பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்

ல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும்  மலையாள ரீமேக் பாஸ்கர்.

அம்மாவை இழந்த சிறுவன் தன் அப்பாவையும், அப்பாவை இழந்த சிறுமி தன் அம்மாவையும் இணைத்துவைத்து புது ரேஷன் கார்டு வாங்க திட்டம் போடுகிறார்கள். ஆனால், போட்டுவைத்த காதல் திட்டம் ஓகேவாகும் முன் பல திடுக்கிடும் திருப்பங்கள் திட்டத்தைத் தவிடுபொடியாக்கு கின்றன. இறுதியில், குழந்தைகளின் திட்டம் வெற்றியடைந்ததா, இல்லையா என்பதை காமெடியாகச் சொல்ல ரொம்பவே முயன்றிருக்கிறார்கள் பாஸ்கர் குடும்பத்தார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்எதிலும் அடாவடித்தனம் காட்டித்திரியும் கோடீஸ்வரத் தொழிலபதிராக அர்விந்த் சுவாமி. படத்தின் தலைப்பிலுள்ள `ராஸ்கல்’ எனும் வார்த்தைக்குத் தன் நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார். அடியாட்களை அடித்துப் பறக்கவிடுவது, சூரி, ரோபோ சங்கரோடு சேர்ந்து காமெடி செய்வது, ராகவனிடம் பாசத்தைக் கொட்டுவது என எல்லா ஏரியாவிலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

அமலாபால் இன்னும் நன்றாக நடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. குறிப்பாக அவருக்கும் குழந்தை நைனிகாவுக்கும் இடையேயான உறவு ஈர்க்கும்படி இல்லை. சிறுவன் ராகவனின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது, சூரி, ரோபோ ஷங்கர் செய்யும் நகைச்சுவைக் காட்சிகள் சில இடங்களில் ‘ஓகே’ ரகம். காரச்சட்னி காரமாக இருக்கும்; நாசர் நன்றாக நடித்திருக்கிறார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்

திரைக்கதை, காட்சியமைப்பு, இசை ஆகியவை பாஸ்கருக்குப் பலம் சேர்க்கவில்லை. படம் முடிந்ததற்குப் பிறகும் அரைமணி நேரம் கிளைமாக்ஸ் என்ற பெயரில் என்னென்னவோ நடக்கிறது. புளுட்டோனியம், நெப்டியூனியம் என சம்பந்தமில்லாத சமாச்சாரங்களை எல்லாம் திரைக்கதையில் அள்ளிப் போட்டு அவியல் செய்திருக்கிறார்கள். “ உங்கம்மா மாதிரி யாரும் வர முடியாதுடா...நீ பொறக்கணும்ங்கிறதுக்காக தன் உயிரையே கொடுத்தவ” என்று மாஸ்டர் ராகவனிடம் அர்விந்த் சுவாமி சொல்லும்  காட்சி போல பல காட்சிகள் இருந்திருந்தால் இன்னும் ஜீவன் இருந்திருக்கும்.

பெரியவர்களைக் குழந்தைகள் சேர்த்துவைக்கும் கதையைக் ‘குழந்தையும் தெய்வமும்’ காலத்திலிருந்தே (ஒருவேளை அதற்கும் முன்பா?) பார்த்துவிட்டதால் கதையின் அடித்தளம் ஈர்க்கவில்லை. அதுவும் மாறி, மும்பை தாதா, துப்பாக்கிச் சண்டை, தண்ணீரில் காணாமல் போகும் பெட்டி என்று  திசைமாறி, நம்மைத் திண்டாடவைக்கிறார் பாஸ்கர் என்னும் ராஸ்கல்.

- விகடன் விமர்சனக் குழு