Published:Updated:

செம - சினிமா விமர்சனம்

செம - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
செம - சினிமா விமர்சனம்

செம - சினிமா விமர்சனம்

செம - சினிமா விமர்சனம்

செம - சினிமா விமர்சனம்

Published:Updated:
செம - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
செம - சினிமா விமர்சனம்

பெண்கள் யாருக்குமே பிடிக்காத கட்டதுரைக்கு (கதாநாயகனுக்கு)  கட்டம் சரியானதா.... கல்யாணம் முடிந்ததா என்பதே `செம.’  

இன்றைய டிஜிட்டல் இந்தியாவிலும் `இன்னும் மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் நடக்கலைனா அடுத்த ஆறு வருஷத்துக்குக் கல்யாணம் நடக்காது’ என்று ஜோசியர் சொல்வதை நம்புகிறார்கள் ஜி.வி.பிரகாஷும் அவர் அம்மா சுஜாதாவும். மூன்றே மாதத்தில் திருமணத்தை முடித்துக்காட்ட ஜி.வி.பிரகாஷ் மெனக்கெட... பார்க்கும் வரன்கள் எல்லாருமே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அவரை நிராகரிக்கிறார்கள். இதனால் மனமுடைந்த சுஜாதா, 93-வது முறையாகத் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். இவர்களின் முயற்சிக்குப் பலனாக கடைசியில் ஒரு வரன் ஓ.கே ஆகிறது. எல்லாம் கைகூடிவரும் வேளையில் மறுபடியும் விதி விளையாடுகிறது. தடைகளை மீறி நாயகன் திருமணம் செய்துகொண்டாரா இல்லையா என்பதுதான் கதை.

செம - சினிமா விமர்சனம்

பஸ் டிக்கெட்டில் எழுதிவிட முடிகிற கதையைப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் வள்ளிகாந்த்.

‘என்னோட சுயசரிதை பாட்டுப்புத்தகம் மாதிரி சின்னதா இருக்கக்கூடாது. பாடப்புத்தகம் மாதிரி பெருசா இருக்கணும் மச்சான்!’ எனக் கனவுகளோடு வளையவரும் பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ். பாடி லாங்குவேஜில் செமயாக அலட்டியிருக்கிறார். ஆனால்,  நடிப்பில் மட்டும் பார்டரில் பாஸ் மார்க்.

புதுமுக ஹீரோயின் அர்த்தனா பினு, அர்த்தமுள்ள புதுவரவு. விதவிதமான முகபாவனைகளில் மனதை அள்ளுகிறது கேரளத்துப் பைங்கிளி. படத்தில் ‘செம’ போட வைக்கும் ஏரியாவை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார் யோகி பாபு.  ஜி.வியின் அம்மாவாக வரும் சுஜாதா நல்ல தேர்வு. பாசம் காட்டும்போதும், பொசுக்கென மனமுடைந்து தற்கொலைக்கு முயலும்போதும் கிராமத்து அம்மாக்களைக் கச்சிதமாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம - சினிமா விமர்சனம்மன்சூர் அலிகான், கோவை சரளா ஜோடி செய்யும் காமெடி இரண்டாம் பாதியில் சிரிப்பை வரவழைக்கிறது. வசனம்... `பசங்க’ பாண்டிராஜாம்!  `அஷ்டமி நவமி கெட்ட நாள்தான். ஆனா, அன்னைக்கும் நல்ல நேரம்னு ஒண்ணு இருக்குல்ல’ என்று கவனிக்க வைக்கிறார்.

விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷின் இசையும் லோ பட்ஜெட் படத்தையும் ‘செம’ படமாக காட்ட முயற்சி செய்திருக்கின்றன.  இரண்டாம் பாதி முழுக்க நம்பகத்தன்மை இல்லாமலே கடக்கிறது. எண்ட் கார்டு போடும்போது உண்மைக் கதை என்று சொல்லி நிஜமான நாயகன்  நாயகியைக் காட்டியிருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்த  உண்மைக் கதையை இன்னும் சிரிப்போடும், மனசுக்கு நெருக்கமான காட்சிகளோடும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம்.

டைட்டிலில் இருந்தது, படத்தில் இல்லையே பாஸ்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism