Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• சம்மர் வெக்கேஷனுக்காக காதலர் ஆண்ட்ரூவுடன் பிஜி தீவுக்குப் பறந்திருக்கிறார், நடிகை இலியானா. ‘அழகான அமைதியான இடம்’ என கேப்ஷன் கொடுத்து, பிஜி தீவில் இருந்தபடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி லைக்ஸ் அள்ளிக்கொண்டிருக்கிறார் இலியானா.

• தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ரேயாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன் ஸ்ரேயா கொடுத்த ஹாட்ரிக் வெற்றியே, இந்த வாய்ப்புக்குக் காரணம். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயாவுக்கும் விருப்பம்தானாம்!

• முதல்முறையாக சூர்யா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கவிருக்கும் இப்படம், செல்வராகவனின் ‘என்.ஜி.கே’ படத்துக்குப் பிறகு தொடங்கும் எனத் தெரிகிறது.

மிஸ்டர் மியாவ்

• சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் வாணி போஜன், விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோயினாகப் புரமோஷன் ஆகிறார். ‘என் மகன் மகிஷ்வன்’ படத்தை இயக்கிய லோகேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். படத்துக்கு ‘என் 4’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

• நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கிக்கொண்டிருக்கும் படத்திற்கு, ‘கனா’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ், அவரின் அப்பாவாக சத்யராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

• கடந்த வருடம் வெளியாகி ஆரவாரமான வரவேற்பைப் பெற்ற ‘அருவி’ படத்தின் நாயகி அதிதி பாலனுக்குப் பல வாய்ப்புகள் வந்தும் எதையும் ஏற்காமல் இருக்கிறார். ‘கதை எனக்குப் பிடித்தால் மட்டுமே நடிப்பேன்’ என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். ‘‘நல்ல கேரக்டருக்காக சில வருடங்கள் காத்திருப்பதில் தவறில்லை’’ என்பது அதிதியின் பதில்.

மிஸ்டர் மியாவ்

• ‘நடிகை கெளசல்யாவுக்குத் திருமணம்’ என சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு, ‘‘அது வதந்தி. இப்போதைக்குத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை’’ என விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், கெளசல்யா. தற்போது, ‘உத்ரா’ படத்தில் அம்மன் கேரக்டரில் நடித்திருக்கும் இவர், தொடர்ந்து சினிமாவில் நடிப்பதாக இருக்கிறார்.

ஹாட் டாபிக்

யாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராகக் களமிறங்கியிருக்கும் தயாரிப்பாளர்கள் சிலர், விஷால் பதவி விலகவேண்டும் என்று சொல்லியிருப்பதோடு, ‘‘சினிமா சங்கங்களுக்குத் தமிழர்களே தலைமை ஏற்கவேண்டும்’’ என்ற புது கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். தேர்தல்ல நிற்கும்போதே இந்தக் கோரிக்கை வைத்திருந்தா, பிரச்னை இருந்திருக்காதே பாஸ்?!

மிஸ்டர் மியாவ்

வைரல்

‘வீ
ரமாதேவி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சன்னி லியோன் சமீபத்தில் ட்விட்டரில் பதிவேற்றியிருக்கும் புகைப்படங்கள் செம வைரல். உடல் முழுவதும் தண்ணீரில் மறைந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம், கறுப்பு நிற பிகினி உடையோடு இருக்கும் புகைப்படம்... இந்த இரண்டும் லைக்ஸ் அள்ளுகின்றன.

ஹைலைட்

மீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு, ‘ஹேப்பி பர்த்டே நண்பா’ எனக் கைப்பட எழுதி, கிரிக்கெட் பேட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். தவிர, தன் பிறந்த நாளில் ரஜினிகாந்தை குடும்பத்தோடு சந்தித்தும் வாழ்த்து பெற்றிருக்கிறார் சந்தோஷ்.