Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/sundartsp: எடப்பாடி பேட்டியைக் கூர்ந்து கவனித்தால், ``நான் முதலமைச்சரா டூட்டி மட்டும்தான் பார்க்கிறேன்’’ என்று தைரியமாகக் கூறிவிட்டார்.

twitter.com/mekalapugazh:
கடவுள் தண்டிப்பார்னு நல்லவன் நம்புறான்...

கடவுளை ஏமாத்திடலாம்னு வல்லவன் நம்புறான்!

twitter.com/indupriya911: இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டி ருப்பது இணையம் மட்டுமே; பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை அல்ல!

twitter.com/Kozhiyaar: திருமண வீட்டில் வயிறுமுட்ட சைவச் சாப்பாடு சாப்பிட்டுத் திரும்பும்போது, வீட்டில் மட்டன் பிரியாணி செய்து வைத்திருப் பதெல்லாம் வன்கொடுமையிலேயே சேரும்!

twitter.com/manipmp: பெண்களை நம்பி நகைக்கடைகளும், ஆண்களை நம்பி அடகுக்கடைகளும் திறக்கப் படுகின்றன.

வலைபாயுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

twitter.com/HAJAMYDEENNKS: ``நிபா வைரஸைக் கட்டுப்படுத்த, வெளவால்களுக்கு வாய்ப்பூட்டுப் போடும் திட்டம் தமிழகத்தில் அமல் படுத்தப்படும்’’ - செல்லூர் ராஜு

twitter.com/skpkaruna: ராயுடு அடிக்கலைன்னா வாட்சன் அடிக்கிறான்.

வாட்சன் அடிக்கலைன்னா டூப்ளெஸ்ஸி அடிக்கிறான்.

டூப்ளெஸ்ஸி அடிக்கலைன்னா ரெய்னா அடிக்கிறான்.

ப்ராவோ, பில்லிங்ஸ், சஹார் எல்லோரும் அடிக்கிறானுங்க.

எவனுமே அடிக்கலைன்னா படுபாவி தோனி அடிக்கிறான்.

என்னதாண்டா பண்ணுவாங்க எதிர் டீம்?!

#CSKTheChampions

வலைபாயுதே

twitter.com/ansari_mas than:  ஹாஸ்பிட்டல்ல குண்டடிபட்ட பையன் வேதனையிலும் சிரித்தபடி கேட்கிறான்,

``நாங்க கம்பெனியை எதிர்த்துதானே போராடினோம். கவர்மென்ட்டை எதிர்த்தாப் போராடினோம்... எதுக்கு எங்களைச் சுடணும்?’’

twitter.com/arumugamsony: கண் முன்னால் நடக்கும் ஸ்டெர்லைட் போராட்டத்தையே நக்கல்பண்ற கும்பல், சுதந்திரப் போராட்டத்தின்போது என்ன பண்ணிட்டு இருந்திருக்கும்?

twitter.com/thoatta:  ஸ்டெர்லைட்டுக்கு மின்சாரத்தை கட் பண்ணிட்டாராம். அடுத்து வாட்டர் சப்ளை கட் பண்ணுவார் போல. அதற்கடுத்து கதவுக்குப் பூட்டு போடுவார்னு நினைக்கிறேன். இவர் முதலமைச்சரா... இல்ல ஹவுஸ் ஓனரா..?

twitter.com/karunaiimaLar: Instagram is a Good entertainer. ஆனா, அது பணக்காரங்க வீட்டுக்குள்ள போன மாதிரி ஒரு ஃபீல். வீட்டோட அழகை ஓரமா நின்னு ரசிச்சு வேடிக்கை மட்டும் பார்த்துட்டு வந்துடணும்.

twitter.com/manipmp: இனி வீதியில் கத்துவதைவிட விராட் கோலியிடம் சொல்லி சேலஞ்ச் செய்யவைக்கலாம்!

வலைபாயுதே

twitter.com/CreativeTwitz: `நீ முன்ன மாதிரி இல்லை’ என்பதற்கு `நீ எனக்குச் சாதகமா இல்லை’ என்றும் அர்த்தம் உண்டு.

twitter.com/withkaran: அம்மா ஆடியோவுக்குப் பதிலா நிர்மலா தேவி ஆடியோ ஒண்ணை விட்டிருந்தா மொத்தமா டைவர்ட் பண்ணியிருக்கலாம்.

twitter.com/manipmp: கடைசி நொடி வரை பதற்றத்துடனும் சுவாரஸ்யத்து டனும் வைத்திருப்பவை, ஏ.டி.எம் மெஷினும் வெயிட் மெஷினும்.

twitter.com/mekalapugazh: அரசியல் வாதிகளில் தேடாதீர்... பொதுமக்களில்கூட காமராஜரும் கக்கனும் இப்போது யாரும் இலர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism