சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
இரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்

ரு கொலையும் அதன் பின்னணியில் சிக்கும் சில மனிதர்களும் இந்த இரவின் கண்கள்.

ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத சிலர், வெவ்வேறு காரணங்களுக்காக பிளாக் மெயில் கும்பல் ஒன்றால் மிரட்டப்பட்டு பணத்தை இழக்கிறார்கள். மழை இரவு ஒன்றில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாகப் பழி தீர்க்கப் புறப்படுகிறார்கள். இதற்கிடையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறாள். கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்ன, வில்லனைப் பழிதீர்த்தார்களா இல்லையா... போன்ற கேள்விகளுக்கான விடைகளே இ.ஆ.க.

இரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்

பாக்கெட் நாவல் பாணி க்ரைம் த்ரில்லர் கதை. கணேஷ், வசந்த், சுசீலா, பரத் என பாத்திரப்பெயர்கள் எல்லாம் துப்பறிவாளன்/ளினிகள். புத்திசாலித்தனமான திரைக் கதையமைப்பில் புதுமையான மேக்கிங்கில் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் மு.மாறன்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்


கோபம், குழப்பம், விரக்தி எனக் கலவையான உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்தி யிருக்கிறார் அருள்நிதி. மகிமா நம்பியாருக்கு வழக்கமான ஹீரோயின் கேரக்டர். அட்டகாசமாக வந்திருக்க வேண்டிய அஜ்மலின் பாத்திரம்  ஏனோ அந்தப்பாத்திரத்தின் குழப்பமான பின்னணியால் பலவீனமடைகிறது. ஆனந்த்ராஜின் காமெடி கவுன்டர் சில இடங்களில் சிரிக்கவைக்கிறது. ஜான் விஜய்க்கு இன்னும் எத்தனை படத்தில்தான் இதேமாதிரியான கேரக்டரைக் கொடுப்பார்களோ, தேவுடா!

சாயா சிங், லெட்சுமி ராமகிருஷ்ணன், வித்யா பிரதீப், சுஜா வாருணி, ‘ஆடுகளம்’ நரேன்,  முருகதாஸ் எனப் படத்தின் பல கேரக்டர்கள், கொடுத்த வேலையைக் குறைவின்றி செய்திருக்கிறார்கள்.

பகல், இரவு, வெயில், மழை... அத்தனை அழகையும் கேமராவில் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர், அரவிந்த் சிங். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை த்ரில்லர் படத்திற்கு அவசியமான மனநிலையை செட் செய்ய உதவியிருக்கிறது. முன்னும் பின்னுமாக மாறி மாறிப் பயணிக்கும் கதையை தெளிவாகக் கோத்திருக்கிறார், சான் லோகேஷ்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்

க்ரைம் த்ரில்லர் கதைக்கு போலீஸ் அதிகாரிகளின் தேவை மிக முக்கியம். ஹீரோவைத் துரத்தும் வேலையைத் தவிர, காவல்துறைக்குக் கதையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. படத்தில் எல்லாமே எதிர்பாராமல்தான் நடக்கிறது. ஒரு திரைக்கதையில் இத்தனை ‘எதிர்பாராமல்’ இருந்தால் கதையின் மீதான நம்பகத்தன்மை குறைந்து போய்விடாதா? கேரக்டர்கள் எல்லோரும் நினைத்த நேரத்தில் சந்தித்துக் கொள்ளும்படி, சென்னையின் பரப்பளவையும் சுருக்கியிருக்கிறார்கள்.

பாக்கெட் நாவல் கதையாகவே இருந்தாலும் இன்னும் யதார்த்தம் சேர்த்திருந்தால் கண்கள் அபாரமாய் ஒளிவீசியிருக்கும்.

- விகடன் விமர்சனக் குழு