சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

* நடிகர் அனில் கபூரின் மகளும் பாலிவுட்டின் இளம் நடிகையுமான சோனம் கபூர், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவைக் கரம் பிடித்தார். இவர்களது திருமணம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. ஸ்ரீதேவியின் மரணத்துக்குப் பிறகு கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் சுபகாரியம் என்பதால், பாலிவுட்டே கலந்துகொண்டது. ரிசப்ஷனில் ஷாருக், சல்மான் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் பலர் ஆடிய ஆட்டம் பக்கா மாஸ்! பெரிய வீட்டு விசேஷம்!

இன்பாக்ஸ்

* ‘The Extraordinary Journey of The Fakir’ என்ற படத்தின் மூலம்  ஹாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். அடுத்த மாதம் வெளியாகவுள்ள அந்தப் படத்தை புரமோட் செய்யும் வகையில் இயக்குநர் கென் ஸ்காட் உடன் 72வது கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில்   மாரி கெட்டப்பில் கோட் சூட்டில் கலந்து கொண்டு கலக்கி இருக்கிறார் தனுஷ். சிறப்பு கருப்பு!

* ‘ஆரம்பம்’ படத்துக்குப் பிறகு சைலன்ட் மோடில் இருந்த இயக்குநர் விஷ்ணுவர்தன், கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையைப் படமாக இயக்க இருக்கிறார். கோலிவுட்டில் இல்லை, பாலிவுட்டில்.  படத்தில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவிருக்கிறார். நாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கவிருக்கிறாராம். கரண் ஜோகர் தயாரிக்கவிருக்கும் இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது. ஆரம்பம்ம்மே... அதிருதடா...

* புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள `நீரில் வாழும் வண்டு’க்கு லியானார்டோ டிகாப்ரியோவின் பெயரை சூட்டியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தனி அமைப்பை நிறுவி  20 ஆண்டுகளாக தொடர்ந்து அழிந்து வரும் உயிரினங்களை காப்பதற்காக போராடி வருபவர் லியானார்டோ டிகாப்ரியோ. இவரது இந்தச் சேவையை கௌரவிப்பதற்காகவே  புதிதாக கண்டறியப்பட்ட நீர் வண்டுக்கு `க்ரோவெல்லினஸ்  லியானார்டோ டிகேப்ரியாய்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். வாவ் ஜாக்!

இன்பாக்ஸ்

* பார்சிலோனா அணியில் 17 ஆண்டுகளாக மீட்ஃபீல்டை ஆண்ட `மாயக்காரன்’ இனியஸ்டா, இந்த சீசனுடன் பார்சிலோனாவுக்கு குட்பை சொல்கிறார். இனியஸ்டாவின் ஜாலத்தை இனி கேம்ப் நு மைதானத்தில் பார்க்க முடியாதே என்கிற சோகத்தில் இருக்கிறார்கள் கேடலன் ரசிகர்கள். எதிரணி ரசிகர்களிடம் இருந்தும் `Standing Ovation’ பெறும் இனியஸ்டாவுக்கு உருக்கமான Sendoff கொடுத்தனர் `பார்கா’ ஃபேன்ஸ். இன்ஃபைனட் இனியஸ்டா

* ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவின் படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை. இதில் சூர்யாவுடன் மோகன்லாலும் கூட்டணி போடப்போகிறார். இது கமர்ஷியலான அதிரடி ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் முடிந்ததும் இந்தப்படம் தொடங்குமாம்.  கூல் கூட்டணி

இன்பாக்ஸ்

* ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு இரண்டு கெட்அப்கள். வயதானவராக ஒரு கெட்டப்பிலும், இளைஞராக இன்னொரு கெட்டப்பிலும் தோன்றவிருக்கிறாராம் தல! ‘தீபாவளி ரிலீஸ்’ என்ற அறிவிப்புடன்தான் படத்தைத் தொடங்கினார் இயக்குநர் சிறுத்தை சிவா. இடையில் எதிர்பாராத விதமாக சினிமா வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட, இப்போது அதைச் சரிகட்டும் வகையில் பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சீறி வாங்க சிவா!

* சினிமாவில் நிலவும் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று, தியேட்டர்கள் பற்றாக்குறை. இதற்கு தீர்வு காணும்விதமாக, நடமாடும் சிறு தியேட்டரை வடிவமைத்திருக்கிறார், டெல்லியைச் சேர்ந்த சுசில் செளத்ரி. ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் 35 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை மட்டுமே. அச்சா ஐடியா