Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

‘No Smoking’  படத்தின் மூலம் பாலிவுட்டையும் தாண்டி, கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அனுராக் காஷ்யப்.. பல வருடங்களாக செயின் ஸ்மோக்கர். இப்போது புகைப்பழக்கத்தை விட்டுவிட்டு ஜிம்மே கதியாகக் கிடக்கிறார். காரணம் கல்யாணம். தன் உதவி இயக்குநர் சுப்ரா ஷெட்டியோடு காதலில் இருக்கும் அனுராக், விரைவில் சுப்ராவை மணமுடிக்கப்போகிறார். அதற்குத்தான் இந்த மேக் ஓவர். வாழ்த்துகள் அனு-சுப்ரா!

இன்பாக்ஸ்

மீர்கான் நடித்த ‘டங்கல்’ படம் மூலம் புகழ்பெற்றவர்கள் `போகட் சகோதரிகள்’. கீதா, பபிதா, ரிது, சங்கீதா என்கிற இந்த நான்கு மல்யுத்த வீராங்கனைகளுக்கும் ஆசியப்போட்டிக்கான இந்திய கேம்ப்பில் கலந்துகொள்ள தடை விதித்துள்ளது இந்திய மல்யுத்த சம்மேளனம். ஒழுங்கீன நடவடிக்கைகளே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மல்யுத்த சம்மேளனம் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சிகொடுத்திருக்கிறது. கவனமா இருங்கம்மா!

இன்பாக்ஸ்

ங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு மும்பையின் டப்பாவாலாக்கள் வித்தியாசமான பரிசை வாங்கி அனுப்பியிருக் கிறார்கள். டப்பாவாலாக்கள் எல்லாம் இணைந்து ஹாரிக்கு அழகான தலைப்பாகையையும், மணமகள் மேகனுக்கு மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற பைத்தானி சேலை ஒன்றையும் வாங்கி அனுப்பி அசத்தி யிருக்கிறார்கள். இவைகளோடு தாலி ஒன்றையும் வாங்கி அனுப்பியது தான் ஹைலைட்டே. சென்டிமென்ட் முக்கியம்

இன்பாக்ஸ்

ணிரத்னத்திடம் இயக்கம் கற்கிறார் இசைப்புயல்!  இந்த ஆண்டுக்குள் பன்மொழிகளில் தயாராகவுள்ள படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இது எல்லோருக்குமான யுனிவர்சல் கதையாம். விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகவுள்ளது! இயக்கப்புயல்!

இன்பாக்ஸ்

போட்டி ஒன்றின் முடிவில் கே.எல்.ராகுலும் ஹர்திக் பாண்டியாவும் சட்டைகளைக் கழட்டி மாற்றிக் கொண்டதுதான் சென்ற வாரத்தின் ஐபிஎல் வைரல். இரண்டு அணி களுக்குமான நட்பை வெளிப் படுத்தும்படி இப்படி ShirtSwap செய்து கொள்வது கால் பந்தாட்டத்தில் ரொம்ப பிரபலம். முதன்முறையாக அதை கிரிக்கெட்டில் செய்துகாட்டி ‘நாங்க கிரவுண்ட்லதான் எனிமி... வெளியே நண்பர்கள்’ எனப் புன்னகைத்திருக்கிறார்கள் இந்த புதிய இளைஞர்கள்! கழட்ரா சட்டைய!

இன்பாக்ஸ்

டிகை சாவித்திரியின் பயோபிக் ஹிட்டடிக்கவும், அடுத்து திரைப்படமாகப் போகிறது மறைந்த நடிகை சௌந்தர்யாவின் கதை. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்த சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாறைத் தயாரிக்க முடிவு செய்தி ருக்கிறார் டோலிவுட் தயாரிப்பாளர் ராஜ் குண்டுகுரி. மறக்கமுடியாத சிந்தாமணி!

இன்பாக்ஸ்

‘நேஷனல் ஜியாகிரபிக்’ இதழின் சமீபத்திய கவர் போட்டோவை உலகமே புகழ்ந்து தள்ளுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் நம்முடைய கடல் எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும்படி உருவாக்கப்பட்டிருந்தது இந்த அட்டைப்படம். இதை வடிவமைத்த மெக்ஸிகோவைச் சேர்ந்த ஜோர்ஜ் கம்பாவோவுக்கு உலகெங்கும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன! மலைக்கவைக்குது!