Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் முக்கால்வாசி முடிந்துவிட்டது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாக இருக்கிறது. தீபாவளிக்குப் படம் ரிலீஸ். இந்தப்படத்திற்குப் பிறகு   அமீர் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக போய்க்கொண்டி ருக்கிறது. சீக்கிரமே அறிவிப்பு வரும் என்கிறார்கள். அரசியல்படம்தானே?

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரிக்கெட் வீராங்கனையாக ‘கனா’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்காக சென்னையில் தீவிரமாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மைதானத்தில் ஐஸ்வர்யாவின் பயிற்சியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கிரிக்கெட் வீரர் டேவ் வாட்மோர் ஐஸ்வர்யாவை ரொம்பவே பாராட்டியதோடு சில டிப்ஸ்களும் கொடுத்தாராம்! இந்தப்படத்தை இயக்குவது பாடகர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பவர் சிவகார்த்திகேயன்! கெத்துடீம்

இன்பாக்ஸ்

மல்ஹாசனைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகிறார் விஷால். தெலுங்கில் லக்‌ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய ‘மேமு செய்த்தாம்’ நிகழ்ச்சியின் தமிழ்ப் பதிப்பைத் தொகுத்து வழங்கவுள்ளார் விஷால். சாமானியர்களின் கனவுகளை நிறைவேற்றித் தருகிற நிகழ்ச்சியாம் இது. பிக்பாஸ் போன பாதையிலே...

இன்பாக்ஸ்

‘வொண்டர் வுமன்’ படத்தில் நடித்து உலக அளவில் புதிய சென்சேஷனாக உருவெடுத்திருப்பவர் நடிகை கேல் கேடட். கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய படத்தில் நடிக்க விருக்கிறார். அமெரிக்கப் பத்திரிக்கையாளர் லிசா ஹோவர்டுக்கும், காஸ்ட்ரோவிற்குமிடையே யான உறவைச் சொல்ல விருக்கும் இப்படத்திற்கு ‘My Dearest Fidel’  எனப் பேர்வைத்திருக்கிறார்கள். புரட்சிக்காரன் காதல்!

இன்பாக்ஸ்

#HumFitTohIndiaFit #FitnessChallenge ஹாஷ்டேக்குகளில் தனது உடற்பயிற்சி வீடியோவைப் பதிவு செய்த விராட் கோலி, இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியையும் உடற்பயிற்சி வீடியோவைப் பதிவு செய்யும்படி அழைத்தார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமரும், விரைவில் வீடியோவைப் பதிவிடுவதாக ட்விட்டரில் அறிவித்தார். `தூத்துக்குடியில் இத்தனை மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அதைப்பற்றி வாயையே திறக்காமல், கோலியோடு இப்படிக் கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்களே, இது நியாயமா?’ என சமூகவலைதளங்களில் பிரதமர் மோடியை வறுத்தெடுத்துவிட்டார்கள் நெட்டிசன்ஸ். மக்கள் பார்த்துகிட்டிருக்காங்க...

இன்பாக்ஸ்

வரெஸ்ட் சிகரத்தை எந்த வயதிலும் எட்டலாம் என நிரூபித்திருக்கிறார் 53 வயதாகும் சங்கீதா சிந்தி பாகல். ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த சங்கீதா விளம்பர மாடல் மற்றும் தொழிலதிபர். மிஸ் இந்தியா போட்டியில் ஃபைனல் வரை முன்னேறியவர். சென்ற ஆண்டே எவரெஸ்டில் ஏற முயற்சி செய்து முடியாமல் பாதி வழியில் திரும்பிவிட்டவர். மனதைத் தளரவிடாமல் இந்த ஆண்டு முயற்சி செய்து வெற்றிபெற்றிருக்கிறார். இதன் மூலம் அதிக வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியப் பெண் என்கிற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். எதிர்நீச்சலடி... வென்று ஏற்று, கொடி!

இன்பாக்ஸ்

‘ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலை வைத்துப் பார்க்காதீர்கள். பத்துப் பேர் அந்த படத்தை நல்ல படம், நேர்மையான படம் என்று பேசுகிறார்களா என்பதைப்பாருங்கள், அதுதான் உண்மையான வெற்றி. இனி என் பட விளம்பரங்களில் வசூல் விபரங்களெல்லாம் போடமாட்டேன்.’ என அதிரடியாக அறிவித்திருக்கிறார் தெலுங்கு நடிகர் ராம்சரண். அவர் சமீபத்தில் நடித்து வெளியான `ரங்கஸ்தலம்’ ஆந்திரா பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் அடித்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. நல்ல முடிவு

இன்பாக்ஸ்

ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கவிருக்கிறார் `ஸ்லம்டாக் மில்லியனர்’ இயக்குநர் டேனி பாய்ல். ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் இது 25வது படம். 2006 தொடங்கி ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் டேனியல் கிரெய்க்கின் ஐந்தாவது படம். அனேகமாக இதுதான் டேனியலின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமாக இருக்கும் என்கிறார்கள். பாண்ட்...  லாஸ்ட் பாண்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism