Published:Updated:

“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”

“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”

சனா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”

சனா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”

“சினிமாவில் நான் நல்ல நடிகையா வரணும்னு என்னைவிட எங்க அம்மாதான் அதிகம் ஆசைப்பட்டாங்க. அவங்க ஆசைப்பட்ட மாதிரி எல்லாம் நடந்துட்டு வருது’’ என்கிறார், ஈஸ்வரி ராவ். ‘காலா’வின் மனைவி.

“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”

“இப்பவே நான் கறுப்புதான். சின்ன வயசுல இன்னும் கறுப்பா இருப்பேன். பாட்டி வீட்டுலதான் வளர்ந்தேன். அப்பவே, நிறைய இயக்குநர்கள் என்னைப் பார்த்து நடிக்கக் கூப்பிடுவாங்க. எனக்கு ஆச்சர்யமா இருக்கும். ‘என்னடா.. நாம இவ்ளோ கறுப்பா இருக்கோம். நம்மளைத் தேடிவந்து நடிக்கக் கூப்பிடுறாங்களே’னு  இருக்கும். ஆனா, பார்க்கிறவங்க, ‘பொண்ணு களையா இருக்கு’, ‘பல்லு எடுப்பா இருக்கு’, ‘சிரிச்சா கே.ஆர்.விஜயா மாதிரியே இருக்கு’னு எல்லாம் சொல்வாங்க. இதெல்லாத்தையும் கேட்டுத்தான் எங்க அம்மாவுக்கு என்னை சினிமாவுல நடிக்க வைக்கணும்னு ஆசை வந்துச்சோ, என்னமோ...

‘கவிதை பாடும் அலைகள்’தான் என் முதல் படம். அடுத்து, ‘நாளைய தீர்ப்பு’. இது விஜய்க்கு முதல் படம். அப்பல்லாம் நாங்க கத்துக்குட்டி. எங்களுக்கு அப்போ சரியா நடிக்கத் தெரியாது. ஷூட்டிங்ல ஒரு ஓரமா நின்னு மத்த நடிகர்களோட நடிப்பைப் பார்த்துக்கிட்டு நிற்போம். எங்களைச் சுத்தி எல்லோரும் பரபரப்பா இயங்கிட்டிருப்பாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல எஸ்.ஏ.சந்திரசேகர் சார் உள்ளே வந்தாலே நான், விஜய் சார், கீர்த்தனா எல்லோரும் பயப்படுவோம். அந்த நாள்களையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்த்தாகூட அவ்ளோ சந்தோஷமா இருக்கு.

“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”

சினிமாவுக்கு நடிக்க வந்ததுக்குப் பிறகு, எனக்குள்ள ஒரு ஆசை இருந்துக்கிட்டே இருந்துச்சு. அது, பாலுமகேந்திரா சார் கையால எப்படியாவது ஒரு போட்டோவாவது எடுத்துக்கணும்ங்கிறதுதான். ஏன்னா, நிறைய சினிமா பேட்டிகளைப் படிக்கும்போது பலரும், ‘பாலுமகேந்திரா சார் கையால நாம ஒரு போட்டோ எடுத்துக்கிறதே வரம்’னு சொல்லியிருந்தாங்க.

அவர்கிட்ட ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு சொல்லி, அவரை மீட் பண்ண ஆசைப்பட்டேன். ஃபேமிலி ஃப்ரெண்ட் ஒருத்தர் மூலமா பாலுமகேந்திரா சார்கிட்ட அறிமுகம் ஆனேன். ஒரு போட்டோ எடுக்கணும்னு ஆசைப்பட்ட எனக்கு, அவர் தொடர்ந்து ரெண்டு வருடம் போட்டோ எடுத்தார். ஆமா, ‘ராமன் அப்துல்லா’ படத்துல நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருச்சு. போட்டோ எடுக்க ஆசைப்பட்ட எனக்கு, அவர் இயக்கத்துலேயே நடிச்சது, பெரிய வரம்தான்!

“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”

‘காலா’ படத்தோட வாய்ப்புகூட பாலு சார் படத்துல நடிச்சதாலதான் அமைஞ்சது. இயக்குநர் ரஞ்சித் சார், அவர் படத்துல நடிக்கிறதுக்காக, பாலுமகேந்திரா சாரோட படங்கள்ல வர்ற ஹீரோயின் சாயல்ல ஒரு பெண்ணைத் தேடிக்கிட்டு இருந்திருக்கார். அப்போதான், அவர் மைண்ட்ல நான் வந்திருக்கேன். ‘பிஸிக்கலா இப்போ எப்படி இருக்கீங்கனு பார்க்கணும், வீட்டுக்கு வரலாமா?’னு ரஞ்சித் சாரோட உதவி இயக்குநர் ஜென்னி கேட்டாங்க. 

‘வேற யாருக்காவது பண்ண வேண்டிய போன்கால் நமக்குப் பண்ணிட்டாங்களோ’னு எனக்கு ஒரு குழப்பம். ஏன்னா, சினிமாவுக்கு நான் பிரேக் விட்டு கிட்டத்தட்ட பத்து வருடத்துக்கு மேலே ஆச்சு. அப்பப்போ டிவி சீரியல்ல நடிக்கிறதையும் விட்டுட்டேன். அதனாலதான், ரஞ்சித் சார் ஆபீஸ்ல இருந்து எனக்கு அழைப்பு வந்ததும், ஆச்சர்யம்.

வீட்டுக்கு வந்து என்னை போட்டோ, வீடியோ எடுத்துட்டுப் போனாங்க. பத்து நாள் ஆச்சு, எந்தப் பதிலும் இல்லை. ஆபீஸுக்குப் போய் ரஞ்சித் சாரைப் பார்த்தேன்.  ‘கொஞ்சம் வெயிட் போடணும், ஹேர் கலர் எதுவும் யூஸ் பண்ணாதீங்க’னு பல ஆலோசனைகள் சொன்னார். ஆனா, எனக்கு என்ன ரோல்னு அவர் சொல்லவே இல்லை. 

“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”

கொஞ்சநாள் கழிச்சு, ஜென்னியும், வசனகர்த்தா மகிழ்நன் சாரும் வீட்டுக்கு வந்து வசனங்கள் கொடுத்துப் பேசச் சொன்னாங்க. வசனங்கள் திருநெல்வேலித் தமிழில் இருந்ததுனால, எப்படிப் பேசணும்னு பிராக்டிஸ் பண்ணிக்கிட்டேன். 

அப்பதான் அது ‘ரஜினி படம்’னு தெரிஞ்சது. அவ்ளோ சந்தோஷம் எனக்கு. வீட்டுல பசங்க, வீட்டுக்காரர் எல்லோரும்,  ‘நிச்சயம் ரஜினிக்கு அம்மா கேரக்டராதான் இருக்கும்’னு கலாய்ச்சுக்கிட்டு இருந்தாங்க.   

கொஞ்சநாள் கழிச்சு ரஞ்சித் சார் போன் பண்ணி, ‘நீங்கதான் ரஜினிக்கு ஜோடி. இன்னொரு ஜோடியும் அவருக்கு இருக்கு. ஆனா, நீங்கதான் அவரோட மனைவி’னு இன்னொரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

சாப்பிட்டுக்கிட்ட இருந்த எனக்கு, அதுக்குப் பிறகு சோறே  இறங்கலை. உடனே என் கணவருக்கு போன் பண்ணினேன்.  அவரும் கேஷூவலா, ‘என்ன... அம்மா கேரக்டர்தானே?’னு கேட்டார். ‘ஹலோ... ரஜினி சாருக்கு நான்தான் ஜோடி’னு சொன்னதும், அவருக்கும் சந்தோஷம் தாங்கலை.  

சினிமாவுல நான் ரீ-என்ட்ரி கொடுக்கணும்னு ஆசைப்பட்டதே என் பசங்கதான். ஏன்னா, நான் நடிச்ச எந்தப் படத்தையும் அவங்க பார்த்ததில்லை. இப்போ, ‘காலா’ படத்துல நான் நடிச்சது  என்னைவிட பசங்களுக்குத்தான் செம ஹேப்பி.  இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஆமாம்... ‘காலா’ படத்துக்குத்தான் முதல் முறையா நானே டப்பிங் பேசியிருக்கேன்.”

“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்!”

‘காலா’வைப் பற்றிப் பேசும்போது முகமெங்கும் அத்தனை பூரிப்புடன் பேசிய அவரிடம், இதற்கு முன் தமிழில் அவரது மறக்க முடியாத  அனுபவங்களைக் கேட்டேன்.

“என் வாழ்க்கையிலே பெரிய இயக்குநர்களோட படங்கள்ல நிறைய வொர்க் பண்ணியிருக்கேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்துல ஒரு காட்சியில நடிச்சிருப்பேன். மணி சார்தான், ‘நீங்க பார்க்கிறதுக்கு நந்திதா தாஸ் மாதிரியே இருக்கீங்க’னு சொல்லி, அந்தக் காட்சியில் நடிக்கவெச்சார். பாரதிராஜா சார் படத்துல நடிக்கலைனாலும், அவர்கிட்ட நான் நடிச்சுக் காட்டியிருக்கேன். அவர் படத்துல நடிக்க ஸ்கிரீன் டெஸ்ட் எல்லாம் நடந்து, கடைசியில நடிக்கமுடியாமப் போயிடுச்சு. சிவாஜி சார் தயாரிச்ச ஒரு நாடகத்துல நடிச்சிருக்கேன். அப்போ சிவாஜி சார், ‘நீ சிரிச்சா கே.ஆர்.விஜயா மாதிரி இருக்குனு சொல்றாங்களே, எங்கே சிரி பார்ப்போம்!’னு கேட்க, உடனே எனக்கு சிரிப்பு வந்திடுச்சு. ‘அட, ஆமா... அப்படித்தான் இருக்கு!’னு சொன்னார், சிவாஜி சார். இப்படிப் பல மறக்கமுடியாத நினைவுகள் இருக்கு.

கடவுள் எனக்கு நல்ல குடும்பத்தை கொடுத்திருக்கார், இப்போ நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கார். தமிழில் எனக்கு ஒரு மாஸ் ரீ-என்ட்ரி கிடைக்கப்போற சந்தோஷம், ரஜினி சார்கூட எனக்கு ஒரு பாட்டும் படத்துல இருக்கேன்னு இன்னொரு சந்தோஷம்... கடவுளுக்கு நன்றி!’’ புன்னகையுடன் முடிக்கிறார், ஈஸ்வரி ராவ்.