கடற்காற்று வீசும் செல்லனம் கிராமத்தில் வாவச்சன் மேஸ்திரி இறந்துபோகிறார். துக்க வீட்டுக்கு வரும் மனிதர்களின் மனவோட்டங்கள், வாவச்சன் பற்றிய உரையாடல்கள், மரணத்தையொட்டி நிகழும் சம்பவங்களின் திரைவடிவம்தான் `ஈ.ம.யவ்’ என்ற மலையாளத் திரைப்படம். `ஆமென்’, `அங்கமாலி டைரீஸ்’ படங்களின் வழியே கவனம் ஈர்த்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, படத்தை இயக்கியிருக்கிறார். மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், தேசிய விருது பெற்ற திரைக்கதையாசிரியருமான பி.எஃப்.மேத்யூஸ், படத்துகான கதையை எழுதியிருக்கிறார்.

வாத்துக்கறி சமைக்கச் சொல்லிவிட்டு, தன் மகன் ஈஷியுடன் குடித்துக்கொண்டிருக்கிறார் வாவச்சன். அவர் இறந்துவிட்டால், விலை உயர்ந்த சவப்பெட்டியில், பிஷப்பின் மரியாதையுடன் வெகுவிமர்சையாக அடக்கம் செய்வதாக அவருக்கு வாக்களிக்கிறான் ஈஷி. சற்று நேரத்தில் வாவச்சன் இறந்துபோகிறார். தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் மகனின் பாடுகளைச் சொல்லும் படம் இது.

ஈஷி பாத்திரத்தில் நடித்துள்ள செம்பன் வினோத் ஜோஸ் நடுத்தர, ஏழைக் குடும்பத்து மகன்களைக் கண்முன் நிறுத்துகிறார். ஈஷியின் நண்பனாக வரும் ‘அய்யப்பன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள விநாயகன், தான் ஒரு தேர்ந்த நடிகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இறப்புச் சான்றிதழ் பெறுவதற்காகக் காவல் நிலையத்துக்குச் சென்று பேசிவிட்டு, கையறுநிலையில் மழையில் நனைந்து நிற்கும் காட்சி அபாரம்! தனக்குத்தான் வெட்டுகிறோம் என தெரியாமல் குழி தோண்டும் நபர், நடக்கும் சம்பவங்களின் பார்வை யாளர்களாக சீட்டாடிக் கொண்டிருக்கும் இருவர், தன்னைத் துப்பறியும் அதிகாரி போல் உருவகித்துக்கொள்ளும் சர்ச் ஃபாதர் என ஒவ்வொரு கதாபாத்திரமும், வெவ்வேறு இயல்புகளில் வித்தியாசம் காட்டுகிறது.

துக்கவீடு துக்கத்தால் மட்டும் நிறைந்திருப்பதில்லை. இறந்தவர்கள் குறித்த நினைவுப் பகிர்வுகளையும் பாவனையான தத்துவ விசாரங்களையும் கொண்டவை என்பதைக் காட்சிகள் உணர்த்துகின்றன. துயரத்தினூடாக மெல்லிய நகைச்சுவையும் இழையோடுகிறது.

சாதாரண மக்களின் இறுதி ஆசைகூட நிறைவேற முடியாத, ஆகப்பெரும் வேதனையைப் படம் பதிவுசெய்கிறது. துக்கப்படக்கூட நேரமின்றி சதா சூழல்களின் தொந்தரவால் அயர்ச்சியடையும் ஈஷி எடுக்கும் முடிவு, எளியவர்களின் ஆற்றாமை வெளிப்பாடாகத் திரையில் விரிகிறது.

`மகேஷிண்டே பிரதிகாரம்’, `சூடானி ப்ரம் நைஜீரியா’ படங்களின் ஒளிப்பதிவாளர் சைஜீ காலித் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடற்கரை இருளையும், பெருமழையின் வாசத்தையும், துக்க வீட்டின் நிச்சலனத்தையும் கேமராவில் மிகத் துல்லியமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார். படத்தின் பாராட்டத்தக்க அம்சம், படத்தின் ஒலி வடிவமைப்பு. பின்னணி இசையில்லாத குறையைப் போக்கும்வகையில் சத்தங்களைக் கோத்திருக்கிறார் ரெங்கநாத் ரவீ. உணர்வுகளை இயல்பாகக் கடத்தி பிரமிப்பூட்டும் இந்தப் படத்தை 35 நாளில் எடுக்கத் திட்டமிட்டு, 18 நாளில் எடுத்து முடித்திருக்கிறார்கள்.

மிகச்சில கதாபாத்திரங்களைத் தவிர மற்ற அனைவருமே செல்லனம் கடற்கரைக் கிராமத்தின் அசலான முகங்கள். `ஈஷோ மரியம் யோசஃப்’ (Eesho Mariyam Yauseppe) என்பதன் சுருக்கம்தான் படத்தின் தலைப்பான ஈ.ம.யவ். குறிப்பிட்ட கிறிஸ்தவச் சமூகத்தில் மகிழ்ச்சியின்போதும் பெரும் துக்கத்தின்போதும் நம்பிக்கைக்காக இறைவனை நினைத்துச் சொல்லப்படும் வார்த்தைகள் அவை. வாவச்சன் மேஸ்திரிக்காக, கடல் அலைகளும், மழையும், செல்லனம் கடற்கரையில் அலையும் காகங்களும் அந்த வார்த்தையைச் சொல்லிச் செல்கின்றன. தெரிந்த முதியவர்களின் முகங்கள் நமக்கு நினைவில் வந்துபோகின்றன.