Published:Updated:

``எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாட்டு மாதிரி; விஜய்க்கு இந்தப் பாட்டு!" - மாஸ்டர் ஷோபி

``எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாட்டு மாதிரி; விஜய்க்கு இந்தப் பாட்டு!" - மாஸ்டர் ஷோபி
``எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாட்டு மாதிரி; விஜய்க்கு இந்தப் பாட்டு!" - மாஸ்டர் ஷோபி

``விஜய் சாருக்கும் எனக்குமான இந்த மேஜிக் பல வருடங்களா நடக்குறதுதான். `திருப்பாச்சி' படத்துல ஆரம்பிச்சது, இப்போவரை தொடருது!"

மிழ் சினிமாவில் ஹிட் பாடல்களின் நடனத்தில் நிச்சயம் ஷோபி இருப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு டான்ஸ் கொரியேகிராஃப் பண்ணும் மாஸ்டர் ஷோபியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். ``லேட்டஸ்ட் ஹிட் `சிம்டாங்காரன்' பற்றி மட்டும் கேட்காதீங்க" என்ற கோரிக்கையோடு உரையாடலைத் தொடங்குகிறார், ஷோபி. 

``தொடர்ந்து விஜய் படங்களில் வொர்க் பண்ற மேஜிக் எப்படி?" 

``விஜய் சாருக்கும் எனக்குமான இந்த மேஜிக் பல வருடங்களா நடக்குறதுதான். `திருப்பாச்சி' படத்துல ஆரம்பிச்சது, இப்போவரை தொடருது. ஏதோ இப்போ வரக்கூடிய படங்களுக்கு மட்டுமே நான் வொர்க் பண்ணிக்கிட்டு வர்றதா பலரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. நான் உதவி நடன இயக்குநரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த காலத்திலிருந்து விஜய்கூட நட்போட இருக்கேன். சமீப காலங்களில் விஜய்கூட அதிக படங்களில் வேலை பார்த்த டான்ஸ் மாஸ்டர் நானாகத்தான் இருப்பேன்னு நினைக்கிறேன். நிறைய ஹிட் பாடல்களுக்கு நல்ல நடனத்தை விஜய் சாருக்குக் கொடுத்திருக்கேன்னு சந்தோஷம். இதுக்கெல்லாம் விஜய் சாரை இயக்கிய இயக்குநர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். ஏன்னா, என்னை நம்பி அத்தனை பெரிய பொறுப்பைக் கொடுக்கிறது, அவங்கதானே! கிட்டத்தட்ட  பதினைந்து வருடமா விஜய் சார் படங்களில் இருக்கேன்." 

``ஒரு படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைக்க நீங்க எப்படித் தயாராவீங்க?" 

``அது, நாம வொர்க் பண்ற பாடலைப் பொறுத்து மாறும். சில பாடல்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் தயாராவேன். சில பாடல்களுக்குப் பெருசா ரிகர்சல் பண்ணிட்டுப் போவேன். முக்கியமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுற ஹீரோ - ஹீரோயின், படத்துல அவங்க பண்ற கேரக்டர்... இதைப் பொறுத்துதான், அவங்களுக்கான ஸ்டெப்ஸ் இருக்கணும்னு நினைப்பேன். கொரியோகிராஃபிங்கிறது, டான்ஸ் ஸ்டெப் மட்டும் சொல்லித் தர்றதில்லை... படத்தோட அதை எப்படித் தொடர்புபடுத்துறோம்ங்கிறதுதான். முன்பெல்லாம் சில டைரக்டர்ஸ் கதையைச் சொல்லமாட்டாங்க. இப்பெல்லாம் முழுக் கதையையும் சொல்றாங்க. அதனால படத்தோட ஃபிளேவருக்குத் தகுந்தமாதிரி எங்களால வொர்க் பண்ண முடியுது." 

`` `சர்கார்' படத்துல வர்ற `சிம்டாங்காரன்' பாட்டைக் கேட்டதும், உங்க ரியாக்‌ஷன் என்னவா இருந்தது?"

``கொரியோகிராஃப் பண்றதுக்கு முன்னாடி முழுப் பாட்டையும் கேட்டேன். சில இடங்கள்ல வார்த்தைகள் புரியலை. முக்கியமா, `சிம்டாங்காரன்' வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு பாடலை எழுதுன விவேக்கிட்டேயே கேட்டேன். அவர் சொன்ன விஷயங்கள் இன்ட்ரஸ்ட்டா இருந்தது. பாட்டோட வரிகளுக்கான அர்த்தத்தைப் புரிஞ்சு அந்தப் பாட்டைக் கேட்கிறப்போ, இன்னும் நல்லா இருந்தது."

``ஒரு நடன இயக்குநரா தமிழ் சினிமாவுக்கும், மற்ற மொழி சினிமாவுக்கும் இருக்கிற வித்தியாசத்தை எப்படி உணர்றீங்க?" 

``தமிழ் சினிமாவுல டெக்னீஷியன்ஸ் ரொம்ப ஸ்ட்ராங். அவங்கதான் பெரும்பாலும் மற்ற மொழிப் படங்களுக்கும் வேலை பார்க்கிறாங்க. கிரியேட்டிவிட்டி இங்கேதான் அதிகமா இருக்கு. கதைக் களத்தைப் பொறுத்தவரையிலும் நாமதான் வலுவா இருக்கோம்னு சொல்லலாம். மலையாள சினிமா கதைகள் ரொம்ப ராவா இருக்கும். நாமதான் நல்ல கதையை கமர்ஷியலா மாத்தி எல்லோரையும் ரசிக்க வைக்கிறோம்." 

``மனைவிகூட வொர்க் பண்ண படங்களில் உங்க ஆல்டைம் ஃபேவரைட் எது?"

`` `மெர்சல்' படத்துல வர்ற, `ஆளப்போறான் தமிழன்' பாட்டுதான். எம்.ஜி.ஆர் சாருக்கு `நான் ஆணையிட்டால்' பாட்டு மாதிரி, விஜய்க்கு இந்தப் பாட்டு. கண்டிப்பா பல காலத்துக்கு இந்தப் பாட்டு அவரோட பெயரைச் சொல்லும். இந்தப் பாட்டுக்கு நானும் என் மனைவியும் ஒண்ணா வேலை பார்த்தது, ரொம்ப சந்தோஷம்." 

``டான்ஸ் மாஸ்டர்ஸ் ஹீரோ ஆகிற டிரெண்ட் இது. நீங்க எப்படி?"

``ஹீரோ ஆசையெல்லாம் எனக்கில்லை. ஆக்டிங் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, டைரக்‌ஷன் பண்ற ஆசை இருக்கு. சினிமா எனக்கு அறிமுகமான காலத்துல இருந்தே டைரக்‌ஷன் பிடிக்கும். கதை எழுதிக்கிட்டு இருக்கேன். சீக்கிரமே இயக்குநர் ஆவேன். அதுல, நிச்சயம் பெரிய ஹீரோக்கள் இருப்பாங்க." 

அடுத்த கட்டுரைக்கு