Published:Updated:

காளி - சினிமா விமர்சனம்

காளி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
காளி - சினிமா விமர்சனம்

காளி - சினிமா விமர்சனம்

காளி - சினிமா விமர்சனம்

காளி - சினிமா விமர்சனம்

Published:Updated:
காளி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
காளி - சினிமா விமர்சனம்

தான் ஒரு தத்துப்பிள்ளை என்று தெரிந்து, தன்னைப் பெற்றவர்களைத் தேடி ஹீரோ கிளம்பும் 80-களின் கதை!

அமெரிக்காவின் மிக முக்கிய மருத்துவர் விஜய் ஆண்டனி. ‘பரத் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்’ என்ற பிரமாண்ட சாம்ராஜ்யத்திற்குச் சொந்தக்காரர். தன் உண்மையான பெற்றோர்களைத் தேடி இந்தியா வந்து இறங்குகிறார். அவரின் ரிஷிமூலத்தை ஜாதி ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில் சொல்ல முயற்சித்தி ருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி!

காளி - சினிமா விமர்சனம்

ஹீரோவாக விஜய் ஆண்டனி. டாக்டர் கேரக்டருக்கு நன்றாக பொருந்திப் போகிறார். ஆனால் ஹீரோவுக்கான மாடுலேஷன்கள்தான் நிறைய மிஸ் ஆகின்றன. சண்டைக் காட்சிகளில் கூட, ‘ஓங்கி அடிச்சா வலிக்கும் சார், மெதுவாவே அடிக்கிறேன்’ என மெல்லிய குரலில்தான் உரையாடுகிறார்.

நான்கு ஹீரோயின்கள். கொஞ்சமே கொஞ்சம் கவனம் ஈர்ப்பது ஷில்பா மஞ்சுநாத் மட்டுமே. அஞ்சலி, சுனைனா போன்றவர்களின் நடிப்புக்குத் தீனி போட கதையில் இடமேயில்லை. நாசர், வேல.ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் போன்றவர்களுக்கும் அஃதே.

முதல்பாதி முழுக்கப் படத்தைத் தூக்கி நிறுத்துவது யோகிபாபுதான். நொடிக்கு நொடி பன்ச் அடித்து நம்மைக் குலுங்கவைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு 80-களில் நடக்கும் கதையையும் இப்போது நடக்கும் கதையையும் திறம்பட பேலன்ஸ் செய்கிறது. கலை இயக்கத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

காளி - சினிமா விமர்சனம்வழக்கமாக விஜய் ஆண்டனி இசையமைக்கும் படங்களில் ஒரு பாட்டாவது எகிடுதகிடு ஹிட்டடிக்கும். இதில் ‘அரும்பே’ மட்டும் லேசாக முணுமுணுக்க வைக்கிறது.  முன்னும் பின்னுமாகப் பயணிக்கும் திரைக்கதைதான். ஆனால் எல்லா ப்ளாஷ்பேக்குகளும் ஒரேபோல முடிவது அயர்ச்சியைத் தருகிறது. ‘நமக்கு உடனே ஓ.கே சொல்ற பொண்ணு கண்டிப்பா நம்மள விட்டுட்டுப் போய்டுவா. நம்மள சுத்தவிட்டு ஓ.கே சொல்ற பொண்ணுதான் கூடவே இருப்பா’ - இந்த மாதிரியான வசனங்கள் ஒரு பெண் இயக்குநரின் படத்தில் என்பதுதான் ஷாக்!

கீழ்வெண்மணிப் படுகொலையை நினைவுபடுத்தி, கிராமத்தில் புரையோடிப் போயிருக்கும் ஜாதியக் கட்டுமானத்தை பின்னணியாக வைத்து மூன்று கோணங்களில் ஒரு கதையைப் படமாக்க நினைத்தது நல்ல முயற்சிதான். ஆனால், அரதப்பழசான கதை, அலுப்பூட்டும் காட்சியமைப்புகளால் அவர் சொல்ல வரும் சீரியஸ் விஷயங்கள் எடுபடாமல் போய்விட்டன.

80களில் நடக்கும் கதையாக இருப்பதில் தவறில்லை. ஆனால் எல்லாக் காட்சிகளுமே 80கள் சினிமா காட்சிகளாக இருப்பதுதான் ‘காளி’யின் பலவீனம்.

- விகடன் விமர்சனக் குழு