அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

வைரல்

தி
ஷா பதானி சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்துக்குக் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

‘கா
லா’ ஜூன் 7-ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ‘காலா’ படத்தின் புரொமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.தெலுங்கிலும் புரொமோஷன் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் பங்கேற்க, விரைவில் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு ரஜினி செல்கிறார்.

ஹாட் டாபிக்

ரியான வாய்ப்புகள் இல்லாததால், சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு நமீதா திருமண வாழ்க்கையில் இணைந்தார். 11 ஆண்டுகள் கழித்து டி.ராஜேந்தர் இயக்கும் படத்தில் நமீதாவுக்கு ஒரு முக்கிய கேரக்டர் கொடுக்கிறார். அரசியல் நையாண்டியாக உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

• டோலிவுட்டில் பிஸியாக இருக்கும் காஜல் அகர்வால், தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘‘15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இப்போது சர்வானந்த் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஏன் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறீர்கள் என என்னைக் கேட்கிறார்கள். நல்ல கதைதான் எனக்கு முக்கியம். பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்றெல்லாம் பார்ப்பதில்லை’’ என்கிறார் காஜல்.

• ஆர்.ஜே பாலாஜி அரசியலில் இறங்கப்போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது அவர் நடிக்கும் புதுப்படத்துக்காக செய்யப்பட்ட ‘ப்ராங்க்’ என்ற உண்மை வெளிவந்துள்ளது. ‘எல்.கே.ஜி’ எனப் பெயரிட்டிருக்கும் இந்தப் படம் அரசியலை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ஆர்.ஜே பாலாஜிக்கு அப்பாவாக நாஞ்சில் சம்பத் நடிக்கிறார். படத்தின் கதாநாயகி ப்ரியா ஆனந்த்.

• மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன் கார்த்தியை இயக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மிஸ்டர் மியாவ்

• ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘3டி’ படத்தில் அவருக்கு ஜோடியாக அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். ஆதிக் - ஜி.வி.பிரகாஷ் சேரும் இரண்டாவது படம் இது.

• ‘போக்கிரி’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பிரபுதேவாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஏ.சி.முகில் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் ஹீரோ பிரபுதேவா.

• ‘டார்லிங்’  படத்தை இயக்கிய சாம் ஆண்டன், இப்போது அதர்வாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் அதர்வாவுக்கு ஜோடி, ஹன்சிகா. படத்துக்கு ‘100’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.