே எங்களுக்கு அந்தத் திறமை இருக்கு’’ என்கிறார் சரண்யா.

`எங்களைப் பெண் ஒளிப்பதிவாளர்கள்னு தனியா குறிப்பிட்டு சொல்லாதீங்க. ஏன்னா, ஒளிப்பதிவு ஒரு வேலை. அதை பார்க்கிறவங்க ஒளிப்பதிவாளர்கள். அதுல ஆண் பெண் என்று பிரிச்சுப் பார்க்கக்கூடாதுனு நாங்க நினைக்கிறோம். முக்கியமா எங்களுக்குனு எந்த சலுகையும் வேண்டாம்’’ என்று தில்லாகச் சொல்கிறார்கள் இருவரும் இணைந்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism